12 June, 2013

விஜயகாந்த்துக்கு, ராமதாசுக்கும் கடைசிவரை இப்படித்தானா..?


அரசியல் கட்சி நடத்துபவர்களுக்கு, அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கென்று, தனித்தனி கொள்கைகள் இருக்கத் தான் செய்யும். அத்தகைய கொள்கைகளை முன் வைத்துதான், தேர்தல் காலங்களில், மக்களிடம் வாக்கு சேகரிப்பர். இது தான், குடியரசின், மக்களாட்சியின் அடிப்படை சித்தாந்தம். 

அதை விடுத்து, தேர்தல் காலங்களில், கூட்டணி அமைத்து போட்டியிடுவது எந்த விதத்தில் நியாயம்? அவ்வாறாயின், அவர்கள் சார்ந்த கட்சிக் கொள்கைகள் என்னவாவது? பதவி பெறுவதற்கு, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாடு, ஏற்றுக் கொள்ளக் கூடியதா? 

தேர்தல் காலங்களில், ஒவ்வொரு கட்சியும், தனித்தே போட்டியிட வேண்டும். வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், மக்கள் எந்த அளவிற்கு தங்களை ஆதரிக்கின்றனர் என்பதைத் தெரிந்து, அதற்கேற்றவாறு, பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், மக்கள் சேவையில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி, பணியாற்ற முயல வேண்டும். அதுதான், மனிதாபிமானம் படைத்த உண்மையான அரசியல் நாகரிகம். 

ஜூன், 27ல், ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்தல். ஆறு பேரை, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. இந்த அடிப்படையில், அதிக எண்ணிக்கை எம்.எல்.ஏ.,க்கள் உள்ள கட்சி எதுவோ, அக்கட்சி தங்கள் வேட்பாளரை நிற்க வைத்து, வெற்றி வாய்ப்பை தட்டிச் செல்லட்டும். 

அதை விட்டு விட்டு, பதவி பெறுவதற்காக ஒரு தனிப்பட்ட கட்சி, வேறு கட்சியை சார்ந்த தலைவர்களை கெஞ்சுவதில், என்ன நியாயம் இருக்கிறது? அவ்வாறாயின் கொள்கைகள் என்னாவது? பதவி தான் பெரிதா... என்ன ஜனநாயகமோ!

இன்னும் தமிழகத்தில் பார்த்தால் அதிமுக திமுக போன்ற கட்சிகளை சாராமல் வேறு எந்த கட்சியும் தனித்து நின்று வெற்றிப்பெற்றுவிடமுடியும் என்ற நிலை தமிழகத்தில் இல்லை.

மக்களும் கடவுளிடம் மட்டும்தான் நான் கூட்டணி என்ற விஜயகாந்தும், உயிரே போனாலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற ராமதாசும் திராடாவிட கட்சிகளோடுதான் கூட்டணியை வைத்துக்கொண்டு இதுவரை போட்டியிட்டுக்கொண்டுயிருக்கிறார்கள்.

ஒரு கட்சி ஆதரவோடு ஜெயித்து பின்பு அதிலிருந்து விலகுவது என்பது மிகவும் பாவமான காரியம் என்பதை அரசியல் கட்சியினர் எப்போது புரிந்துக்கொள்ளப்போகிறார்களோ... 

இனிவரும் காலங்களிலாவது கூட்டணி என்ற பெயரில் கோடிகள் விளையாடி மக்களை மண்ணாக்குவதை விட்டு தனித்து நின்று மக்களோடு மக்களாக இருக்கும் தைரியம் தமிழக கட்சிகளுக்கு இருக்கிறதா...?

பொருத்திருந்து பார்ப்போம்.

9 comments:

  1. என்னது 'புரிந்துக்கொள்ளப்போகிறார்களோ' வா...? முடிவில் கனவு...

    (அப்புறம் ஊரில் தானே உள்ளீர்கள்...? நன்றி...!)

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சௌந்தர்.

    ReplyDelete
  3. எந்த கட்சிய்யா இப்போ கொள்கை மண்ணாங்கட்டி வச்சிருக்கு...?

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  5. அரசியல்வாதி திருந்துவதாவது ....... காமெடி பன்னாந்திங்க பாஸ்

    ReplyDelete
  6. சௌந்தர் உங்கள் கருத்து சரிதான், ஆனால் பதவி மோகத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் புத்தியில் ஏறாது.

    ReplyDelete
  7. அண்ணே இவனுகலாம் மானம் கெட்டவனுங்க இவனுகல்ட போயி நாம கொள்கை எல்லாம் எதிர்பார்கலாம வேணும்னா கொள்ளை எதிர்பார்க்கலாம் எல்லாம் அத மட்டும் சரியாய் பண்ணுவானுங்க

    ReplyDelete
  8. துட்டு தான் காரணம்! கொள்கைகள் இவர்களிடம் ஏது?

    ReplyDelete
  9. அவர் மனைவி அல்லது மைத்துனரை
    டெல்லிக்கு அலுப்பில்லாமல் அனுப்ப முயல
    இவர் தன் மகனை அனுப்ப முயல்கிறார்
    இதில் கொள்கை என்ன லட்சியம் என்ன
    அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்
    நாம்தான் குழம்பிக் கிடக்கிறோம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!