26 April, 2013

யாருடா மகேஷ், ஒருவர் மீது இருவர் சாய்ந்து, நான் ராஜாவாகப் போகிறேன் / 26-04-2013 படங்கள் ஒரு அலசல்

யாருடா மகேஷ்தான் படத்தின் பெயர். சமீபமாக இளம் இயக்குனர்கள் வழக்கமான திரைக்கதை அமைப்பை விடுத்து புதிதாக முயற்சி செய்கிறார்கள். யாருடா மகேஷின் ட்ரெய்லரைப் பார்த்தால் இதுவும் அப்படியொரு முயற்சி போலதான் தெரிகிறது.


சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு யாருடா மகேஷின் ட்ரெய்லர்தான் யு டியூபில் ஹிட். செம ரகளை. ஆண்டனி நவாஸ், ஆர்.மதன் குமார், சத்திய நாராணயன் என்று மூன்று பேர் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதில் ஆர். மதன் குமார்தான் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமும். கோபி சுந்தர் இசை.

சிவா என்பவன் மகேஷை தேடிச் செல்வதுதான் படத்தின் ஒன் லைன். ரொமாண்டிக் காமெடியாக உருவாக்கியிருக்கிறார்கள். கன்னடத்தில் நடித்து வரும் சந்தீப் கிஷன் ஹீரோ. ஹீரோயின் டிம்பிள். இவர்கள் தவிர நண்டு ஜெகன், லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், ஸ்ரீநாத், சுவாமிநாதன், சிங்கமுத்து ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆர். மதன் குமார் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டனின் முன்னாள் உதவியாளராம். ஆனால் குருவைப் போல சொதப்பலாக இல்லாமல் நன்றாக இயக்கியிருப்பதாக கேள்வி.


நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியிருக்கிறார். கலர் பிரேம்ஸும், ரெட் ஸ்டுடியோஸும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. நாளை வெளியாகும் படம் நான்தாண்டா மகேஷ் என்று சொல்லிக் கொள்கிற வெற்றியை பெறுமா?

***************************
 
விஜய் நடித்து ஹிட்டான 'லவ் டுடே' மாதவனின் 'ஆர்யா' போன்ற படங்களை இயக்கிய பாலசேகரன் புதிதாக 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' என்ற படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ஆட்ரியா டெக் பிலிம்ஸ் சார்பில் நாராயணராஜு தயாரிக்கிறார்.

இதில் நாயகனாக லகுபரன், நாயகியாக சுவாதி நடிக்கின்றனர். இவர்கள் 'ராட்டினம்' படத்தில் அறிமுகமானவர்கள். இன்னொரு நாயகியாக சான்யதாரா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் பாக்யராஜும், கவுரவத் தோற்றத்தில் விசுவும் வருகின்றனர். மாஸ்டர் பரத், சிங்கம் புலி, ராஜ்கபூர், ஆர்த்தி, பரவை முனியம்மா, பாண்டு, சின்னி ஜெயந்த், அரவிந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.

காதல், காமெடி படமாக தயாராகிறது. இரு பெண்களை பற்றிய முக்கோண காதல் கதை சினிமாவில் நிறைய காதல் படங்கள் வந்துள்ளன. யாரும் சொல்லாத விஷயம் படத்தில் இருக்கும். இளமை கலந்த கலர்புல் படமாக வந்துள்ளது.

சென்னை, பழனி, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.

இசை: ஷிவா, ஒளிப்பதிவு: விஜயகோபால், எடிட்டிங்: வி.டி.விஜயன்.
************************************


குலுமனாலியில் ஆரம்பித்து சென்னையில் முடியும் கதை

நகுல் கதாநாயனாக நடித்து, பிருத்வி ராஜ்குமார் கதை–திரைக்கதை–டைரக்ஷனில் வளர்ந்துள்ள ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படம், ஒரு பயண கதை.

‘‘ஒரு இளைஞன் தன் வாழ்க்கையில் நடக்கிற பிரச்சினைகளின் உண்மையை தெரிந்து கொள்வதற்காக, ஊர் ஊராக பயணப்படுகிறான். கதை குலுமனாலியில் ஆரம்பித்து, போபால் வழியாக, சென்னையில் முடிகிறது’’ என்கிறார், டைரக்டர் பிருத்வி ராஜ்குமார்.

நகுலுடன் நிஷாந்த், கவுரவ், மணிவண்ணன், மைசூர் சுரேஷ், ஏ.வெங்கடேஷ், ஜெயசிம்மா, ‘வழக்கு எண்’ முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி, கிரேன் மனோகர், மூணாறு ரமேஷ், சாந்தினி, அவனி மோடி, கஸ்தூரி, சீதா, ஆர்த்தி, வனிதா விஜயகுமார், ஜானகி, செந்தி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

உதயம் வி எல் எஸ் சினி மீடியா சார்பில் கே.தனசேகர், வி.சந்திரன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். இணை தயாரிப்பு: என்.வி.டி.தேவராஜ். படத்தின் வசனத்தை வெற்றி மாறன் எழுதியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ். பாடல் காட்சிகளை கோவாவில் படமாக்கியிருக்கிறார்கள். படம், அடுத்த மாதம் (ஜனவரி) திரைக்கு வர இருக்கிறது.

காதலியை காப்பாற்ற போராடும் காதலனின் கதை

நகுல் கதாநாயகனாக நடித்துள்ள ‘நான் ராஜாவாகப் போகிறேன்,’ காதலியை காப்பாற்ற போராடும் காதலனின் கதை. சமூக சேவையில் அக்கறை உள்ள கதாநாயகி ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதில் இருந்து அவரை காப்பாற்ற கதாநாயகன் போராடுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

நிஷாந்த், கவுரவ், மணிவண்ணன், சுரேஷ், ஏ.வெங்கடேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி கிரேன் மனோகர், சீதா, சாந்தினி, அவனி மோடி, ஸெரின் கான், கஸ்தூரி, ஆர்த்தி, வனிதா விஜயகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இவர்களில் கஸ்தூரி கல்லூரி பேராசிரியையாகவும், வனிதா விஜயகுமார் மனநோய்க்கான டாக்டராகவும் வருகிறார்கள். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, கதை–திரைக்கதை–டைரக்ஷன்: பிருத்வி ராஜ்குமார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கே.தனசேகர், வி.சந்திரன் ஆகிய இருவரும் தயாரிக்க, இணை தயாரிப்பு: என்.வி.டி.தேவராஜ். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

4 comments:

  1. இனி வரவிருக்கும் வெள்ளித்திரைகள் பற்றிய
    தகவல் சேகரிப்பும் அதை எழுதிய விதமும் அருமை...
    எத்தனையோ படங்கள் வந்து போகின்றன..
    மனதில் நிற்பவை சில தானே...
    பார்ப்போம் இந்தப் படங்களில் ஏதாவது ஒன்று நிற்கப்போகிறதா என்று..

    ReplyDelete
  2. படங்கள் பார்க்காத(எல்லா ) என்னை போன்றவர்களுக்கு தகவலாவது கிடைத்துதே நன்றி நானும் இதை பற்றி யாரவது சொன்னால் இரண்டு சொல்ல வசதி

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!