23 March, 2013

வடிவேலு நடிக்கும் புதிய படம்... இதையாவது நம்பலாமா..?


கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளது. வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படமும் இதில் அடங்கும்.

தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது ஏஜிஎஸ். இந்த நிறுவனம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஆனால் மாற்றான் படத்தின் சறுக்கல் காரணமாக, சில மாதங்கள் புதிய படம் அறிவிக்கவில்லை.

இப்போது ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளார் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டிருப்பதாவது:

கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் :

வடிவேலு நடிக்க, யுவராஜ் இயக்கும் படத்துக்கு கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார்.

சந்துரு இயக்கத்தில் முழுநீள காமெடி படமாக உருவாகிறது சரஸ்வதி சபதம். ஜெய், விடிவி கணேஷ், மனோபாலா நடிக்கின்றனர்.

அடுத்து ஜெயம் ராஜா - ஜெயம் ரவியுடன் மீண்டும் கூட்டணி சேர்கிறோம்.

அதர்வா முரளி நடிக்கும் ஒரு விறுவிறுப்பான படமும் தயாராகிறது. புதுமுக இயக்குநர் யுவராஜ் இயக்குகிறார்.

ஆறாவதாக, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து ஒரு புதிய படம் செய்கிறோம். இதில் ஹீரோ கார்த்திக் கவுதம்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு பெரிய பட்ஜெட் படமும் தயாராகிறது. அதன் விவரம் இப்போது சொல்வதற்கில்லை," என்று தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. வரட்டும்... பார்க்கலாம்...

    காலையும் உங்கள் தளம் வரமுடியவில்லை... காரணம் udanz திரட்டி & லோகோ...

    உங்கள் மெயிலில் பார்த்திருந்தால் தெரிந்திருக்கலாம்...

    நன்றி...

    ReplyDelete

  2. இது உண்மையாக இருக்கவே வேண்டுவோம் ...மிகச்சிறந்த காமெடி நடிகர்...பாவம் தவறான வழியைத் தேர்ந்தெடுத்ததால் இந்த வினை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!