02 April, 2013

நடிகர்கள் உண்ணாவிரதம்! புறக்கணித்த விஜய்..! உண்மை பிண்ணனி...!


சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் முக்கிய நடிகர்களும் கலந்து கொண்டனர். ஆப்சென்டான சிலரைப் பற்றி உண்ணாவிரதம் இருந்த சிலரிடையே முணுமுணுப்பு இருந்தது!

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமது படத்தின் தொடக்க விழாவை தள்ளி வைத்திருப்பதாக அஜீத் அறிக்கை விடுத்திருந்ததில், மறைமுக அர்த்தம் ஒன்று உள்ளது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

மீடியாக்களுக்கு அஜித் அனுப்பி வைத்திருந்த அறிக்கையில், “விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் சார்பில் வெங்கட்ராம ரெட்டி தயாரிப்பில் நான் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தின் தொடக்க விழா ஏப்ரல் மாதம் 1-ம் தேதி அன்று ஹைதராபாத் நகரில் நடைபெற இருந்தது .

ஆனால் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் மாதம் 2-ம் தேதி நடக்க உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்துகொள்ள இருப்பதால், இப்படத்தின் தயாரிப்பாளருடன் கலந்தாலோசித்து, படத்தின் தொடக்க விழாவையும் அதை தொடர்ந்து நடக்க உள்ள படப்பிடிப்பையும் ஏப்ரல் 5-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளோம்” என கூறப்பட்டிருந்தது.

அவர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்.

விஜய் ஆப்சென்ட்.

ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், கொளுத்தும் வெயிலில் சில மணி நேரங்கள் வந்து அமர்ந்துவிட்டு, தன் ஆதரவைத் தெரிவித்துச் சென்றார். கமல் மாலை 4 மணிக்கு உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.

தன் சீனப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்றார் விக்ரம். சூர்யா, கார்த்தி உள்பட பெரும்பாலான நடிகர்கள் தங்கள் தங்களது படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு, நேரில் வந்து உண்ணாவிரதம் இருந்தனர்.

ஆனால் விஜய் மட்டும் வரவில்லை.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்டபோது, “தலைவா பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் விஜய். அதனால் கலந்து கொள்ள முடியவில்லை என கடிதம் அனுப்பியுள்ளார்” என்றார்.

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வசதியாக உள்ளூர், வெளியூர்களில் நடக்கும் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக நடிகர் சங்கம் அறிவித்தது. இது வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கும் பொருந்தும் என்றனர் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள்.

தலைவா படப்பிடிப்பு பாடல் காட்சிகள் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்படுகின்றன. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல், அதில் கலந்து கொள்கிறார் விஜய்.

தலைவா பட ஷூட்டிங்கை பாதியில் விட்டுவிட்டு வந்தால், படம் சில நாட்கள் தாமதமாகலாம். அதுவும் இலங்கை தமிழரை பாதிக்கக்கூடிய விஷயம்தான். வெளிநாடுகளில் விஜய் படத்துக்கு அதிகளவு ஆதரவு கொடுப்பவர்கள் ஈழத் தமிழர்கள் என்பது தெரிந்த விஷயமே.

ஏற்கனவே நொந்து போயுள்ள ஈழத் தமிழர்கள், தலைவா படம் தாமதமானால் மேலும் நொந்து போய் விடுவார்கள். இதனால், ஈழத் தமிழரை பாதிக்க கூடிய விதத்தில் ஷூட்டிங்கை விஜய் கேன்சல் செய்யவில்லை.

சென்னை உண்ணாவிரதமும் ஈழத் தமிழருக்காக, ஆஸ்திரேலியா ஷூட்டிங்கும் ஈழத் தமிழருக்காக! இதை விளக்கும் விதத்தில் தலைவா படத்தில் ஒரு பஞ்ச் காட்சி வைக்கப்படும் என்கிறது விஜய் தரப்பு.

“பிறந்தது மதுர… வளர்ந்தது திருப்பாச்சி… படிச்சது, வெடிச்சது சிவகாசி… ஈழத் தமிழனுக்காக ஷூட்டிங் போனது சிட்னி… நம்பலைன்னா என் வாயில நீ சட்னி!”

10 comments:

  1. என்னது ஈழத் தமிழர்கள் நொந்து விடுவார்களா...?

    பஞ்ச் காட்சியா...?

    சட்னி ஆக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. இது விஜய்க்கு சாதாரணம்...


      ஏற்கனவே துப்பாக்கி படத்துல முஸ்லீம்கள் தவறாக பயன்படுத்திய பிரச்சகையில்...

      இதை சரிகட்ட தம்பி விஜய் அடுத்த படத்தில் ஒரு இஸ்லாமியராக நடித்து பிராயசித்தம் செய்வார்- அப்படின்னு ஒரு செய்தியை அவரது தந்தை வெளியிட்டார்...

      இதுவும் அதுபோலதான்...

      Delete
  2. இனி வர இருக்கும் விஜய் படங்களுக்கெல்லாம் நீங்கள்தான் பாடல்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்க ஆசீர்வாதம் குட்டன்...

      Delete
  3. விஜய் பக்கம் இப்படியொரு கூத்தா, தமிழ் சேனல்களில் தந்திடிவிதான் நேரடி ஒளிபரப்பைச் செய்துகொண்டிருந்தார்கள். அங்கு நின்றிருந்த அதன் நிருபர் "நாலுமுப்பது மணிக்குக் கமலழஹாசன் வந்து எல்லாருக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைப்பார்" என்று அடிக்கொருதரம் இவராகவே முடிவுசெய்து சொல்லிக்கொண்டிருந்தார். அதைவிட வேடிக்கை கமலஹாசன் வந்து மேடையில் உட்கார்ந்துவிட்டிருக்க இவர் "இன்னும் சிறிது நேரத்தில் கமல் வந்து எல்லாருக்கும் பழச்சாறு" என்று அதே டயலாக்கை அடித்துக்கொண்டிருந்ததுதான் படு வேடிக்கை. இம்மாதிரி முக்கிய நிகழ்ச்சிகளிலாவது கொஞ்சம் விவரமானவர்களைப் பயன்படுத்த வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே...

      பொதுவாக உண்ணாவிரதம் என்பது காலையில் குறைந்தது 7 மணிக்காவது ஆரம்பித்து மாலை 6 மணிக்கு முடிக்க வேண்டும்...

      ஆனால் அப்படி யாரும் முழுநேரம் இருந்தமாதிரி தெரியவில்லை
      பெரிய தலைகள் எல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்கே வந்து போனதுபோல் இரு்ந்தது....

      இன்னும் உண்மைத்தனம் வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து

      Delete
  4. ஜாயா சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது திலிபன் மட்டும்தான் மகாத்மா காந்தி கூட சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் இழக்க் வில்லை.

    ReplyDelete
  5. Such a shame... u've copied fully from Viruviruppu and posted with your name..

    http://viruvirupu.com/australia-movie-filming-vijay-continues-unable-to-reach-chennai-51029/

    ReplyDelete
  6. அவரு கலியாணம் கட்டிக் கொண்டதும் ஓர் ஈழத் தமிழ் பெண்ணைத் தானே .. இருந்தும் ஒதுங்கி இருப்பதில் என்னவோ மர்மம் இருக்கு .. ஒரு சம்பிரதாயத்துக்காகவது வந்திருக்கலாம். ஒருவேளை இலங்கையில் தனது படம் தடைபடும் என பயந்திருப்பார் போல .. அவ்வ்வ்வ்

    ReplyDelete
  7. ஐயோ பாவம் விஜய் !

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!