11 April, 2013

கோச்சடையான் Vs ராணா சீக்ரெட்ஸ்..மனம் திறக்கும் ரஜினி மகள்...!


‘கோச்சடையான்’ – இந்த ஒற்றை வார்த்தையைத் தவிர, ரஜினியின் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக இதுவரை வெளிவரவில்லை. இதோ… ஸ்கூப் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் ‘கோச்சடையான்’ இயக்குநர் சௌந்தர்யா!

”இது 100 பெர்சன்ட் ரஜினி ஃபார்முலா கமர்ஷியல் படம். அப்பாவை வெச்சு ரெண்டு சூப்பர் ஹிட்ஸ் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அங்கிள்தான் இந்தப் படத்துக்கு ஸ்க்ரிப்ட். ரஹ்மான் சாரின் மியூஸிக்ல ஆறு பாடல்கள். தீபிகா ஹீரோயின்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, படத்தில் இன்னொரு மெயின் ஹீரோயின்… ஷோபனா!”

”என்ன சொல்றீங்க… அப்போ டபுள் ஆக்ட் ரஜினியா?”

”ஆஹா… நானே சஸ்பென்ஸ் உடைச்சுட் டேனே! யெஸ்… படத்தில் சீனியர் ரஜினிதான் கோச்சடையான். அவர் ஒரு  தளபதி. நாட்டின் மன்னன் ரஜினியின் பெஸ்ட் ஃப்ரெண்ட். அந்த நண்பனுக்காக உலகத்தையே ஜெயிச்சு அவர் காலடியில் கொண்டுவந்து கொட்டணும்னு துடிக்கிற வீரர்.

அதே சமயம், ‘கோச்சடையான்’… ஒரு பரதக் கலைஞனும்கூட. போர்க்களத்தில் ஆக்ரோஷமா சண்டை போடும் கோச்சடையான், அடுத்த காட்சியிலேயே அசத்தலா அபிநயம் பிடிச்சு ஆடுவார். அப்படியரு கேரக்டருக்கு யாரை ஜோடியா ஃபிக்ஸ் பண்ணலாம்னு யோசிச்சா, ஷோபனா மேடம் தவிர, யாரும் என் மனசுல தோணவே இல்லை!”

”அப்ப கோச்சடையான் மகனுக்குப் படத்தில் என்ன வேலை?”

”மொத்தக் கதையையும் கேப்பீங்க போல. சரி… இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் தகவலும் சொல்லிடுறேன்… கோச்சடையான் பையன் கேரக்டர்தான் ‘ராணா’.

p10b

ஒரு தலைவனுக்குத் தேவையான அத்தனை தகுதிகளும் திறமைகளும் கோச்சடையானிடம் இருக்கும். என்ன சொல்றோமோ அதன்படி வாழணும்கிற கொள்கையோட இருப்பார் கோச்சடையான். அவர் பையன் ராணா, அவரைவிட நூறு மடங்கு வேகமானவன். ஆனா, இளங்கன்று பயமறியாதுனு சொல்வாங்களே… அப்படிப் பரபரனு இருப்பார் ராணா. தன் ஜூனியரின் ஆற்றலை விவேகமான பாதையில் திருப்புவார் கோச்சடையான். அதனால் கோச்சடையான்தான் படத்தின் ஹீரோ.

ஒரு ரஜினி ரசிகையா சொல்றேன்… அப்பா இதுவரை பண்ணினதிலேயே கோச்சடையான்தான் பெஸ்ட் கேரக்டரா இருக்கும். அவர் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை கமர்ஷியல் கலாட்டாக்களும் படத்தில் இருக்கு. க்ளைமாக்ஸ்ல ஒரு பஞ்ச் அடிச்சிட்டு, செம கெத்தா ஒரு நடை நடப்பார் பாருங்க… ஸ்பாட்ல நான் ‘கட்’ சொல்ல மறந்து பார்த்துட்டே இருக்க, மொத்த யூனிட்டும் கிளாப்ஸ் அள்ளிட்டோம். இதெல்லாம் போக, அப்பா படத்தில் ஒரு பாட்டும் பாடியிருக்கார். இப்போதைக்கு அவ்வளவுதான்… இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க… ப்ளீஸ்!”

