08 April, 2013

அப்படி என்ன கேட்டுவிட்டேன் அவளிடம் ..!



வ்வொறு நிமிடமும்
வலிகள் கொண்டே நகர்கிறது
என் காதல் காலங்கள்...!

விரைவில் விடியாத 
சில ஊமை இரவுகளுக்கிடையே
பற்றிக் கொள்ளும் அவளின்
நினைவுகளை தவிர்த்து...

ரவோடு போரிட்டு
தூக்கத்தைத் தொடரலாம்
என்றால்முடிவதில்லை
 ஒருபோதும..!

வள் மீதான காதலை 
அதிகப்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும்
 என் வலியின் வீரியங்களை இன்னும்
வலுவடைய செய்கிறது...!

சொல்ல முடியாத என் காதலை
இதயத்தில் வைத்தே
அரித்துக்கொண்டிருக்கிறது
என் இயலாமை கரையான்கள்....!

லிகளைப்போக்கும் 
ஒரு சந்தர்ப்பத்திற்காக 
காத்திருக்கிறேன்
  
து என் காதல் கைக்கூடும்
நாள் மட்டுமே...!


தங்கள் வருகைக்கு 
மிக்க நன்றி நண்பர்களே...!
(மீள்பதிவு)
 

7 comments:

  1. வரிகள் அருமை...

    ஒரு சந்தேகம் : இன்னுமா கை கூடவில்லை என்பதால் மீள்பதிவோ...? ஹிஹி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது தலைவரே...
      கொஞ்ச காலத்துக்கு இதை திரும்ப போட்டுத்தான் ஆகனும்....



      பீலீங்கு....



      லைட்டா...!

      Delete
  2. அருமை அருமை
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உருக்கம் உருக்கியது

    ReplyDelete
  4. நல்ல கவிதை...
    மீள்பதிவாய் இருந்தாலும் மீண்டும் படிக்கச் சொல்லுது...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!