04 March, 2013

இதை அவள் தெரிந்துக்கொள்வாளோ...



தானியங்கள் தேடிஎடுத்து
அலகுநிரப்பி திரும்பிய
இணைபுறாவோடு...


கொஞ்சிக்கொண்டிருந்தது
அதன் ஜோடி புறா...!


ன்றின் அலகால்
இன்னொன்றின் அலகைகோதி
ஈரம் துவட்டி அமர்ந்திருந்தது...


மழைக்கு ஒதுங்கிய
ஜோடிக் காக்கைகள்...!


ந்தி சாய்கையில்
தன் ஒற்றைக்கால் தவத்தை
முடித்துக்கொண்டு


கூட்டைத்தேடி பறந்தது

ஒரு கொக்கு குடும்பம்...!

தனைப் தனி‌யே நின்று
 பார்த்துப் பார்த்து 

வலிக்கிறது அவளது பிரிவு...!

வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

8 comments:

  1. //*
    இதனைப் தனி‌யே நின்று
    பார்த்துப் பார்த்து
    வலிக்கிறது அவளது பிரிவு...!
    *//

    :(

    ReplyDelete
  2. காதலின் பிரிவை அழகாக சொல்லியுல்லிர்கள்

    ReplyDelete
  3. பிரிதலின் வலியை அழகாகச் சொல்லியிருக்கும் கவிதை! அருமை!

    ReplyDelete
  4. அன்பின் சௌந்தர் - பிரிதல் என்பது கொடுமை - அதுவும் இணைகளைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டு தனிமரமாக நிற்பது அதிலும் கொடுமை. - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!