28 April, 2013

“பகல்ல படிச்சா படிப்பு வராதா?.. சன்டே ஸ்பெஷல் நகைச்சுவைகள்

 
ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.
 

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.
 

கணவன் பதறியபடி, 
நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.

********************************
 
"நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி மோதிரம் மாத்திக்கலாமா?"
 

"வேண்டாம்"
 

"ஏன்?"
 

 "என் மோதிரம் நாலு கிராம்; 
உன் மோதிரம் ரெண்டு கிராம்தானே!!"

********************************
 
 ராமசாமியின் மனைவி தன்தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்..
 

 "என் பக்கத்து வீட்டு பத்மா இருக்காளே.. சுத்த மோசம்.. தன் புருஷனை இப்படியா கேவலமா பேசுவா..? இப்போ என்னையே எடுத்துக்கோ.. என் புருஷன் சுத்த மொக்கை. ஒன்னுக்கும் புண்ணியமில்லாதவர்.. வடிகட்டின முட்டாள்... சரியான வேஸ்ட்.. ஆனா நான் என்னிக்காவது, அவரைப்பற்றி யார்கிட்டயாவது தப்பாச் சொல்லியிருக்கேனா..?

********************************
 
கலிலியோ இரண்டு சின்ன விளக்குகளை வைத்து படித்தார்!
கிரகாம்பேல் மெழுகுவர்த்தி வைத்து படித்தார்!

ஷேக்ஸ்பியர் தெருவிளக்கில் படித்தார்!

ஒண்ணும் மட்டும் புரியலை,

“பகல்ல படிச்சா படிப்பு வராதா என்ன?” 
********************************
பஞ்ச் :
வீரம் என்பது உடல் பலத்தில் இல்லை
மனபலத்தில் தான் இருக்கிறது...

7 comments:

  1. இன்னாய்யா பெரிய ஜோக் அடிச்சுட்டே !
    இங்கன வாழ்க்கையே சோகமா போயிடுச்சு.

    உங்க பதிவைப்படிச்ச பின்னே
    எங்க ஊட்டு அம்மா வந்து



    கிணற்றிலே தண்ணீர் இறைப்பதெல்லாம்
    உங்க ஜாப் என ஜகா வாங்குறாளே.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  2. படங்கள் சிறப்பு..

    ReplyDelete
  3. எத்தனை தடவை சொல்லி இருக்கேன் கோவம் வாறமாதிரி ஜோக் சொல்லாதேன்னு.

    ReplyDelete
  4. படமும் அருமை, நகைச்சுவையும் அருமை

    ReplyDelete


  5. நகைச்சுவை துணுக்குள்அருமையாக உள்ளன!

    ReplyDelete
  6. வீரம் என்பது உடல் பலத்தில் இல்லை
    மனபலத்தில் தான் இருக்கிறது...///
    பஞ்ச் பிரமாதம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!