15 July, 2013

காதலில் இதற்கு மட்டும் தடையில்லையா...?

விஜய் நடிக்கும் நண்பன் விமர்சனம் விரைவில்...

 உன் பிரிவு
நான் வாழ்வதற்கு சாத்தியமே....

என்னில் உன் நினைவுகள் 
அதிகம் என்பதால்.....



வலி கொஞ்சம் அதிகம்தான்
இருந்தாலும்....
தடைவிதிப்பதில்லை காதல்

வைத்திருப்பரையே தாக்கும் 
அதிசய ஆயுதம் 
இந்த காதல்...



நீ இல்லாத இரவில்
நிலவுக்கூட எனக்கு 
சூரியன்தான்....!


பூக்களோடு மோதி காயப்பட்டு
தென்றலோடு உரசி உயிர்வலிக்க
மழைகளில் நனைந்து கரைந்துப்போகிறேன்...

காதல் இன்னுமென்னை
என்ன செய்யுமோ...?



நிறைய நாட்கள் 
இந்த உலகில் வாழலாம் 
என்று நினைக்கிறேன்...!

இந்த காதல் விடாது 
போலிருக்கிறதே...?



உன்னைக் கானாமல் திரும்பும் போதெல்லாம்
என் உயிருக்கு தெரியாமல் 
நான் மரணப்பட்டுபோகிறேன்...



எனக்கு மெயிலில் வந்த படங்களுடன்
எனது காதல் கவிதைகள் கைகோர்க்கிறது.....

தங்கள் வருகைக்கும்.. கருத்துக்கும் மிக்க நன்றி...!
மீள்பதிவு...

8 comments:

  1. ரசிக்க வரிக்கும் வரிகளுடன் படங்கள் அட்டகாசம்...!!!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நீ இல்லாத இரவில்
    நிலவுக்கூட எனக்கு
    சூரியன்தான்....!

    வைத்திருப்பரையே தாக்கும்
    அதிசய ஆயுதம்
    இந்த காதல்..

    இந்த ரெண்டும் செம சூப்பர் பிரதர்...
    எல்லாத்தவிட படங்கள் சூப்பரோ சூப்பர்...
    கலக்கல்...

    ReplyDelete
  3. படமும் கவிதையும் நச்...

    ReplyDelete
  4. படங்கள் அனைத்தும் அருமை.. கடைசி கவிதை அழகு..

    ReplyDelete
  5. அருமையான காதல் வரிகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. பட்னக்களும் , கவிதையும் அழகு

    ReplyDelete
  7. வைத்திருப்பரையே தாக்கும்
    அதிசய ஆயுதம் இந்த காதல்...//அற்புதமான உண்மை

    ReplyDelete
  8. கவிதை அழகு
    படங்கள் அழகோஅழகு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!