04 September, 2013

பதிவர்கள் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்...!







வணக்கம் மக்களே...!
சென்னையில் நடைப்பெற்ற இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. மிகவும் குறைந்த காலத்தில் துவக்கப்பட்டு இந்த அளவு சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு அதனை சார்ந்த விழா குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த பதிவர் சந்திப்பை விட அதிகமான பதிவர்கள் இந்த விழாவுக்கு வருகைபுரிந்திருந்தனர். இன்னும் சிலபேர் வராதது ஏமாற்றமே. அவர்கள் முறையான அழைப்பு இல்லை அதனால் வரவில்லை என்றார்களாம். (உதாரணத்திற்கு சிபி செந்தில்குமார்)  அடுத்தமுறை அவர்களுக்கு தபாலில் வெற்றிலைப்பாக்கு வைத்து அழைக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.



வெற்றிகரமாக முடிந்தது என்று பலபேர் பலபதிவுகள் எழுதிய வண்ணம் உள்ளனர். அதே வெற்றி சந்திப்பு என்று மார்த்தட்டுவதைவிட இந்த சந்திப்பில் இருக்கும் சில நெருடல்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


உண்மையில் இந்த பதிவர் சந்திப்பு வெற்றிப்பெற்றதா என்று ஒவ்வொறு பதிவரும் யோசிக்க வேண்டும்.


முதல் பதிவர் சந்திப்பு எந்த விதத்திலும் குறைவில்லாமல் சிறப்பாக இருந்தது. அனைத்து பதிவர்களும் சிறப்பான முறையில் கையாளப்பட்டார்கள். தனக்கு பிடித்த பதிவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடி... கவியரங்கள், கௌரவித்தல், சிறப்புவிருந்தினர் என மிகவும் அழகாக வடிவகைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பதிவர் சந்திப்பு என்னை போன்று நிறைய பதிவர்களின் மனதை கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்....


முதலில் இடத்தேர்வு....



இந்த அரங்கம் பிரதான சாலையில் இருந்தாலும் உள் அரங்கம் அனைவரையும் அனைவரும் பார்த்துக்கொள்ளகூடிய வகையில் இல்லை... இதுப்போன்ற அரங்கம் மேடையில் இருப்பவர்களை பார்க்கும் வகையில் மாத்திரமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உடன் இருப்பவர்கள் யார் என்று தெரியாத பட்சத்தில் இந்த அரங்கம் சரி ஆனால் அனைவரும் பார்த்துக்கொள்ள இது வசதியாக இல்லை.



இந்த பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த அனைத்து பதிவர்களும் அரங்கினுள் அவ்வப்போது மாத்திரமே தலைக்காட்டினார்கள். முக்கியமான நிறைய பதிவர்கள் அரங்கிற்கு வெளியேவும், வரண்டாவிலுமே இருந்தார்கள். இவர்கள் விழா அரங்கினுள் முழுமனதாக இருந்ததுபோல் தெரியவில்லை.



பெரும்பாலான சென்னைபதிவர்கள் இருக்கைகளில் அமைந்து இருக்க வில்லை.  இவர்களை அரங்கினுள் இருந்து வெளியே வந்தால்தான் பார்க்க முடிந்தது. இதுவே அவர்களின் ஈடுபாட்டை அப்பட்டமாக காட்டியது.



மேலும் பதிவர்கள் அறிமுக நிகழ்வு ஏதோ சம்பரதாயம் போல் தான் தோன்றியது. புதுமுக மற்றும் வெளியில் வந்த பதிவர்களை முதன்மை படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. அப்படி அறிமுகப்படுத்திக்கொள்பவர்களை யாரும் கவனித்ததுபோலும் தெரியவில்லை.

பதிவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் இருக்கிறது என்று பல்வேறுபதிவுகளில் வெளிப்படுத்திய விழாக்குழுவினர்கள் விழா நாளன்று மிகவும் சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அதுபோல ஏதும் இல்லை என்பது போல் சப்பென்று முடிந்துவிட்டது. கடைசியில் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியதாயிற்று.


எனது அடுத்த கேள்வி ஏன் சில பதிவர்களையே சிறப்புறை ஆற்றவைத்திருக்க கூடாது. உதாரணத்திகு உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள், கேஆர்பி செந்தில் அவர்கள், சில தொழிற்நுட்ப பதிவர்கள், விக்கி உலகம் வெங்கட், இன்னும் சில மூத்தப்பதிவர்கள் (வயதில்) இப்படி பலரை தன்னுடைய அனுபவங்களையும் அவர்களுடைய பயனுள்ள தகவல்களையும் சிறப்புறையாக பயன்படுத்தியிருக்கலாம்.

நேரத்தை மிகவும் கச்சிதமாக கையாண்டு பதிவர்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த பதிவர்களை, மூத்த பதிவர்களை கவுரவித்தல், கவியரங்கம், விவாத மேடை, கலை நிகழ்ச்சிகள், என ஏற்பாடு செய்திருந்தால் மேடை சிறந்திருக்கும்.



பதிவர் அறிமுகம் இனிதேவையில்லை என்று நினைக்கிறேன்.‌ பெரும்பாலான பதிவர்கள் அனைவரும் அறிந்ததே. புதிய பதிவர்களை வேண்டுமானால் அறிமுகத்தில் பயன்படுத்தியிருக்கலாம். பெரும்பாலான நேரம் அதிலே முடிந்து விட்டது. சென்னைபதிவர்களை அனைவருக்குமே தெரியும் அவர்களுக்கு அறிமுகம் தேவையோ இல்லை. இதனால் நேரம் மாத்திரமே கரைந்து போனது.



