08 September, 2013

ஏன் இந்த கோவம்..?




70 வயதைக் கடந்தஜென்குரு ஒருவர் இருந்தார். அவர் 30 வயது வாலிபனைப்போல் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார். ஒரு நோய் நொடி இல்லை.


எந்த வேலையாக இருந்தாலும் சுறுசுறுப்பாகத் தானே செய்து கொள்வார். இயற்கையிலேயே அவருக்கு ஒரு கால் சற்று ஊனம். அதனால் சிறிது சாய்ந்து நடப்பார். ஆனாலும் அந்த ஊனத்தை எண்ணி அவர் கவலைப்பட்டதே கிடையாது.



ஒரு நாள்...


தனக்குத் தேவையான காய், கறி, பழங்கள் வாங்குவதற்காக ஒரு பையை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றார்.



அப்போது..


எங்கோ வேடிக்கை பார்த்தபடி வேகமாக வந்த ஒரு வாலிபன் அவர் மீது மோதிவிட்டான்.



தள்ளாடிய ஜென் குரு அப்படியே நின்றுவிட்டார். ஆனால் வாலிபன் நிலைதடுமாறிக் கீழே விழுந்துவிட்டான். அவன் கைகளிலும் முழங்காலிலும் சிறிது அடிப்பட்டுவிட்டது. அந்த வலியின் காரணமாக அவனுக்குக் குருவின் மேல் கோவம் வந்தது.



வேகமாக எழுந்து அவன், ”ஏ கிழவா! அறிவில்லையா உனக்கு..? இப்படித்தான் வேகமாக வந்து என் மீது மோதுவது? கால்தான் சரியில்லையே, பேசாமல் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டியதுதானே. கடை வீதியில் உனக்கென்ன வேலை..?” என்று காட்டுக்கத்தல் போட்டான்.




ஜென் குரு அமைதியாக அவனைப் பார்த்தார்.


“நண்பனே..! எனக்குக் கால் சரியில்லை. அதனால் உன் மீது நான்தான் மோதிவிட்டேன். தவறு என்மீதுதான். ஆகவே உன்னிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..”



ஒரு வேளை உன்மேல்தான் தவறு என்பதை நீ உணர்ந்தால் அதைப்பற்றி கவலைப்படாதே. தொடர்ந்து அதையே நினைத்து உன்னை வருத்திக் கொள்ளாதே. அது உன் உடலைத்தான் கெடுக்கும். அது பெரிய துன்பத்தில் உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்..!” என்றார் ஜென் குரு அமைதியான குரலில்.



அவரது பேச்சு அவனை உலுக்கிவிட.. ”ஐயா..! மகானே..! நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும்!” என்று சொல்லியபடி அவரது கால்களில் விழுந்தான்..


புன்னகைத்த ஜென் குரு அந்த இடத்தை விட்டு அகன்றார்.


மக்களே கோவமும், ஆத்திரமும் மனிதனை முட்டாளாக்கிவிடுகிறது. உடல்நலம் கெடுவதற்கும் இதுதான் காரணம். கோவத்தை குறைத்துக்கொள்வோம்...! வாழ்க்கை நல்லதாய் இருக்கும்.

4 comments:

  1. கதை அருமை நண்பரே.

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

    என்ற குறளை நினைவுபடுத்தியது கதை.

    நன்று.

    ReplyDelete
  2. எந்த போதி மரம் உங்களுக்கு இந்த ஞானத்தை தந்தது ,சௌந்தர் ?

    ReplyDelete
  3. கோவம் தன்னையும் கெடுக்கும். தன்னை சார்ந்தவங்களையும் கெடுக்கும்!!

    ReplyDelete
  4. வணக்கம்
    அண்ணா

    கதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!