17 April, 2013

நான் ரொம்ப கோபக்காரன் - சரத்குமாரின் அதிரடி...


இயக்குனர் ராஜேஷ் ஆல்ஃப்ரெட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சுற்றுலா’. இன்று (17.04.13) காலை நடந்த இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.பி.சௌத்ரி, சரத்குமார் உள்ளிட்ட திரையுலக முக்கிய நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர்.





சுற்றுலா திரைபப்டத்தின் ஹீரோவான மிதுன் சரத்குமாரின் ‘சமத்துவ மக்கள் கட்சி’யின் பொதுச் செயலாளர் நடராஜனின் மகன் என்பதால் சரத்குமார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் உற்சாகத்துடன் பேசினார். விழாவில் பேசிய சரத்குமார் “ சுற்றுலா திரைப்படத்தில் புதுமுக நடிகர் மிதுன் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு பல புதுமுக நடிகர்கள் வந்த வண்ணம் இருப்பது கோலிவுட்டை வளர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆனால் அவர்கள் எல்லாரும் நடிகர் சங்கத்தில் மெம்பராக இருக்கிறார்களா என்பதே எனக்கு கவலையான விஷயம். நான் ரொம்ப கோபக்காரன், நல்ல உள்ளம் இல்லாதவன் என்று பேசப்படுகிறது. மற்றவர் நினைப்பது போல் நான் கோபக்காரன் கிடையாது.

மேலும் நல்லதை மட்டுமே நினைக்கக் கூடியவன். இந்த படத்தில் பழி வாங்குதல் தான் கதைக்கரு என்றார்கள். என் நெஞ்சில் பழிவாங்கும் எண்ணமே வராது. அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக, ஒன்றாக, சிறப்பாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சமத்துவத் தலைவனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்.

6 comments:

  1. சமத்துவத் தலைவன்...?!! - இது சூப்பர்...

    ReplyDelete
  2. அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக, ஒன்றாக, சிறப்பாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சமத்துவத் தலைவனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்// ரைட்டு..

    ReplyDelete
  3. அம்மா பக்கம் இருக்கும்போதி தெரிஞ்சு போச்சே. அப்புறம் எப்படி கோவக்காரரா இருக்க முடியும் பாவம் ஏதாவது சொல்லிட்டு போவட்டும்.

    ReplyDelete
  4. எந்தா சாரே!சினிமா நியூசா போட்டு கலக்கறீங்க!

    ReplyDelete
  5. சமத்துவமாகவே இருக்கட்டும்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!