புத்தக வெளியீடு பெருமைக்குறியதுதான் அதற்காக உணவு இடைவேளைக்கு பிறகு மொத்த நேரத்தையும் இந்த நிகழ்வே எடுத்துக்கொண்டது. இது நிறைய பதிவர்களை பாதியிலே கிளம்ப வைத்துவிட்டது. கொஞ்சம் விரைவாக முடிந்திருக்கலாம்.


சிறப்பு அழைப்பாளர் திரு பாமரன் அவர்கள் சிறப்பாக தன் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் ஆனால் அவருக்கும் சரியான நேரம் ஏற்படுத்தி தரவில்லை. உணவு இடைவேளை என்பதால் அவர் தன்னுடைய சிறப்புரையை விரைவாக முடித்துக்கொண்டதாக தெரிகிறது. சிறப்பு விருந்தினரை மாலை நேரத்தில் பயன்படுத்திக்‌கொண்டிருந்தால் பதிவர்களும் இருந்திருப்பார்கள். சிறப்பு விருந்தினரும் தன்னுடைய கருத்தை விரிவாக ‌வெளிப்படுத்தியிருப்பார்.



உணவு விஷயத்தில் எந்த குறையும் சொல்லமுடியாத அளவுக்கு இருந்தது. சென்ற பதிவர்சந்திப்பு போல் அமரவைத்து பரிமாறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இடம் அதற்கு வதியாக இல்லை.



சென்ற பதிவர் சந்திப்பில் தனக்கு பிடித்த பதிவர்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தனர் ஆனால் இந்த சந்திப்பில் யாரும் யாருடனும் அதிகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுபோல் தெரியவில்லை.

தனித்திறன்  போட்டியில் அந்த நாடகம் இந்த நாடகம், பதிவர்களை கலாய்ப்போம் தவறாக எண்ணக்கூடாது என்றெல்லாம் அலம்பல் செய்திருந்தார்கள்... அவர்கள் யாரையும் அங்கு காணவில்லை. மயிலன் நல்லதொரு கவிதையை வாசித்தார் அதை கைத்தட்டி ரசிக்ககூட ஆளில்லை.... என்பேர் பிரம்மன் என்ற தலைப்பில் வந்த நான் அரங்க சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவிதை வாசிப்பதை தவிர்த்து விட்டேன்....  (அந்த கவிதை கண்டிப்பாக பதிவாக வரும்)




நிகழ்ச்சிகள் மாலை 6.00 மணிக்கு முடியும் என இருந்தது ஆனால் பெரும்பாலான பதிவர்கள் மதிய உணவுக்கு பிறகு கிளம்ப ஆரம்பித்துவிட்டார்கள். (நான் சரியாக 4.45 மணிக்கு கிளம்பினேன்). மாலை நிகழ்வு ஒன்றுமில்லை என்ன இருக்கிறது என்று கூடதெரியவில்லை.



மேடையை ஒரு சில சென்னைப்பதிவர்கள் மாத்திரமே ஆக்கிரமித்தார்கள். பிரபல பதிவர்கள் என்ற போர்வையில் இவர்களே முன்னிலைப்படுத்தப்படுவது வளரும் பதிவர்களுக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை.



நிகழ்ச்சிகளை தொகுக்க நாள் முழுவதும் ஒருவரே எனும் போது பல்வேறு பதிவர்களிடையே கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது. பலபேரிடம் பகிர்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். (அந்த பொருப்பை அவரிடம் தரவில்லை என்றால் அவர் பதிவர் சந்திப்புக்கு வந்திருப்பாரா என்று தெரிவில்லை).



மதுமதியின் குறும்படம் ஓடும்போது மட்டும் அரங்கம் கொஞ்சம் அமைதியாக இருந்தது. அதுதவிர்த்த பிற நேரங்களில் அமைதியில்லை. மேலும் பதிவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது அரங்கம் காலியாகவே இருந்தது. (மதுமதியின் குறும்படம் விமர்சனம் அடுத்த பதிவில்).







இக்கருத்துக்களை ஒருதலைப்பட்சமாக பாராமல் நடுநிலையோடு சொல்லுங்கள்.... இந்த பதிவர் சந்திப்பு வெற்றி அடைந்ததாஎன்ற...?

சிலர் கூறலாம் நீங்கள் முன்நின்று செய்ய வேண்டியதுதானே என்று...? முடிந்த விஷயத்துக்கு யாரும் யாரையும் குறைசொல்வது சரியானதாக இருக்காது. அடுத்துவரும் காலங்களில் இவைகளை மனதில்வைத்து நடந்துக்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில்தான் என்கருத்துக்களை வெளிப்படையாக இங்கு பதிவிட்டிருக்கிறேன்.

இது குறித்து இன்னும் விவாதம் இருப்பின் பதிவு தொடரும்...!

158 comments:

  1. பதிவர் சந்திப்பு விமர்சனம்....

    open mind soundar.

    ReplyDelete
    Replies
    1. இது நமக்காக நாமே ஏற்படுத்திக்கொண்ட விழா இதில் நிறைகுறைகளை அலசுவதால் மட்டுமே எதிர்காலத்தில் ஆரோக்கியமாகதாக இருக்கும் அதனால்தான் இந்த பதிவு...

      Delete
  2. பதிவர் சந்திப்பைப் பொருத்தமட்டில்
    நடத்துபவர் கலந்து கொள்பவர் என்கிற
    நிலைப்பாட்டில் நான் பார்ப்பதில்லை
    எனவே குறைகள் என இவைகளைக் கொள்ளாமல்
    அடுத்தமுறை இன்னும் சிறப்பாகச் செய்ய
    கூறியுள்ள நல்ல ஆலோசனைகளாக இவற்றை
    குறித்துக் கொள்கிறேன்.
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த விழாவை குறைகூறுவது என்பது நம்மை நாமே குறைக்கூறிக்கொள்வது போல் ஆகிவிடும்...

      சில விஷயங்களை சுட்டிக்காட்டவே இந்த பதிவு...

