24 March, 2013

கழுதைகளுக்குத்தான் புகையிலை பிடிக்குமா...?


அரசவைக் கவிஞர் பீர்பாலுக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்தது. அதை அமைச்சர் ஒருவர் அறவே வெறுத்தார்.

ஒரு சமயம் அக்பர் நமது அமைச்சர்களுடனும், பீர்பாலுடனும் உலாவச் ‌சென்றார்.
 
அப்போது வழியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கழுதை ஒரு புகையிலைச் செடியைப் பார்த்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டு அப்பால் சென்றது.
 
குறிப்பிட்ட அமைச்சர் அதனை பீர்பாலுக்கு சுட்டிக்காட்டி, அந்த கழுதையைப் பாருங்கள், அதுகூட புகையிலைச் செடியையே வெறுக்கிறது என்று கேலி பேசினார்.

பீர்பாலோ அடக்கமான குரலில் உண்மைதான் அமைச்சரே! கழுதைகளுக்கு எப்போதுமே புகையிலையைக் கண்டால் பிடிப்பதில்லைதான் என்றார்.

11 comments:

  1. மன்னரை கழுதை ஆக்கிவிட்டார் பீர்பால்

    ReplyDelete
  2. பீர்பாலின் சமயோசித புத்தி...!?!

    ReplyDelete
  3. கழுதைகளுக்கு எப்போதுமே புகையிலையைக் கண்டால் பிடிப்பதில்லையா, அல்லது புகையிலையைக் கண்டால் பிடிக்காதவர்கள் அனைவருமே கழுதைகளா? என சிந்திக்க வைக்கும், புத்திசாலித்தனமான பதில், பீர்பால் சொன்னது.

    சமயோசிய புத்தியுடைவர், பீர்பால்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete


  4. புத்திசாலியின் பதில் இப்படித்தான் இருக்கும்!

    ReplyDelete
  5. அருமையான பதிலை சொல்லி வாயடைக்க வைத்து விட்டார் பீர்பால்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. ஹ... ஹா.... ஹா....

    சமயோகிதம்...

    ReplyDelete
  7. புத்திசாலியின் பதில் அல்லவா

    ReplyDelete
  8. ஹா ஹா ......அப்பவே அப்படி

    ReplyDelete
  9. அன்பின் சௌந்தர் - பீர்பாலின் பதில் அருமை. நகைச்சுவையின் உச்சம் - அதே நேரத்தில் சரியான பதில் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  10. பீர்பாலின் சமயோசிதமே சமயோசிதம்! நல்ல கதை!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!