11 June, 2013

இதுக்கெல்லாமா அடிப்பாங்க... என்ன உலகம்டா இது!??!!




அப்பா : டேய்...உன் வயசுல ஐன்ஸ்டின் பஸ்ட் ரேங்க் வாங்குனாரு. நீயும் என் புள்ளைன்னி இருக்கியேடா...

மகன்: உங்க‌ வயசுல ஹிட்லர் தற்கொல பண்ணிகிட்டாரு....நான் அதெல்லாம் சொல்லறனா...

*******************************************



"இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க....

உடனே நான் அந்த கடையில ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,

அடிக்க வர்றாங்க...!!!

என்ன உலகம்டா இது!??!!

*******************************************



மகன்: அப்பா! எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!

அப்பா: அது என்னடா தெய்வீகக் காதல்?

மகன்: என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!

*******************************************



"சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன். "

"எப்படிச் சொல்றீங்க ? "

"ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான். "

*******************************************


உலகத்திற்கு "எடிசன்" வந்ததால் மின்சாரம் கிடைத்தது.
ஆனால்,
 
தமிழ்நாட்டிற்கு "எலக்சன்" வந்தால்தான் மின்சாரம் கிடைக்கும்!

*******************************************

அம்புட்டும் பேஸ்புக்கில் படித்து ரசித்து சிரித்தது...
தொகுத்து உங்களுக்காக...!

9 comments:

  1. சிரித்தேன்... ரசித்தேன்...

    ReplyDelete
  2. படங்கள் வெகு சிறப்பு.

    ReplyDelete
  3. தேய்வீக காதல் ஜோக்தான் நச்

    ReplyDelete
  4. நல்ல தொகுப்பு, அதிலும் அந்த கடனுக்கு இலவசம் இருக்கே... :)

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - சிரித்து சிரித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு.... இலவசம் ஜோக் அருமை

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!