24 June, 2013

கனிமொழியை ஆதரிக்கும் காங்கிரஸ்... வெற்றிக்கு தீயாக வேலைசெய்யும் திமுக

 
டெல்லி மேல்சபைத் தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவளிக்க சோனியா காந்தி முடிவு செய்திருப்பதாகக் கூறப் படுகிறது.

தமிழகத்திலிருந்து டெல்லி மேல்சபைக்கு 6 பேரை தேர்ந்தெடுக்க 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தி.மு.க.வும், தே.மு.தி.க.வுக்கும் காங்கிரசின் ஆதரவை பெற தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில் டி.ஆர்.பாலு காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து கனிமொழி வெற்றி பெற காங்கிரஸ் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி இப்போது கனிமொழியை ஆதரிக்கும் படியும் விரைவில் காலியாகும் 2 இடங்களுக்கு தேர்தலில் காங்கிரசை தி.மு.க. ஆதரிக்கும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆக கனிமொழியை ஆதரிக்கும் அறிவிப்பு காங்கிரஸ் தரப்பிலிருந்து இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

தேர்தலுக்குள் எப்படியெல்லாம் காய்நகர்த்தி கனிமொழியை வெற்றிப்பெற செய்வதில் குறியாக இருக்கிறது திமுக.

4 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!