      Delete
  3. அடுத்தமுறை இவ்வாறு தவறாக எண்ணாத அளவுக்கு செய்யலாம் உங்கள் ஒத்துழைப்புடன்.விழாவுக்கு தாமதமாக வருவோரையும் வெளியில் நின்று கொண்டு பேசுபவர்களையும் விழா ஏற்பாட்டாளர்கள் என்ன செய்து விட முடியும்?

    ReplyDelete
    Replies
    1. அவரவர் உணரவேண்டும் ஐயா... விழா ஏற்பாட்டாளர்கள் அரங்கில் இருந்திருந்தால் அனைவரும் விழா அரங்கில் இருந்திருப்பார்கள்...

      சரியான வழிகாட்டல் இல்லை என்தும் என்னுடைய ஆதங்கம்...

      அடுத்த முறை இந்த தவறுகளை களைந்துக்கொள்ள வேண்டும்...

      கண்டிப்பாக அடுத்த முறை என்னுடைய பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும்

      Delete
    2. /// சரியான வழிகாட்டல் இல்லை... ///

      அடுத்தமுறை நீங்கள் தான் வழிகாட்டி...

      Delete
  4. அடுத்த சந்திப்பு - மதுரையில்... அனைத்தும் கவனத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அடுத்த வருடம் யார் நடத்தினாலும் இதை கவனத்தில் கொண்டால் நல்லதுதான்

      Delete
    2. தனபாலன் நீங்களும் இங்கே தவறு நடந்து இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா என்ன?

      Delete
    3. யோவ் நாரதரே...நீ வேற ஏன்யா பிரச்சனையை மூட்டிவிடுற...

      Delete
    4. naradhar swamy : தவறா...? இந்த ஜிலிபாங்கி வேலை எல்லாம் வேண்டாம்.... இறங்கி வேலை செய்தால் தெரியும்....

      Delete
  5. நல்ல ஆலோசனை

    ReplyDelete
  6. தைரியமான பதிவை மனமுவந்து வரவேற்கிறேன் .

    ReplyDelete
  7. சம்பிராதயமாக அருமைனு சொல்லிவிட்டு ஒதுங்காமல் ,குறை நிறைகளை அலசியுள்ளீர்கள்,இதனை ஒரு பாசிட்டிவ் கருத்தாகவே சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக்கொண்டு செயல்படலாம்.

    //இந்த அரங்கம் பிரதான சாலையில் இருந்தாலும் உள் அரங்கம் அனைவரையும் அனைவரும் பார்த்துக்கொள்ளகூடிய வகையில் இல்லை... இதுப்போன்ற அரங்கம் மேடையில் இருப்பவர்களை பார்க்கும் வகையில் மாத்திரமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உடன் இருப்பவர்கள் யார் என்று தெரியாத பட்சத்தில் இந்த அரங்கம் சரி ஆனால் அனைவரும் பார்த்துக்கொள்ள இது வசதியாக இல்லை.

    இந்த பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த அனைத்து பதிவர்களும் அரங்கினுள் அவ்வப்போது மாத்திரமே தலைக்காட்டினார்கள். முக்கியமான நிறைய பதிவர்கள் அரங்கிற்கு வெளியேவும், வரண்டாவிலுமே இருந்தார்கள். இவர்கள் விழா அரங்கினுள் முழுமனதாக இருந்ததுபோல் தெரியவில்லை.//

    இடத்தேர்வு செய்ய அனைவரும் உதவ முன்வராத சூழலில் ,சிலர் மட்டுமே ஈடுபடுவதால் இப்படியான சூழலை தவிர்க்க இயலாது என நினைக்கிறேன்.

    புறநகரில் இலவசமாக அரங்கு கிடைக்கும் என ஒரு பதிவரிடம் குறிப்பிட்டேன் நகரின் மையத்தில் இருந்தால் நல்லது என்றதால்,அதற்கு மேல் கருத்து சொல்லவியலவில்லை.

    பொதுவாக இணையத்தில் வெளிப்படையாக விழா ஏற்பாடுகள் குறித்து தெரிவித்து ஆலோசனைகள் கேட்கப்பட்டிருக்கலாம், விரும்பியோர் உதவ முன்வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

    மேலூம் தற்போதுள்ள சூழலில் வேறு எது சொன்னாலும் சண்டைக்கு வர சிலர் தயாராக இருப்பதால் , இத்தோட ஜூட் விட்டுக்கிறேன் அவ்வ்!

    --------------

    பின் குறிப்பு:

    அது என்னா ஆளாளுக்கு அடுத்த முறை ஈரோடு, மதுரைனு ஒவ்வொரு ஊரு பேரா சொல்லிட்டு இருக்காங்க?

    வேறு ஊரில் இடம் பெயர போவதாக ஒருவரும் அபிசியலாக அறிவிக்கவும் இல்லை ,என்ன நடக்குது?

    ReplyDelete
    Replies
    1. இடத்தேர்வில் நான் யாரையும் குறைகூறவில்லை... காலம், பொருளாதார நெருக்கடி போன்றவையும் இதில் அடங்கும் இனிமேல் இதை ஆரோக்கியமானதாக நடத்தவேண்டும் என்தே...

      Delete
    2. //////
      அது என்னா ஆளாளுக்கு அடுத்த முறை ஈரோடு, மதுரைனு ஒவ்வொரு ஊரு பேரா சொல்லிட்டு இருக்காங்க?

      வேறு ஊரில் இடம் பெயர போவதாக ஒருவரும் அபிசியலாக அறிவிக்கவும் இல்லை ,என்ன நடக்குது?
      /////


      கண்டிப்பாக இதுகுறித்து எனக்கும் சரியா தகவல் தெரியவில்லை

      விழா குழுவினர்கள் தெளிவுப்படுத்தினால் நன்றாக இருக்கும்

      Delete
    3. விரைவில் தெளிவுபடுத்தி விடலாம்...

