02 September, 2013

நான் நாத்திகனல்ல...




கட்டும் காவியும்
சூட்டும் குல்லாவும்
நெய்யப்பட்டது ஒரே நூலில்தான்
மனம் இதனை ஏன் மறந்துபோயிற்று...!


நானும் கடைப்பிடிக்க கற்றுக்கொண்டிருப்பேன்
சாதியின் பெயரை இரத்த அணுக்களில்
அடைக்கப்பட்டிருந்தால்...


பசிக்காத வயிறும்

கரையாத கண்களும்
கலங்காத மனமும்
இன்னும்  காணமுடியவில்லை இந்த மண்ணில்...


இழக்க எத்தனையோ இருக்கிறது
சாதி மதக்கல்வெட்டுக்கள்
இந்த தேசத்தில்...


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

4 comments:

  1. சாதி கல்வெட்டாக இருப்பதில் புதுமை ஒன்றுமில்லை
    சாதியைக் கல்வெட்டாகக்குபவரகள் இருப்பதுதான் வேதனை

    ReplyDelete
  2. பசிக்காத வயிறும்
    கரையாத கண்களும்
    கலங்காத மனமும்
    இன்னும் காணமுடியவில்லை இந்த மண்ணில்...
    >>
    வெக்கப்பட வேண்டிய விசயம்.

    ReplyDelete
  3. இழக்க எத்தனையோ இருக்கிறது.. உண்மை தான். சாதி மத பேய்களை விரட்டி மனிதர்களாக இருப்போம்.

    ReplyDelete
  4. சீரழிவுகள் பலதும் கல்வெட்டுக்களாக மனதில்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!