29 July, 2013

இது எல்லாமே வேஷம் தானே...!



ஒருமுறை ஒத்திகை பார்த்துவிட்டு
அழுகிற உலகம்...!


முழதாய் ஒப்பனைசெய்துக்கொண்டு
சிரிக்கும் உதடுகள்...!


நன்றாக வாழ்கிறவனைக்கண்டு
எரிகிற வயிறுகள்...!


நாணயத்தை பார்த்தால் மட்டும்
நீளுகிற நட்பு...!


வலியுள்ளவனை காலில் விழவைக்கும்
நாகரீக கலாச்சாரம்....!


எவ்வளவு தேடிப்பார்த்தும்
கிடைக்கவில்லை நிஜங்கள்...!


வாழ்க்கை ‌மேடையில் அரங்கேறுகிறது
வேஷம் கட்டிய நாடகங்கள்...!


9 comments:

  1. ஒப்பனைகளேயே பார்த்துப் பழகிவிட்டக் கண்களுக்கு ஒப்பனையற்ற முகங்களும் ரசிப்பதில்லை பலருக்கு.

    ReplyDelete
  2. உலக்மே ஒரு நாடகமேடை(செகப்பிரியர்)!

    ReplyDelete
  3. உண்மையை சொல்லும் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. உண்மைதான் சகோதரரே...
    அத்தனையும் ஒப்பனை,வேஷம், நாடகம் வாழ்க்கையே நடிப்புத்தான்...

    சிந்திக்க வைக்கும் கற்பனை!

    வாழ்த்துக்கள்!

    த ம.5

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - வாழ்க்கையே நாடக மேடை தான் - நடிப்பவர்கள் மாந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. அரங்கேறும் வேஷங்களை காட்டிவிட்டீர்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!