10 September, 2013

ஒருபோதும் உடன்பாடில்லை எனக்கு...!



 ஒவ்வொறு சந்திப்பிலும் 
முழுதாய் பேசிவிட முடியவில்லை
நினைத்த அத்தனையையும்...!

ஒவ்வொறு கடிதத்தையும்
எழுதி முடிக்கும்போது மிச்சம் இருக்கிறது 
சொல்லவந்த வார்த்தைகள்...!

ஒவ்வொறு விடியலிலும்
என்னை விட்டு விலகாமல் இருக்கிறாய்
இன்னும் முடியாத கனவுகளில்...!

இதயம் சென்றுவிட்டு திரும்பும்
என் அத்தனை அணுக்களும்
உன்னைப்பற்றிய நினைவோடே திரும்புகிறது...!

இன்னும் எவ்வளவு முயன்றும் 
என்னால் தவிர்க்க முடிவில்லை
என் கவிதைகளில் உன் ஆக்கிரமிப்பை...!

காதலை சொல்லி விடுதலை கொடு...!
நான் நானாக இருந்துக்கொண்டு
நீயாக அலைவதில் உடன்பாடில்லை எனக்கு...!


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

7 comments:

  1. நீங்கள் கேட்கும் விடுதலையை யாரும் தர முடியாது ,சௌந்தர் ![திருடனாப் பார்த்து திருந்தணும்...அவ்வவ் ]

    ReplyDelete
  2. கவனம் .இப்படியே போனால் தான் கவிதையைத் தொடர்ந்து எழுத முடியும் .திடீர் என்று கதையைச் சுருக்கச் சொல்லிக் கேட்டால் கவிதை மகள் ஓடி விடுவாள் :))))))) வாழ்த்துக்கள் சகோ .ஏதோ கொஞ்சம் ஏமாற்றம் ,காதல் ,சண்டை
    பாசம் என்று இழுபட்டால் தானே கவிதைகளையும் கிறுக்க முடியும் ?..:)))))

    ReplyDelete
  3. காதலை சொல்லி விடுதலை கொடு...!
    நான் நானாக இருந்துக்கொண்டு
    நீயாக அலைவதில் உடன்பாடில்லை எனக்கு...//

    அருமையான வரிகள்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


    ReplyDelete
  4. அன்பின் சௌந்தர் - கவிதை அருமை - நன்று நன்று - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. சௌந்தர்.... மற்ற கவிதைகளைவிட நீங்கள் எழுதும் காதல் கவிதைகள் நான் படித்திராத பல உணர்வுப்பரிமாணங்களுடன் ரசிக்கும்படி மிக அருமையாக இருக்கிறது... தொடர்ந்து பல காதல் கவிதைகளை எங்களுக்கு வழங்குங்கள் நண்பா...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!