30 July, 2013

பேஸ்புக்கில் இந்த வார கலக்கல் ஜோக்ஸ் / மற்றும் கேபிள் சங்கர் /



"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"

"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.

**********************************

எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே..

அப்படி என்னா கேட்டாரு?"

"இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"

****************************************

ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற ஏளனத்துடன் சொன்னார்;

“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...?”
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

******************************
 பிரபலமான அமைச்சர் ஒருவர், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கினார்.

அந்தக் காரை ஓட்டுவதற்கு டிரைவரும் இருந்தார்.

ஒரு நாள் உல்லாசமாக வெளியில் செல்கையில், தன் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அமைச்சருக்கு எழுந்தது.

உடனே டிரைவரிடம்,

"நீ சிறிது நேரம் ஓய்வுஎடு. நான் சிறிது நேரம் காரை ஓட்டுகிறேன்."என்றார்.

அதனை ஏற்க மறுத்த‌ டிரைவர் சொன்னார்,

"நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக் கொள்கிறேன்"

"ஏன் அப்படி சொல்கிறாய்?" கேட்டார் அமைச்சர்.

அதற்கு டிரைவர் சொன்னார்,

"ஏனெனில் இது கார். நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது ஒன்றும் சர்க்கார் அல்ல. கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விடுவதற்கு"
*****************
இந்த வாரம் பேஸ்புக்கில் கலக்கிய நகைச்சுவைகள்...
நான் ரசித்ததை நீங்களும் ரசியுங்கள்..!

*****************
 இன்று  பிறந்தநாள் காணும் நண்பர் கேபிள் சங்கர் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

12 comments:

  1. ஹா....ஹா.... நல்ல டிரைவர்...!

    கேபிள் சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நகைச்சுவை அருமை ! சகோதரர் கேபிள் சங்கர் அவர்களுக்கும்
    எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இங்கே உரித்தாகட்டும் .

    ReplyDelete
  3. குட் ஜோக்ஸ்! கேபிள் சங்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. கார் ஜோக் நல்லா இருக்கு

    ReplyDelete
  6. அன்பின் சௌந்தர் - அருமையான ஜோக்ஸ் - இரசித்தேன் - அன்பின் கேபிள் சங்கருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. கேபிள் சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. கேபிள் சங்கர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். முதலாளியாக இருப்பதின் அர்த்தம் உள்ள நகைச்சுவை மிகச்சிறப்பு.

    ReplyDelete
  9. ஹா... ஹா...
    அனைத்தும் அருமை...
    கேபிள் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வாங்க...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!