      Delete
  8. நான் நேரில் வரவில்லை என்றாலும், நிகழ்ச்சிக்கு வந்த ஒரு சிலர் சென்ற முறை போல் இல்லை என்பதைத்தான் என்னிடமும் சொன்னார்கள். அடுத்த முறை சிறப்பாக நடைபெற இவற்றை ஆலோசனையாக எடுத்து கொள்ளலாம். ஒரு நிகழ்ச்சி சக்ஸஸ் ஆகனும்னா நிறைய பேரின் ஒத்துழைப்பும், திட்டமிடுதலும் இருக்கனுங்க!

    ReplyDelete
    Replies
    1. இந்த விழா சில பதிவாளர்கள் தங்களை முன்னிலைபடுத்தி கொள்ளவே நடத்தப்பட்டது என்பதுதான் உண்மை

      Delete
    2. அது என்னவோ உன்மைதான்யா...

      //மேடையை ஒரு சில சென்னைப்பதிவர்கள் மாத்திரமே ஆக்கிரமித்தார்கள். பிரபல பதிவர்கள் என்ற போர்வையில் இவர்களே முன்னிலைப்படுத்தப்படுவது வளரும் பதிவர்களுக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை.//

      இதுதான் இந்தப் பதிவோட பன்ச்...பன்ச்...பன்ச்...பன்ச்...

      Delete
    3. இந்த பதிவர் சந்திப்பில் மிக அதிகமான வேலைகளும் பண ஏற்பாடுகளும் செய்தவர்கள் அஞ்சாசிங்கம், சிவக்குமார், நான். நாங்கள் மேடையில் ஏறியதை பார்த்தீர்களா.

      Delete
    4. நீங்க சொல்வது ஓரளவு சரிதான்... ஆனால் போன பதிவர் சந்திப்பின் படங்களை சமீபத்தில் எல்லோருடைய வலைபூவிலும் பார்த்தபோது அப்படித்தானே இருந்தது.

      Delete
  9. உடல் நிலை காரணமாக வரமுடியாமல் போனது சௌந்தர். இன்னும் போன வருட மகிழ்ச்சி மனதில் இருக்கிறது. நீங்கள் சொல்லி இருக்கும் நிறை குறைகளை அனைத்துப் பதிவர்களுமே யோசித்து அனைவரின் ஈடுபாட்டோடு நடக்கவேண்டும்.
    நம் வீட்டுக் கல்யாணம்தான். உழைத்தால் தானெ சிறப்புறும்.
    ஒற்றுமை மிக முக்கியம்.நல்லதொரு பகிர்வு,. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக...

      அடுத்த முறை அனைவரும் சேர்ந்து விழா வெற்றியடைய செய்யவேண்டும்

      Delete
  10. நீங்கள் சொல்லியுள்ள கருத்துக்கள் அனைத்தையும் நானும் சொல்ல வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால் தைரியம் வரவில்லை. மேலும் நான் அவ்வளவு பிரபலமானவன் இல்லை. ஆகவே பதிவர் சந்திப்பை பற்றி எந்த பதிவும் இடவில்லை.

    எனக்கும் இந்த சந்திப்பு ஏமாற்றத்தையே அளித்தது. முக்கியமாக பதிவர்களுடைய அறிமுகம் வெறும் சம்பிரதாயத்துக்கு மட்டுமே என்பதுபோல் நடத்தப்பட்டது.

    சென்னையில் அரங்கம் தெரிவு செய்வதிலுள்ள சிரமங்கள் எனக்கு தெரியும். ஆகவே அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை. ஆனால் இருக்கைகளை 'தியேட்டர் பாணியில் அமைக்காமல் வட்ட வடிவில் பதிவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் வகையில் அமைத்திருக்கலாம். அதுபோன்றே ஒவ்வொரு பதிவரையும் மேடைக்கு அழைக்காமல் இருக்கையில் இருந்தபடியே cordless mic மூலம் அறிமுகப்படுத்த சொல்லியிருக்கலாம்.

    அதுபோலவே பதிவர் ஒருவர் அறிமுகம் செய்துக்கொண்டிருக்கும்போது இன்னொருவர் மைக்கை வைத்துக்கொண்டு கமென்ட் அடித்துக்கொண்டிருந்தது (வழிநடத்துபவராக இருந்தாலும்) நன்றாக இல்லை.

    இந்த யோசனைகளை இனி வரும் கூட்டங்களில் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.

    ஆனாலும் குறுகிய காலத்தில் சிறப்புடன் நடத்திய பதிவர்களுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

    ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது அனுபவமும் வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன்...

      Delete
    2. டிபிஆர்.ஜோசப் : // மேடைக்கு அழைக்காமல் இருக்கையில் இருந்தபடியே cordless mic மூலம் அறிமுகப்படுத்த சொல்லியிருக்கலாம்...// இருக்க்க்க்க்க்கலாம்... நீங்களும் வந்தால் தெரியும்...

      ppt கடைசி நேரத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரியுமா...?

      Delete
    3. //ppt கடைசி நேரத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரியுமா...?//


      அது தெரியுமா...இது தெரியுமான்னு இப்பதான்யா சொல்றீங்க.... இந்தந்த பிரச்சனைகள் இருந்ததுன்னு ஏன் நீங்க ஒரு பதிவு போடகூடாது...? குறை சொன்ன உடனேதான் இதையெலாம் சொல்லனுமா... அதை வுட்டுபுட்டு இவரோட போட்டோ எடுத்தேன் அவரோட போட்டோ எடுத்தேன்னு அதே ஹிட்ஸ் குத்தானே நீங்களும் பதிவு போட்டீங்க..

