16 July, 2013

கணினியில் இப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கிறதா?



பில் கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

இப்படிக்கு,

சர்தார்ஜி' 
******************************* 
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவனின் மனைவி, தன் கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த எண்ணினாள்.

ஒரு நடு இராத்திரிப் பொழுதில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள்.

பேய் போன்று தன்னை உருவகப் படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின் பின்னே ஒழிந்திருந்தாள்.

கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள்.

எந்தவிதப் பயமும் இன்றிக் கணவன்: யார் நீ

மனைவி: நான் தான் பேய்!!

கணவன்: ஓ அப்படியா நல்லது என் கூட வீட்டுக்கு வா உங்க அக்கா ஒருத்தியை தான் நான் கல்யாணம் செஞ்சிருக்கேன் ..
(ரசித்தது)
 
*******************************
மரங்களை அழித்தால் 
மரிப்பது மண்கூடத்தான்....!

12 comments:

  1. ஜோக் அதான் இரண்டாவது
    ஜோக் இல்ல.
    ஷாக் .

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  2. மனைவி ஜோக் சூப்பர்...

    ReplyDelete
  3. ரெண்டாவது ஜோக் சூப்பர்

    ReplyDelete
  4. ஆமா கேட்ஸ் - காப்ஸ் லாக் பண்ணிட்டாரு சர்தார்ஜி - எப்படி ரிலீஸ் பண்றதாம் ?????

    ஆமா கேட்ஸ் - காப்ஸ் லாக் பண்ணிட்டாரு சர்தார்ஜி - எப்படி ரிலீஸ் பண்றதாம் ?????

    ReplyDelete
  5. கேட்ஸ் - எண்டர் இருக்கு - எக்ஸிட் இல்லையே - போனவன் எல்லாம் திரும்ப வர வேண்டாமா ?

    ReplyDelete
  6. அந்த சர்தார் ஜோக் எப்பவோ படிச்சதுதான், ஆனால் கடைசி ஜோக்தான் செம சிரிப்பு ஹி ஹி...

    ReplyDelete
  7. ரூம் போட்டு யோசிப்பாங்களோ? அருமை ரசித்தேன்

    ReplyDelete
  8. பில் கேட்சுக்கு புரியற மொழியில எழுதியிருந்தா அவரும் ரசிச்சிருப்பாரில்ல? ஒருவேளை ஏன் இப்படி நம்மால யோசிக்க முடியலன்னும் நினைச்சிருப்பார்.

    ReplyDelete
  9. கம்ப்யீட்டர் கதை நிறைய பேர் முகனூலில் பகிர்ந்தது...மரங்களின் மரணம் மண்ணின் மரணம்---அருமை...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!