28 May, 2013

தீராத வடிவேலுவின் அரசியல் அலர்ஜி / இமயமலையில் பிரபல நடிகர்..!


ர‌ஜினி, விஷாலை தொடர்ந்து சிம்புவும் இமயமலை ஏறிவிட்டார். ஆன்மீகம்தான் எனக்குள் இருக்கிற என்னை அடையாளம் காட்டுகிறது என்றெல்லாம் சமீபமாக சொல்லத் தொடங்கினார் சிம்பு. ச‌ரி, தனியாக இருப்பதால் அப்படியெல்லாம் சாயா... மாயா... தோன்றியிருக்கலாம் என்றுதான் நினைத்தனர். ஆனால் உண்மையாகவே இமயமலைக்கு கிளம்பினார். இப்போது போட்டோவும் ‌ரிலீஸாகியிருக்கிறது.

ர‌ஜினி பிளைட்டில் பயணித்து கிழிந்த கதர் சட்டையுடன் மலையேறினார் என்றால் சிம்பு செம கலக்கல் கெட்டப். இமயமலையிலும் இவர்களை தொடர்ந்து வந்து பத்தி‌ரிகைக்காரர்கள் போட்டே எடுக்கிறார்களா இல்லை இவர்களே போட்டோ எடுத்து பத்தி‌ரிகைக்கு தருகிறார்களா?

விஜய் டிவியில் சிம்புவின் இமயமலைப் பயணம் என்று தொடர் வராமலா போகும்.
****************************
 
ஏறக்குறைய இரண்டு வருட வனவாசத்துக்குப் பிறகு மீண்டும் வடிவேலு. யுவராஜா இயக்கும் ச‌ரித்திர படம். ஆனால் காமெடிதான் பிரதானம்.

அரசியலுக்கு போய் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்ட வலி இன்னமும் இருக்கிறது வடிவேலிடம். கேமராவுக்கு முன்னால் நிற்பதற்கு முன் வசனங்களை வாங்கி இது யாரையாவது கேலி செய்வது போல் இருக்குமா என எட்டு திசையிலும் சிந்தனையை ஓடவிட்டுதான் வசனங்களை ஓகே செய்கிறார். அப்படி முழு நீள படமும் அரசியல் இடை நீக்கத்துடன்தான் உருவாகி வருகிறது.

வடிவேலு படம் வெளிவந்தால் ஆனவரைக்கும் ஓடவிட மாட்டோம் என ஆர்மிக்கார‌ரின் முரட்டு தொண்டர்கள் சிலர் வீராவேசம் கொண்டிருக்கிறார்கள். இதுவும் காமெடி புயலை கொஞ்சம் கலங்கடித்திருக்கிறது.

எப்படியும் வடிவேலின் இரண்டாவது இன்னிங்ஸ் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

4 comments:


  1. வடிவேலுவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  2. வைகைப்புயல் வருகை இருக்கட்டும்... அதை விட சிம்பு காமெடி செம...!

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  4. சிம்புக்கு அடுத்து யாரு இமயமலை ஏறப் போறது யார்?!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!