30 April, 2013

மன்னிப்பின் மகத்துவத்தை எரித்தோம்...!



ல்லாத் தவறுகளுக்கும்
கடைசித் தீர்ப்பாய் இருப்பது
மன்னிப்பே...!


தவறுகளின் தன்மையும், அளவுகளும் 

வேறுப்படுகின்றன
ஆனால் மன்னிப்புகள் ஒன்றே...!

மன்னிப்பளித்து மன்னிப்பளித்து
தினம் தினம் தவறுகளை 

நியாயப்படுத்தி விடுகிறோம்...!

மன்னிப்புகளுக்கு பஞ்சமில்லை இங்கு
அதனால் தான்
தவறுகள் தவறாமல் நடக்கிறது...!


தற்போது இங்கு
“மன்னிப்பு“ தவறாகிவிட்டது
தவறுகளை மன்னித்தே...!



6 comments:

  1. நல்ல தத்துவம்...

    /// தினம் தினம் தவறுகளை
    நியாயப்படுத்தி விடுகிறோம்...!
    தவறுகள் தவறால் நடக்கிறது...! ///

    உண்மை...! எப்படீங்க இப்படி...? வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதும் ஒரு வகையில்
    உண்மை தான் கவிதை வீதி.

    ஆனால்.... சில நேரங்களில் வேறு வழியில்லாமல்
    மன்னிக்கவேண்டி போய்விடுகிறதே...

    இருந்தாலும் வடு மறைவதில்லை.

    ReplyDelete
  3. //மன்னிப்புகளுக்கு பஞ்சமில்லை இங்கு
    அதனால் தான்
    தவறுகள் தவறால் நடக்கிறது...!
    ///
    தவராலா அல்லது தவராமலா ???

    ReplyDelete
  4. உண்மையான உண்மை நண்பரே...

    ReplyDelete


  5. மன்னிப்பளித்து மன்னிப்பளித்து
    தினம் தினம் தவறுகளை
    நியாயப்படுத்தி விடுகிறோம்...!

    சிலநேரம் இது தேவை என்றும், சிலநேரம் இது தேவை இல்லை என்றும் தோன்றுகிறது!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!