20 July, 2013

பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா..! இந்த மரம்செடியெல்லாம் வேண்டாம...!



உலகெங்கும் மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பலருக்கும் சில நேரங்களில் யோசிக்கத் தோன்றும். ஆனால் மக்கள் யாரும் சும்மா இல்லை. எதையாவது யோசித்துக் கொண்டுதான் உள்ளனர். அப்படித்தான் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு குரூப் வித்தியாசமான தெரு விளக்கை பரிந்துரைத்துள்ளது. 

வழக்கமாக கரண்ட் கம்பம் நட்டு அதில் லைட்டைப் பொருத்தி, கரண்ட் கொடுத்து பளீரென லைட்டை எரிய விடுவோம். ஆனால் இவர்கள் சற்று மாற்றி யோசித்துள்ளனர். அதாவது எரியும் மரத்தை இவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அது எப்படி மரம் எரியும் என்று கேட்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு ஸ்லைடாக பாருங்கள், விஷயம் புரியும்.


 

நூதனத் திட்டம்...
 

இந்த நூதனத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளவரின் பெயர் அந்தோணி இவான்ஸ். இவர்தான் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.
 
மரமே வெளிச்சம் தந்தால்...
வழக்கமாக விளக்குகள் மூலமாகத்தான் நாம் வெளிச்சம் பெறுவோம். ஆனால் ஒரு மரமே நமக்கு வெளிச்சம் தந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இவரது கேள்வி.


மூன்று நண்பர்களின் முயற்சி...
இவான்ஸும், அவரது தோழர்களான உயிரியல் பிரிவு நிபுணர்கள் ஆம்ரி அமிரேவ் டிரோரி, கைல் டெய்லர் ஆகியோர் இணைந்து இந்த திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளனர். அதாவது மரபணு மாற்றம் மூலம் இதை உருவாக்கியுள்ளனர் இவான்ஸும் அவரது தோழர்களும்.


தாவரத்தை ஒளிர வைக்கும் திட்டம்...
 

பயோலுமினிசென்ட் எனப்படும் ஒளி கொடுக்கும் பாக்டீரியாக்களிலிருந்து ஜீன்களை எடுத்து தாவரத்தில் செலுத்தி அதன் மூலம் அந்த தாவரத்தையே அதாவது மரத்தையே ஒளிர வைப்பதுதான் இவர்களது திட்டம்.

ஒளிரும் மரம்...
இதன் மூலம் அந்த மரமானது சிறு செடியிலிருந்தே ஒளிரக் கூடிய வகையில் வளரும். வளர்ந்து பெரிய மரமாகும் போது அது வெளிச்சத்தை வாரியிறைக்கும் ஒளிரும் மரமாக உயர்ந்து நிற்கும்.



 அவதார் உதாரணம்...
இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இந்தக் குழு வெளியிட்டு டெமோவும் காட்டியுள்ளது. அவதார் படத்திலிருந்தும் ஒரு காட்சியை இதில் இணைத்துள்ளனர்.


நிதி சேகரிப்பு...
இந்த முயற்சி பலிக்க, ஆய்வை முடிக்க நிதி சேகரிப்பிலும் இந்தக் குழு ஈடுபட்டு இதுவரை 5 லட்சம் டாலர் பணத்தையும் சேகரித்துள்ளது.



 1980 கான்செப்ட்...
1980ம் ஆண்டுகளிலேயே இந்த ஒளிரும் மரம் குறித்த கான்செப்ட் வந்து விட்டது. இந்த நிலையில் இவான்ஸின் முயற்சியின் விவரம் என்ன.. அவரிடமே கேட்டபோது அவர் சொன்னது இது. முதலில் இதை ஆராய்ச்சியாகத்தான் அணுகினேன். ஆனால் இது மிகவும் சீரியஸான ஒன்றாக இப்போது மாறியுள்ளது.


சிறிய ஜீனோம் செடி...
நான் அரபிடோப்சிஸ் தலியானா என்ற செடியை எனது ஆராய்ச்சிக்கு எடுத்துள்ளேன். இந்த செடிதான் எனது ஆய்வுக்குப் பொருத்தமானது. இந்த செடிதான் ஒளிரும் தாவரமாக இருக்க பொருத்தமானதும் கூட. இதன் ஜீனோம் மற்ற செடிகளை விட சிறியது என்பதும் இன்னொரு காரணம்.


செடியோடு, சாப்ட்வேரை செலுத்தி...
கடல் பாக்டீரியாவான விப்ரியோ பிஷ்ஷெரி-யிலிருந்து நாங்கள் ஜீன்களை எடுத்து இந்த செடியில் செலுத்துகிறோம். இதற்காக ஜீனோ் கம்பைலர் என்ற சாப்ட்வேரையும் பயன்படுத்தியு்ளோம். எங்களது திட்டத்திற்கு ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார் இவான்ஸ்.

8 comments:

  1. பாராட்டப்படவேண்டிய முயற்சி!

    ReplyDelete
  2. சிறப்பான முயற்சி... அந்தோணி இவான்ஸ் அவர்களுக்கும், அவரது நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  3. ஆச்சர்யமிக்கத் தகவல் !

    ReplyDelete
  4. பிரம்மிக்க வைக்கும் விஞ்ஞான வளர்ச்சி .தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. வியக்க வைக்கும் முயற்சி அவர்களுக்கு என் வாழ்த்துக்களும்
    பாராட்டுக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  6. நல்லதொரு ஆராய்ச்சி. நடமுறைக்கு வந்தா நல்லாதான் இருக்கும்

    ReplyDelete
  7. ஆச்சர்யமான விசயம்.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  8. நல்ல முயற்சி

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!