      Delete
  11. செளந்தர் நீங்க பொத்தாம் பொதுவா சொல்லவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு விவாதமெல்லம் நடத்தியிருக்காங்கன்னு கேள்வி பட்டேன். அப்ப நீங்க அதில உங்க கருத்தை சொல்லவில்லையா? ஒவ்வொருத்தரையும் ஒவ்வொருவரும் பார்க்க முடியல என்று சொல்ல முடியாது ஏன்னா வெளியில் எல்லோரும் சந்திச்சுகிட்டாங்க. ஒவ்வொருத்தர்கிட்டேயும் நம்மளை நாமே அறிமுகப்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை நீங்க கூட என்கிட்ட அறிமுகம் செஞ்சுக்கள ஆனா உங்க பக்கத்திலேதான் நான் இருந்தேன். நிகழ்ச்சிக்காக அன்பளிப்பு செஞ்சவங்களை பாராட்டி லிஸ்ட் படித்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நிகழ்ச்சிப்பற்றிய விவாதங்கள் நன்றாகத்தான் சென்றது... ஆனால் அதை செயல்படுத்தியதில்தான் தவறிருக்கிறது....


      ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள் ஆனால் அது இன்னும் சிறப்பானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

      Delete
    2. /////
      நிகழ்ச்சிக்காக அன்பளிப்பு செஞ்சவங்களை பாராட்டி லிஸ்ட் படித்திருக்கலாம். ///////


      உண்மைதான் நன்றாக இருந்திருக்கும்...
      இன்னும் தேவைகள் ஏதாவது இருந்திருந்தால் கூட அங்கு வெளிப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக உதவிகள் கிடைத்திருக்கும்...

      Delete
    3. ///////
      நீங்க கூட என்கிட்ட அறிமுகம் செஞ்சுக்கள ஆனா உங்க பக்கத்திலேதான் நான் இருந்தேன்./////

      மன்னிக்கவேண்டும் கலாகுமரன் அவர்களே...


      நான் பொதுவாக எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவன்..
      அந்த அரங்க சூழல் ஏதோ ஒரு நெருடலை ஏற்படுத்திவிட்டுவிட்டது....

      Delete
    4. கவிதை வீதி... // சௌந்தர் // : அது இன்னும் சிறப்பானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... ///

      அது என்ன சிறப்பு என்று சொல்ல முடியுமா...?

      Delete
  12. //கடந்த பதிவர் சந்திப்பை விட அதிகமான பதிவர்கள் இந்த விழாவுக்கு வருகைபுரிந்திருந்தனர்//

    Not true. Only 100+ bloggers this time, far fewer than last time.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்... அறிமுக படுத்திக்கொண்ட பதிவர்களின் எண்ணிக்கை சுமார் 115 என்று நினைக்கிறேன்....

      மன்னிக்கவும் கடந்த ஆண்டைவிட இது குறைவுதான்.. ஆனால் விருப்பம் தெரிவித்தவர்களின் பட்டியல் தெரியதாக இருந்தது...

      Delete
  13. எப்படா அந்த ஹாலை விட்டு வெளியில் வருவோம், வந்தது வந்து விட்டோம் என்று 4.30 வரை நான் அங்கிருந்தேன். அப்படி ஒரு வேர்வை..சவுண்ட் எக்கோ அடித்தது...புறநகர் என்றாலும் நல்லதா ஒரு ஹாலை பிடித்து இருக்கலாம்.அடுத்த முறை செய்யலாம்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி அமுதா கிருஷ்ணன்...

      Delete
  14. பதிவர் சந்திப்பு வெற்றி அடைந்ததா? இது ஒன்னும் போட்டி கிடையாது. எந்த எதிர்பார்ப்புமே இல்லாதவங்களுக்கு வெற்றி தோல்வி பத்தி கவலை இல்ல. ஒவ்வொருவரும் தங்கள் அருமை பெருமையை வெளிப்படுத்திக் கொள்ளும் மேடை இது இல்லை. இன்னும் சில நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாம். நேரம் இன்மை ஒரு காரணம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நேரம் போதுமானதாகத்தான் இருந்தது அதை சரியாகப்பயன்படுத்த வில்லை அவ்வளவுதான்

      Delete
    2. ///
      ஒவ்வொருவரும் தங்கள் அருமை பெருமையை வெளிப்படுத்திக் கொள்ளும் மேடை இது இல்லை/
      //////

      அருமை பெருமைகளை வெளிபடுத்த தேவையில்லை.. அவரவரர் சிறப்புகளை கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கலாம்...

      பிளாக் குறித்து நிறைய பேருக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும் அதை தொழிற்நுட்ப பதிவர்களை கொண்டு விளக்கம் அளித்திருக்கலாம் இது ஒரு அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்...

      எனக்குகூட என்பதிவில் பறந்துக்கொண்டிருக்கும் இந்த பறவையை எப்படி எழித்துக்கட்டுவது என்று தெரிவில்லை....

      கூட்டத்தில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தால் என் சந்தேகத்தை கேட்டு தெரிந்துக்கொண்டிருப்பேன்...

      Delete
    3. வெற்றி தோல்வி என்பது நம்மனதில் நிற்கும் அனுபவங்களில்தான் இருக்கிறது....

      இதை யாரும் மறுக்கமுடிளாது...

      Delete
    4. //பிளாக் குறித்து நிறைய பேருக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும் அதை தொழிற்நுட்ப பதிவர்களை கொண்டு விளக்கம் அளித்திருக்கலாம் இது ஒரு அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.// சரியா சொன்னீங்க செளந்தர்.

      Delete
    5. //எனக்குகூட என்பதிவில் பறந்துக்கொண்டிருக்கும் இந்த பறவையை எப்படி எழித்துக்கட்டுவது என்று தெரிவில்லை....

