28 May, 2013

இதுதாங்க என்னுடைய முழுவிவரம்..! யாராவது கிண்டல்பண்ணா அவ்வளவுதான்...!



நான் 
எட்டுமணிநேரம்
ஒரு அலுவலத்தின் 

வேலைக்காரன்...

சிலமணிநேரங்கள்
நண்பர்களோடு 

அரட்டை அடிப்பவன்...

குறைந்தது 
ஆறு மணிநேரமாவது
தூங்கிக்க‌ழிப்பவன்...


எஞ்சிய நேரங்களில்...
வலைப்பூவில் பூத்து
முகநூலில் முகம்காட்டி...


வெட்டியாய் ஊர்சுற்றி
நூலகம் நுழைந்து

புத்தகம் படிப்பது - என
பன்முகம் கொண்டவன்..!


ஆனாலும் எப்போதும்

24 மணிநேரமும்
ஒரு நொடிகுறையாது

அன்பே...
உனக்கானவன் நான்...!
அந்தரங்கம் அந்தரங்கம் அந்தரங்கம்
வாசித்த அனைவருக்கும் நன்றி..!

10 comments:

  1. சரிங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சரி சரி வாழ்த்துக்கள் சகோ :)

    ReplyDelete
  3. சௌந்தர்! உங்களை பத்திதான சொலி இருக்கீங்க!

    ReplyDelete
  4. முழுவிபரம் நல்லா தான் சொல்லி இருக்கிங்க.

    ReplyDelete
  5. நாம் எங்கு சுற்றித்திரிந்தாலும் மனம் அவளிடமே!
    அருமை

    ReplyDelete
  6. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நல்லாதான் இருக்கு!

    ReplyDelete
  8. சௌந்தர் முழுவிவரம் நல்லா இருக்கு.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!