21 April, 2013

திருமதி தமிழ் விமர்சனம் / மாப்பிள்ளை சிம்பு / மற்றும் ரஹீம் கஸாலி



மேதைப் படத்தை பார்த்து விமர்சனம் எழுதி பதிவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை பதிவர்கள்... மெகா மற்றும் சோலார் ஸ்டார் நடித்த திருமதி தமிழ் படத்தை மெட்ராஸ் பவன் சிவக்குமார் தலைமையில் பார்த்து விமர்சனம் எழுதியிருக்கிறார்கள்.

அவர்களுடைய தைரியத்தை பாராட்டி அவர்களுடைய விமர்சன லிங்க்கும் இங்கு தரப்பட்டுள்ளது.... வாழ்க இவர்கள்... வளர்க இவர்கள் சினிமா தொண்டு...

திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்
(ஸ்கூல் பையன் அவர்களின் விமர்சனம்)

 **************************************

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து படு சூட்டைக் கிளப்பினார் சிம்பு. அதையடுத்து அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றியதால் அவர்களை இணைத்து காதல் கிசுகிசுக்கள் வேகமாக பரவின. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களது காதல் முறிந்து போனது. 
இருவரும் அதன்பிறகு இணைந்து நடிப்பதைகூட தவிர்த்தனர். ஏதாவது சினிமா விழாக்களில் எதேச்சையாக சந்தித்தால்கூட முகத்தை திருப்பிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். அதையடுத்து அடிக்கடி சிம்புவை முன்னணி நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்த நிலையில், இந்த மாதிரியான கிசுகிசுக்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிம்புவுக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் வேலைகளில் அவரது பெற்றோர் தீவிரமடைந்துள்ளனர். 
சமீபத்தில் வேலூரில் அவர்கள் சிம்புவுக்காக ஒரு பெண் பார்த்தார்களாம். அது மனசுக்கு திருப்தியாக இருக்க, மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்படி விரைவில் பிடித்தமான பெண் கிடைத்துவிட்டால், இந்த வருடம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிம்புவுக்கு திருமணம் நடைபெறுமாம். ஆக, இப்போதே புதுமாப்பிள்ளை களை சிம்புவின் முகத்தில் தாண்டவமாடத் தொடங்கி விட்டது.
******************************** 
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு நண்பர் ரஹீம் கஸாலி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்....
 **************************

11 comments:

  1. நான்கூட இப்பத்தான் விமர்சனம் எழுதியிருக்கேன். உங்களோட திருமதி தமிழ் பத்தின பதிவுக்கு சுட்டி கொடுத்திருக்கேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களுது பதிவையும் இணைத்திருக்கிறேன் நண்பா....

      Delete
  2. நன்றி நண்பா. உங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஏதோ என்னால முடிஞ்சது...

      தாங்க வாழவேண்டும் பல்லாண்டு...

      Delete
  3. அன்பு நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சக பதிவர் ரஹீம் கஸாலிக்கு என்னுடை பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. படவிமர்சனம் பார்க்கின்றேன்.

    ரஹீம் கஸாலி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நண்பர் ரஹீம் கசாலிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. படத்துக்கு விமர்சனம் எழுதின எல்லாரோட லிங்க்கையும் கொடுத்து அசத்திட்டீங்க தோழரே! நன்றி! அன்புச் சகோதரன் ரஹீம் கஸாலிக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
    இப்படிக்கு
    தமிழ் களஞ்சியம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!