12 May, 2013

ஆண்கள் மனைவிக்கு தெரியாம இப்படியா...? கொஞ்சம் சிரிங்க பாஸ்...!



நம்ம ஜட்ஜ் மற்றும், ஒரு பெண்ணும்,

"உனக்கும் உன் புருஷனுக்கும் டைவர்ஸ் தரமுடியாதும்மா"

"ஏன் சார்?"

"டைவர்ஸ் தரணும்னா அதுக்கு வலுவான காரணம் வேணும்"

"என் புருஷன் ஒரு குடிகாரன் சார்"

"செல்லாது...செல்லாது... நாட்ல முக்கால்வாசி பேரு குடிகாரங்கதான்"

"என்னை "பவர்ஸ்டார்" படத்துக்கு கூட்டிட்டு போய் கொல்லபாத்தாரு"

"அவ்வள‌வு பெரிய கொடுமைக்காரனா அவன்...ஓகே டைவர்ஸ் சேங்ஷன்"


************************************



ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது அதாவது
பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள்
மனைவியை அழைத்து செல்லலாம் என்று....

இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது

சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின்
மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது

எல்ல்லா மனைவிகளின் பதில்......

"எந்த பயணம்??" என்ன சலுகை?" எப்போ???"


************************************



முதலாளி : சர்வர் ... அங்கே என்ன சத்தம்?

சர்வர் : ஒண்ணுமில்லை சார் ... Full Meals கேட்டார் ...கொடுத்தோம்.

முதலாளி : அப்புறம் என்ன சத்தம்?

சர்வர் : Meals இங்கே இருக்கு ...Full எங்கேன்னு கேக்குறார்.

முதலாளி : ????


 ************************************




நோயாளி . டாக்டர் எனக்கு சத்தம் மட்டும் தான் கேட்குது முகம் தெரியவில்லை

டாக்டர். இது மாதிரி எப்பல்லாம் நடக்குது?

நோயாளி. போன்ல பேசும்போது டாக்டர்

டாக்டர். !!!!!!!??????????????


************************************






அன்னையர் தின வாழ்த்துக்கள்

9 comments:

  1. கடைசியா அன்னையர் தின வாழ்த்துக்களுடன்? பதிவு அருமை நண்பரே

    ReplyDelete
  2. சிரிக்க வைத்து வாழ்த்துக்கள்... நன்றி...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஜோக்ஸ் அருமை அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மொத பாலே சிக்சரா!!!ம்ம்ம்.. ஏண்ணே அந்த எலி வெள்ளைக்கார எலியா இருந்தா என்ன பண்றது???
    அந்த நோயாளிக்குத்தான் எம்புட்டு அறிவு....
    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  6. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

    subbu thatha.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  7. இது நல்லாயிருக்கே.அன்னை திரேசாவின் அர்த்தமான கொட்டேச்கன் மிகவும் மனம் கவர்ந்ததாய்.அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. முதல் ஜோக் சூப்பர் ஆனால் அதில் ஓர் திருத்தம், முக்கால்வாசி பேர் இல்லோ எல்லாருமே இப்போ குடிகாரன்தான் ஜட்ஜ் உட்பட...!

    ReplyDelete
  9. ellam facebook la suttathu thanea ?


    sivaparkavi

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!