02 April, 2013

பொய்... பொய்யை தவிர வேறெதுவும் இல்லை...!



ம்பும்படியான பொய்களையே
வடிவமைக்க வேண்டியிருக்கிறது...


அவளை சந்திக்க கிளம்பும்போது
எங்கே...? என கேட்கும் 

என் நண்பர்களுக்கு...!
 

அவளை சந்தித்துவிட்டு 
திரும்பும்போதும்
பொய்களையே உதிர்க்கிறேன்...
 

எங்கிருந்து வருகிறாய்
என்ற கேள்வி கனைகளுக்கு...!

பொய்களை அசைபோட்டு...
பொய்களை விழுங்கி...

 உயிர் வாழ வேண்டியிருக்கிறது
காதல் காலங்களில்..!

பொய்களை கொண்டு 
கவிதை எழுதி 
பாராட்டு பெறலாம்
உதடுகளை என்ன செய்வது..?


என்ன ‌செய்ய 

நம் தேசத்தில் காதலை வளர்க்க
பொய்யே சரியாயிருக்கிறது...



நன்றி..!

5 comments:

  1. பொய் தானே காதலுக்கு அழகு...?!

    அது சரி... ஒரு சந்தேகம்... வெயில் அதிகம் என்பதால் தலைப்பு இப்படியோ...? :-

    /// பெய்... பெய்யை தவிர வேறெதுவும் இல்லை...! ///

    ReplyDelete
  2. கவிதைக்கு பொய் அழ்கு
    கதலுக்கும் பொய் அழகுதான்.

    ReplyDelete


  3. பொய்மையும் வாயமை இடத்த காதலில்!

    ReplyDelete
  4. பொய் பெய்யும் காதல்..!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!