22 June, 2013

அரசியல் நெருக்கடி... அப்பாவின் கோவம்... நெருக்கடியில் விஜய்யின் தலைவா

நடிகர் விஜய்யின் 39-வது பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் வெகு தீவிரமாக நடந்துவந்தது. சமீபத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்படவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.


ரசிகர்கள் ஏற்பாடு செய்திருக்கும் எந்த நிகழ்ச்சியிலும் இன்று (22.06.13) விஜய் கலந்துகொள்ளவில்லையாம். இதுபற்றி விசாரித்தபோது, ஏற்கனவே திட்டமிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டது விஜய்யை மிகவும் பாதித்துள்ளதாம். எனவே விஜய் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமல் மற்ற நாட்களைப் போன்று சாலிக்கிராமத்தில் நடந்துகொண்டிருக்கும் ஜில்லா படப்பிடிப்பிற்கு செல்கிறாராம்.

தனிப்பட்ட முறையில் அரசியல் செல்வாக்கு இருப்பவர்கள் யாரையும் வளரவிடக்கூடாது என்பதில் தற்போதைய அரசாங்கம் தனிகவனம் செலுத்திவருவதாக பேசப்படுகிறது.(சென்ற ஆட்சியிலும் விஜய்க்கு இதுபோன்ற நெருக்கடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது)மிகவும் எதிர்பார்ப்புடன் நேற்று(21.06.13) நடந்த தலைவா இசைவெளியீட்டு விழாவிலும் விஜய் அதிகம் பேசவில்லை.

விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் துப்பாக்கி படஇசைவெளியீட்டு விழாவின்போதே ‘என் மகனின் கால்ஷீட் எனக்கே கிடைக்கவில்லை, ஒரு வழியாக கால்ஷீட் வாங்கி துப்பாக்கி துவங்கினேன். துப்பாக்கி பட பட்ஜெட் எகிறியதும் படம் தாணு கைக்கு மாறியது” என்று கூறியிருந்தார். 
 
 
தலைவா இசைவெளியீட்டு விழாவில் சந்திரசேகர் “தலைவா திரைப்படத்தின் கதை எனக்கே தெரியாது. நானும் உங்களைப் போலத்தான் படத்தைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று பேசியதும், விழா நடந்துகொண்டிருக்கும்போதே அவர் கிளம்பிவிட்டதும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்க்கு வரும் கதைகளை சந்திரசேகர் தான் கேட்டு ஒப்புதல் சொல்வார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தலைவா இசைவெளியீட்டு விழாவில் நடந்த நிகழ்ச்சிகள் அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கிவிட்டது. அதன் பிறகு பேசிய விஜய்யும் அதிகம் பேசவில்லை.

தலைவா படக்குழுவிற்கு நன்றி சொன்னதோடு “படம் நன்றாக இருக்கிறது தியேட்டருக்கு சென்று பாருங்கள்” என்று முடித்துவிட்டார். ரசிகர்கள் கேட்டதும் அலட்டிக்கொள்ளாமல் பாட்டு பாடும் விஜய், நேற்று ரசிகர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் பாடாமல் மைக்கை வைத்துவிட்டு சென்றுவிட்டார். அப்பாவின் கோபத்திற்கும், அரசியல் நெருக்கடிகளுக்கும் சம்மந்தம் இருக்குமா? இல்லையென்றால் ‘தலைவா’ விஜய் ஏன் மூட்-அவுட்டில் இருக்கிறார் என்ற கேள்விகளை ரசிகர்கள் தங்களுக்குள்ளே பரிமாறிக்கொள்கின்றனர்.

5 comments:

  1. இருக்குறதை விட்டு பறாக்குறதுக்கு ஆசைப்படும் விஜய்..., வ்வ்றேன்ன சொல்லா?!

    ReplyDelete
  2. ஒவ்வொரு தடவையும் இவர் படத்த பார்த்துட்டு செத்து செத்து பிழைக்க வேண்டியதாப் போச்சு ஹி ஹி...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!