15 April, 2013

பவர் ஸ்டார், ராமராஜன் மற்றும் பார்த்திபனை விஞ்சிய சோலார் ஸ்டார்

 

எப்படிப்பா இப்படி... என்று அத்தனை பேரும் வியக்கும் வகையில், திருமதி தமிழ் படத்துக்கான விளம்பரங்களில் பட்டையைக் கலக்கி வருகின்றனர் தேவயானியும், அவரது ஹீரோ கணவர் ராஜகுமாரனும். தேவயானியும், ராஜகுமாரனும் இணைந்து நடித்துக் கலக்கியுள்ள முதல் படம்தான் இந்த திருமதி தமிழ். 

ராஜகுமாரன்தான் இதில் அதிரடி ஹீரோ. கெளபாய் தொப்பி, இறுக்கக் கட்டிய பேன்ட், முகத்தோடு ஒட்டிய கருப்புக் கண்ணாடி, பெயிண்ட் செய்யப்பட்ட அழகு முகம் என அசத்தலாக காட்சி தருகிறார் ராஜகுமாரன்.

அதிரடி ஸ்டில்கள் வெளியீடு சமீபத்தில்தான் இந்தப் படத்தின் அதிரடி ஸ்டில்களை வெளியிட்டனர். அதில் ராஜகுமாரன் கொடுத்த போஸ்களைப் பார்த்து அத்தனை பேரும் அசந்து போய் விட்டனர்.
ராமராஜனையும் தாண்டி ராமராஜனுக்குப் பிறகு அவர் போல ஒரு ஹீரோவும் வந்ததில்லை. அந்தக் குறையைப் போக்க வராது வந்த மாமணி போல காட்சி தருகிறார் ராஜகுமாரன் என்பதுதான் அனைவரின் டாக்காக உள்ளது.



இப்ப இப்படி ஒரு விளம்பரம் தற்போது புத்தம் புதிதாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர் ராஜகுமாரன்-தேவயானி தம்பதியினர். அதாவது ராஜகுமாரனுக்கு யாராச்சும் பட்டம் தாங்களேன் என்ற வேண்டுகோளுடன் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், உலக நாயகன் மாதிரி... அதுகுறித்த விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பதாவது... யாராவது ஏதாவது பட்டம் கொடுத்தா நல்லா இருக்கும் போட்டுக்கலாம். பின் குறிப்பு - சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், உலக நாயகன் .. இது மாதிரி. 







 











இப்படி பார்த்திபனையும் விஞ்சிய நிலையில் ஒவ்வொறு நாலும் ஒவ்வொறு டயலாக் போட்டு தன்னுடைய படத்தின் போஸ்டர்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.

மொக்கையாக இருந்தாலும் ரசிக்கும் படிதான் இருக்கிறது.

7 comments:

  1. நல்ல விளம்பரம்...

    இவ்வளவையும் தொகுத்த தங்களுக்கு என்ன பட்டம் தரலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. நல்லதா பார்த்து வேல்டு பேமஸ் ஆகர மாதிரி தாஙக தலைவரே....


      Delete
  2. என்னுடை DVD collections-க்கு இந்தப் படம் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப லேட்டுங்க....


      நீங்க 3 வருஷத்துக்கு முன்னாடியே புக்பண்ணியிருக்கனும்....

      இருந்தாலும் எதுக்கும் ஒரு முறை ட்ரைபண்ணிபாருங்க...

      Delete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!