”ஒரு ரசிகையா ரஜினியைக் கொண்டாடியிருப்பீங்க. ஒரு இயக்குநரா ரஜினியின் ப்ளஸ், மைனஸ் என்ன?”  

(யோசிக்கிறார்) ”மைனஸ்னு சொல்ற அளவுக்கு எனக்கு எதுவும் தோணலை. மத்தபடி… எல்லாமே ப்ளஸ்தான். அதிலும் முக்கியமா, அவரோட டெடிகேஷன்! பட வேலைகள் ஆரம்பிச்சதுல இருந்து நாங்க ரெண்டு பேரும் எப்போ பேசினாலும் அது ‘கோச்சடையான்’ சப்ஜெக்ட்டாதான் இருக்கும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு, தாங்க முடியாம ஒருநாள், ‘டைனிங் டேபிள்ல இனி சினிமா பத்திப் பேசாதீங்க’னு அம்மா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. அப்பா… சிம்ப்ளி சூப்பர்ப் ஆக்டர்!”
p10a

”ஒரு இயக்குநரா அப்பாகிட்ட பாராட்டு வாங்கினீங்களா?”

”நல்லவேளை இந்தக் கேள்வி கேட்டீங்க! ஒரு சீன்ல அப்பா கேரக்டரும் தீபிகா கேரக்டரும் உணர்ச்சிபூர்வமாப் பேசிக்கணும். வசனங்கள் கொஞ்சம் தூய தமிழ்ல இருக்கும். அதனால், தீபிகாவுக்கு சிச்சுவே ஷனை விளக்கிட்டு நானே ‘இந்தந்த ரியாக்ஷன் இப்படி எல்லாம் வேணும்’னு சின்னதா நடிச்சுக் காமிச்சேன். அப்போ அப்பா என்னைக் கவனிச்சுருக்கார்போல! ராத்திரி வீட்டுக்கு வந்ததும், ‘நடிச்செல்லாம் காமிக்கிறீங்க கண்ணா… நல்லா நடிக்கிறீங்க… சூப்பர்… சூப்பர்’னு சொல்லிட்டுப் போயிட்டார். தலைவரே நம்மளைப் பாராட்டிட்டாரேனு எனக்கு சர்ப்ரைஸ் ஷாக். அன்னிக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே பிடிக்கலை!”

”ஆல் இஸ் வெல். ஆனா, அனிமேஷன் படங்கள் ஒரு லுக்குக்கு கார்ட்டூன் மாதிரி இருக்கும்னு கமென்ட்ஸ் கிளம்புமே?”

”‘அவதார்’ என்ன கார்ட்டூன் படமா? நாமளே ‘அவதார்’ பண்ற அளவுக்கு டெக்னாலஜி இங்கேயே வந்திருச்சு. பல காலமா நாம தயங்கிட்டு இருக்கிற ‘பொன்னியின் செல்வன்’கூட இந்த டெக்னாலஜியில் ஈஸியாப் பண்ண முடியும். ‘சுல்தான் த வாரியர்’ வேலைகள் ஆரம்பிச்சப்போ, இந்த அளவுக்கு டெக்னாலஜி இல்லை. அப்ப அந்தப் படம் பண்ணியிருந்தா, கார்ட்டூன் மாதிரிதான் இருந்திருக்கும். அதான் அந்த புராஜெக்ட்டையே கேன்சல் பண்ணினோம். ஆனா, இப்போ ‘கோச்சடையான்’ல எந்த இடத் திலும் உங்களுக்கு கார்ட்டூன் ஃபீல் வராது.

ரொம்ப சின்ன வயசுல அப்பா எனக்குச் சொன்ன அட்வைஸ் இது… ‘உன் பாதையை நீயே உருவாக்கு. மத்தவங்கதான் அதுல வரணுமே தவிர, நீ அடுத்தவங்க பாதையில போகக் கூடாது’. என் வழி… அப்பா சொல்லித் தந்த அதே தனி வழி!” (விகடன் செய்திகள்)

2 comments:

  1. எல்லாமே கமர்சியல் தான் பணம் சம்பாதிக்கத்தானே இங்கு வருகிறார்கள்.

    ReplyDelete
  2. படம் பார்க்கும் ஆவலை தூண்டி விடும்படி நன்றாகவே, மிக நன்றாகவே பேசி உள்ளார்கள்... பார்ப்போம் படம் வந்தவுடன்...!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!