      கூட்டத்தில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தால் என் சந்தேகத்தை கேட்டு தெரிந்துக்கொண்டிருப்பேன்...//

      இது போன்ற ஆலோசனைகளை முந்தய சந்திப்பிற்கு பின்னர் சுரேகாஜி எழுதிய பதிவில் பின்னூட்டமா இட்டுள்ளேன்.

      அது போன்ற நிகழ்வுகளே பதிவர் சந்திப்பில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

      # நீங்க வந்தே மாதரம் சசியின் டிவிட்டர் பர்ட் விட்ஜெட் சேர்த்து இருக்கிங்க, அதனை நீக்கினால் டிவிட்டர் பர்ட் போயிடும்,

      அதனை நீக்க,

      Go to Your Blogger Dashboard Click >> Design >> Edit Html

      இப்போ டெம்ப்ளேட் சோர்ஸ் கோட் தெரியும்,அதில்

      ctrl+f for search பாக்ஸ் வரும் , bird கொடுத்தால் கீழ்கண்ட கோடினைக்காட்டும்,



      அப்படியே செலட் செய்து டெலிட் செய்து விட்டு சேவ் கொடுத்து வரவும் , டிவிட்டர் பர்ட் காணாமல் போயிடும் :-))

      ஹி..ஹி இது நானா உங்க பேஜ் சோர்ஸ் கோட் பார்த்து கண்டுப்பிடிச்சது,எனக்கு தெரிஞ்சதை வச்சி சொல்லி இருக்கேன், பிழைனா யாரேனும் சொல்லவும்.

      இது போல எடிட் செய்யும் முன் , டெம்ப்லேட் பேக் அப் எடுத்து வைத்துக்கொண்டால் ,தப்பாயிட்டாலும் திரும்ப சரி செய்திடலாம்.

      Delete
    6. கீழ்கண்ட கோட் என்பது வரலை,

      பாடி என்ற ஹெச்டிஎம் எல் குளோசிங் டேக்கின் கீழ்


      script டேக் ஆரம்பத்துடன் வந்தேமாதரம்சசியின் பெயருடன் ஜாவஸ்கிரிப்ட் ஆரம்பிக்கும், அதில் இருந்து

      உங்க பிளாக் பெயருக்கு அப்புறம் முடியும்

      script குளோசிங் tag வரைக்கும் செலக்ட் செய்து நீக்கவும்.மொத்தம் நான்கைந்து வரிகள் தான்.

      Delete
    7. கவிதை வீதி... // சௌந்தர் // : /// பிளாக் குறித்து நிறைய பேருக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும் அதை தொழிற்நுட்ப பதிவர்களை கொண்டு விளக்கம் அளித்திருக்கலாம் இது ஒரு அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்...///

      அதற்கு இரு ஆறு மணி நேரம் மேல் தேவைப்படும்... பரவாயில்லையா...?

      Delete
  15. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. கடும் கோவம் வந்தது. எதிர் விமர்சனங்களின் வெற்றி பார்முலாவை கையில் எடுத்து இருப்பது தெரிகிறது. இதற்கு கோவப்பட்டு விளக்கமளித்து தங்களை தரம் தாழ்த்தவோ என்னை தாழ்த்திக் கொள்ளவோ எனக்கு விருப்பமில்லை. இதுக்கு விளக்கம் சொல்றதுக்கு செவுத்துல போய் முட்டிக்கலாம். இதற்கு மேல் நான் எதுவும் விளக்கமளிக்க மாட்டேன். நோ கோவம். ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா. அகம் பிரம்மாஸ்மி. ஜெய் போலோநாத். கோவம் ஆன்மீகத்துக்கு சத்ரு.

    ReplyDelete
    Replies
    1. சில தவறுகள் என்று இவர் சுட்டிக்கட்டி இருக்கிறார். அதை ஒத்துக் கொண்டு அடுத்தடவை நடத்தும் போது அதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது கூட தெரியாத நீயெல்லாம் விழா குழுவினரா என்ன ச்சீய்

      Delete
    2. நாரதரே இதை வன்மையா கண்டிக்கிறேன்... பதிவர்கள் எல்லாரையும் ஒண்ணா சேக்குறது என்பது சும்மா கிடையாது. விழாவை நடத்தினவங்க எல்லோருமே வெட்டியா இருக்கிறவங்க கிடையாது. வேலை , குடும்பம் என பிசியா இருக்கிறவங்க... இப்படி ஒரு விழாவை ஆர்கனைஸ் பன்றதே பெரிய விஷயம்...

      ஆனா என்ன..? இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவை போட்டு கொல்லுவாங்க. ஆனாலும் முத்துக்குமார் வர்றார்,பன்னிகுட்டி,அதிசா வரார்... தனித்திறமை இருக்குனு பில்டப் பண்ணியிருக்க கூடாது.

      Delete
    3. ////
      எதிர் விமர்சனங்களின் வெற்றி பார்முலாவை கையில் எடுத்து இருப்பது தெரிகிறது.///

      இந்த பதிவை வெற்றியாக்குவதற்கோ அல்லது ஹிட்ஸ் எடுப்பதற்கோ போடப்பட்ட பதிவல்ல இது...
      என்னுடைய பதிவின் தலைப்பு எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும் ஆனால் இந்த பதிவுக்கு தலைப்பு சரியாகத்தான் வைத்திருக்கிறேன்...

      ஹிட்ஸ்க்காக என்று சொல்லலாம்..
      அப்படி ஒன்றும் இல்லை
      ஹிட்ஸ் வேண்டும் என்றால் எனக்கு தலைப்புக்கு விஜய் பவர்ஸ்டார் இருக்கிறார்கள்...

      Delete
    4. ஒன்று புரிந்துக்கொள்ளுங்கள் செந்தில்...
      பதிவர் சந்திப்பை குறைக்கூறுவது என்பது என்னையே நான் குறைக்கூறுவது போன்று...

