22 April, 2013

நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...!



வ்வொறு சந்திப்பின் போதும்
எப்படியாவது வந்துவிடுகிறது 
சின்ன சின்ன சண்டைகள் நமக்குள்...

தவறு செய்தது நீதான்என்று நானும்
நான்தான் என்று நீயும்
மாறி மாறி சுமத்திக்கொள்கிறோம்
குற்றச்சாட்டுகளை...!

இப்படியே 

வெகுநேரம் பேசிபேசியே
முடிவு தெரியாமலே பிரிவோம்...

அதன்பிறகு என்னநேருமோ..?
இமைகள் அரித்துக்கொண்டிருக்கும்
மனசு உறுத்திக்கொண்டிருக்கும்...

உன்னை காயப்படுத்தியதில்
அதிகம் வலிக்கும் எனக்கு
மன்னிப்பு கேட்கும் வரை...!

மறுநாள் சந்தித்து
நான் மன்னிப்பு கோருவதற்கு முன்
“தவறு என்னுடையதுதான்” என்பாய்
பார்க்க துணிவில்லாமல் தலைகுனிந்து...!


உண்மைதான்...!
மன்னிப்பு கேட்கும் மனமும்
மன்னிக்கும் மனமும் இருந்தால்
காதல் செழிக்கும்...!


என் காதலை வாசித்த
அனைவருக்கும் நன்றி...!


15 comments:

  1. காதலர்களின் அதீத அன்பில் விளையும்
    அற்புதம்தானே ஊடலும் கூடலும்
    மனம் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கவிதை அருமை.... மன்னிக்கும் மனதைவிட மன்னிப்பு கேட்கும் மனது பெரிது... அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. உண்மை... மன்னிப்பு கேட்கும் மனது அனைவருக்கும் வந்துவிட்டால் எந்த குடும்பத்திலும் பிரச்சனைகள் இருக்காது...

      Delete
  3. ஆமா அப்பவும் பெண்கள் தான் மன்னிப்பு கேட்கனும் என்று எதிர்பார்ப்பீர்கள். கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நாங்க தாங்க மன்னிப்பு கேட்கனுன்னு வர்ரோம் ஆனா மகளீர் முந்திக்கிறாங்க...

      Delete
  4. கணவன் மனைவி இடையில் மன்னிப்பா...? ஹெஹேஹெஹே... நானும் இரு மனமும் ஒன்றல்லவோ நினைத்தேன்...!
    ஓஹோ... காதலிக்கும் போதா...? ரைட்டு...! ஹிஹி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. மறப்போம் மன்னிப்போம் மீண்டும் தொடருவோம்

    ReplyDelete
  6. மன்னிப்பு தேவையா வார்த்தையில் பார்வை ஒன்று போதுமே பல்லாயிரம் கதை சொல்லுமே

    ReplyDelete
  7. சரி சரி போகட்டும் விடுங்கள்....
    உங்களை நாங்கள் மன்னித்து விட்டோம்..!!!

    (சசிகலா... ஓ.கே..வா?)

    ReplyDelete
  8. அன்பின் சௌந்தர் - விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலே போதும் - காதலர்களாகட்டும் - கணவன் மனைவி ஆகட்டும் - சற்றே விட்டுக் கொடுத்தால் போதும் - மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் - பார்வையிலேயே முக பாவத்திலேயே மன்னிப்பு தெரிவிக்கலாம். புரிதலுணர்வு போதும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. சில இடத்துல அடிதடியையே பார்த்திருக்கிறேன் .. அண்ணே காதலில் இதெல்லாம் சகசம் போல... மன்னிப்பு கேட்கவே ஒரு சண்டை மீண்டும் உருவாகட்டும் ... கவிதை சிறப்பு

    ReplyDelete
  10. கவிதை அருமை. மன்னிப்பு கேக்குறதே அடுத்த சண்டைக்கான ஆரம்பம் தானே.

    காதல்ல இதெல்லாம் ரொம்ப சகஜம், ஆரம்பதில்ல இந்த சண்டை பெருசா தெரியும் அப்புறம் ..பழகிரும்!

    ReplyDelete
  11. தங்களது இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரிக்குச் சென்று காணவும்...

    http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_25.html

    ReplyDelete
  12. ஊமையாய் ஒதுங்கி நின்று ஓரக்கண்ணால் மட்டும் பார்ப்பவளிடம்
    ஊடலும் கூடலுக்காகத்தானே.

    அதனால் தானே வள்ளுவனும்..

    ..ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்



    வேண்டாம்...
    இந்தப் பெரிசு என்னவெல்லாம் சொல்லுது அப்படின்னு
    ஏகப்பட்ட பேரு கண் போட்டிருவீக...

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!