29 April, 2013

விஜய்-க்கு அதிர்ச்சி கொடுத்த அஜீத்... பரபரப்பில் தலைவா படக்குழு...

விஜய்யின் தலைவா படப்பிடிப்பு அஜீத் குமார் திடீர் என்று வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தின் படிப்பிடிப்பு மும்பையில் நடந்தது. 
 
அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது தலைவா படப்பிடிப்பு முடிந்துள்ளது. 
 
மும்பையில் தலைவா படப்பிடிப்பு நடந்தபோது அஜீத்தின் வலை படப்பிடிப்பும் நடந்தது. அப்போது நடந்த சுவாரஸ்யமான நிகழச்சி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
 

விஜய்யின் தலைவா படப்பிடிப்பு தன் படப்பிடிப்புக்கு அருகில் நடப்பதை அறிந்த அஜீத் குமார் அங்கு திடீர் விசிட் அடித்துள்ளார். திடீர் என்று அஜீத் வந்தது விஜய் உள்பட மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.

அஜீத் விஜய்யுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.

தலைவா படத்தில் விஜய் பாடியுள்ள பாடலை கேட்டுள்ளார் அஜீத். பாட்டை கேட்டு முடித்ததும் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் உங்கள் பாடலும் ஒன்று என்று தளபதியிடம் தெரிவித்துவிட்டு கிளம்பியுள்ளார்.

4 comments:

  1. தல அந்த பாட்டை பற்றி கூறியது நக்கலாக இருக்குமோ? சும்மா கேட்டேன். தலக்கு எப்போதுமே பெரிய மனதுதான்

    ReplyDelete
  2. நடிகர்களுக்கு ஏன் தான் அனைவரும் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் என்று தெரியவில்லை?

    ReplyDelete
  3. இது ஓர் ஆரோக்கியமான நடைமுறை! இப்படித்தான் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  4. தங்களைப் போலவே தங்கள் ரசிகர்களையும் நட்புடன் பழக விட வேண்டும்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!