      சில சங்கடங்கள் எனக்கு தெரிந்தது அதை பதிகிர்ந்துக்கொள்கிறேன். இதையும் நம் பதிவர்கள்தானே படிக்கிறார்கள் நமக்குள் நம் குறைகளை பதிர்ந்துக்கொள்வது என்பது தவறான அனுகுமுறைஅல்ல...

      Delete
    5. /// எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்... ///

      இதுவா வித்தியாசம்... உங்கள் கண்ணிற்கு நல்லது தெரியாதா...?

      மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன..?

      See : http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_08.html

      Delete
    6. //மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன..?

      See : http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_08.html//

      உம் இம்சை தாங்க முடியலையா .. அவனவன் இங்க அடியில பத்திகிட்டு எரியுதுன்னு இருக்கான்,... இப்ப போயி லிங்கை குடுத்து முதன்மை குணம் என்ன கடைசி குணம் என்னான்னு சொல்லிட்டு

      Delete
    7. கொட்டை... லிங்க் உனக்கில்லை...

      Delete
  16. சௌந்தர்... நான் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் கலந்துகொண்ட பதிவர்களின் சந்தோஷப்பகிர்வான பதிவுகளையெல்லாம் தவறவிடாமல் படித்து சந்தோஷப்பட்டேன்... ஆனால் உங்களின் இந்தப்பதிவும்... அதற்கு ஆமோதித்து வந்திருக்கும் ஏகப்பட்ட கருத்துக்களும் பதிவர் சந்திப்பின் இன்னுமொரு முகமா என்று எண்ணத்தோன்றுகிறது?...
    Anyhow சொல்ல நினைத்ததை தைரியமாய் சொல்லியதற்கு ஒரு தனிப்பட்ட பாராட்டு... மற்றபடி நீங்கள் கூறியதுபோன்ற குறைபாடுகள் இருந்திருந்தால் அது அடுத்தடுத்த சந்திப்புகளில் களையப்படவேண்டும் என்பதும் மறுக்கமுடியாததுதான்...
    விழா ஒருங்கிணைப்பு என்றாலே நிறைகளைப்போன்றே சில குறைகளும் இருக்கத்தான் செய்யும்... இருந்தாலும் இப்படியொரு விழாவை நடத்த திட்டமிட்டு பின்னின்று உழைத்த அனைவரையும்கூட கண்டிப்பாய் பாராட்டித்தான் ஆகவேண்டும்...

    ReplyDelete
  17. நான் விழாவிற்கு மதியம் தான் வந்தேன்! தங்களை சந்திக்க நினைத்தும் முடியவில்லை! நீங்கள் சொல்லும் சில கருத்துக்கள் ஏற்கக் கூடியவை! அடுத்த சந்திப்பில் குறைகள் களையப்படும் என்று எதிர்பார்க்கலாம்! குறைகளே கூறிக்கொண்டு இருந்தால் நம் முகத்தில் நாமே துப்பிக் கொள்வது போலாகும்! வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தவறுகளை சுட்டிகாட்டுவது தவறில்லை.சென்ற வருடம் போல இந்த வருடம் இல்லை. பதிவர்கள் ஏதோ இறுக்கத்துடன் காணப்பட்டதை கண் கூடாக பார்த்தேன்.

      பதிவர்களை தானாகவே அறிமுகம் செய்யச்சொல்வது தவறு. மேடையில் யாரவது ஒரு பிரபலம், பெயரை அழைத்து அவரைப்பற்றி சிறு குறிப்பு சொல்லி கடைசியில் அவரை பேசச்சொல்லாம். முடிந்தால் அவரின் வலைப்பூவைப் பற்றி ஒரு சிலைடு போடலாம். இது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் பதிவர் சந்திப்பில் பதிவர்களை அறிமுகப்படுத்துவதைத் தவிர வேற என்ன பெரிய வேலை... அதுதானே அவர்களுக்கு மகிழ்ச்ச்யைத் தரும்.

      Delete

  18. பதிவர் விழா குறித்த பலரது பதிவுகளைப் படித்தேன். வழக்கம்போல டெம்ப்லேட் கருத்துக்கள் தான். உங்கள் இந்தப் பதிவு வித்தியாசமாய் இருக்கிறது. குறைகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். பலவிதமான like- களும் dislike-குகளும் இருக்கும். ஆராமுதன் கருத்து உண்மையாய் இருப்பின் வெட்கப் பட வைக்கிறது. நான் வந்திருந்தால் பேச நினைத்ததை ஒரு பதிவாய் எழுதி இருந்தேன். அதை விழாவின் ஒருங்கிணைப் பாளர்கள் என்று எனக்குத் தோன்றியவர்களிடம் மின் அஞ்சலில் பகிர்ந்து கொண்டேன். நேரடி ஒளிபரப்பு ஏமாற்றிவிட்டது , அதுகுறித்து யாருமே கருத்து தெரிவித்துப் பதிவுகளில் எழுதவில்லை.எப்படி இருந்தாலும் உங்களைப் போல் நினைத்தவர்களும் கருத்து சொல்ல தைரியம் இல்லாமல் இருப்பார்கள். ஒருவரைப் புகழ்வது எளிது. குறையைச் சொல்ல மன உறுதி வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. /// குறையைச் சொல்ல மன உறுதி வேண்டும்... ///

      குறையைச் சொல்ல மன உறுதி வேண்டுமா...? நல்லது ஐயா...

      பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க! (http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html) பதிவு வீணாய் போய் விட்டதே...

      ஜின்க் சக் ஜின்க் சக் ஜின்க் சக்...

      Delete

    2. இந்தா பாருய்யா அடுத்த லிங்கை போட்டுடாரு.


      //ஜின்க் சக் ஜின்க் சக் ஜின்க் சக்...//

      இப்படி அடிக்கிறது நீங்களா அவரா..

      Delete
  19. சந்தடி சாக்குல என் வேண்டுகோளையும்(!!) கொஞ்சம் சொல்லிக்கிறேன்.... பதிவர் சந்திப்பு லைவ் டெலிகாஸ்ட்னு சொன்னாங்க...அதுக்காக காலையிலிருந்தே தயாராகி சிஸ்டம் முன்னாடி உட்கார்ந்திருந்தேன்... நிகழ்ச்சியும் ஆரம்பிச்சது.. ஒவ்வொருவரா அறிமுகம் ஆனாங்க... பாமரனும் பேசினார்.... ஆனா என்ன பேசினாருன்னு தெரியில..ஏன்னா ஆடியோ காலையிலிருந்தே மொத்தமாக சுத்தமாக வரவில்லை... யாருக்காவது தெரியப்படுத்தலாம்னா யாரை தொடர்பு கொள்வதுன்னு தெரியில... நிறைய பேர் அதற்கான லிங்க் கொடுத்திருந்தாங்க... எதிலுமே ஆடியோ வரவில்லை... எல்லோரும் ஒரே லிங்கைத்தான் கொடுத்திருந்தாங்கனு கடைசிலதான் தெரிஞ்சது... அடுத்த தடவை லிங்க் கொடுப்பவர்கள் ,ஏதேனும் டெக்னிகல் ஃபால்ட் வந்தால் இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. பிரச்சனை என்ன என்று தெரியாமல் பேசக் கூடாது... அங்கிருந்தால் என்னவென்று தெரிந்திருக்கும்... நானும் அஞ்சா சிங்கம் செல்வின் அவர்களும் Audio வரவில்லை என்பதற்காக எவ்வளவு சிரமப்பட்டோம் என்பது தெரியுமா...?

      Delete
    2. நான் கூடல் பாலாவுக்கு போன் செய்து ஒளிபரப்பு எப்படி இருக்குனு கேட்டேன்.. சவுன்ட் மிஸ் ஆகுதுன்னு சொன்னார். அதன் பின் சவுன்ட் சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டது.

      கேமராமேன் சவுன்ட் செக் செய்தார். ஆனால் ஏனோ ஒளிபரப்பில் வரவில்லை...

      Delete
    3. ஹல்லோ DD ... நான் என்ன குத்தம் குறையா சொன்னேன்... நான் சொன்னது feed back .... ஒரு information அவ்வளவுதான்.ஆடியோ வரலன்னு சொல்றது ஒரு குத்தமாங்க... அடுத்த தடவ இதுபோல வந்தா யாரைத் தொடர்பு கொள்வதுனு கேக்கிறேன்.. இதுக்கு எதுக்கு "அங்கிருந்தால் என்னவென்று தெரிந்திருக்கும்" என்கிற பெரிய வார்த்தையெல்லாம்....? எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்தோடதான் பாப்பீங்களா...

      முதல்ல ஆடியோ வரல என்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்பதே உங்கள் கமெண்டிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன்புவரை உங்களுக்கு தெரியாது என்றுதான் நினைத்திருந்தேன். அன்னைக்கு வெட்டி பிளாக்கர்ல இருந்த லின்கில no audio -னு கமெண்ட் போட்டேன்... யாரும் கவனிக்கலன்னு நினைக்கிறேன்... இது முதல் முறையல்ல. ஏற்கனவே டிஸ்கவெரி புக் பேலஸ்ல நடந்த மினி பதிவர் சந்திப்பை லைவா பாத்திருக்கேன்.

      Delete
  20. நிகழ்ச்சி நடந்த அரங்கம் சரியில்லை என்பது உண்மைதான். மத்த விஷயங்களில் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு தெரியலை. ஆனா, சகோ ஆராமுதன் சொன்ன மாதிரி எந்த பெண் பதிவரிடம் முகம் சுளிக்கும் வண்ணம் எந்த பதிவரும் நடந்துக்கலை. அது மட்டும் தெளிவா சொல்ல முடியும்! ஒரு ஆண் ஒரு பெண்ணை எந்த நோக்கோடு பார்க்குறான்னு ஆண்களை விட பெண்களுக்கு நல்லா தெரியும்.

    நானும் ஒரு பெண் பதிவரா இருந்து சொல்றேன். ஒவ்வொருத்தரும் மிக்க மரியாதையாதான் நடந்து கொண்டார்கள். இதுப்போன்று அவதூறா சொல்லாதீங்க. அப்புறம் என் போன்ற பெண்பதிவர்களை எங்க வீட்டில் எப்படி நம்பி அனுப்புவாங்க?! சகோதர பாசத்தோடு இருக்கும் பதிவர்களை சேற்றை வாரி இறைப்பது போல இருக்கு உங்க கருத்து.

    ReplyDelete
    Replies
    1. உயர்திரு, ராஜி, ஆராமுதன் என்பவன் ஒரு அனானி. எதிர் முகாம் ஆள். அடையாளம் தெரியாவிட்டால் எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேச முடியும் என்ற தைரியத்தில் எனக்கும் கூட கமெண்ட் இட்டுள்ளான். இன்னும் சற்று நேரத்தில் அது யாரென்று கண்டுபிடிக்கும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அது செளந்தராக கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

      நீங்கள் சொன்னது மட்டுமே 100 சதவீதம் சரி. இதே காலகட்டத்தில் தான் சென்ற ஆண்டும் பதிவர் சந்திப்பு நடந்தது. ஆனால் சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பன்று மழை பெய்தது. அதை நினைத்து தான் இந்த முறை இது போன்ற நான்ஏசி மண்டபம் எடுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அசெளகரியங்கள் தவிர வேறு குறைகள் சொல்வது போல் இல்லை. இதை நான் செளந்தருக்கு கூட சொல்ல வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கும் மற்ற பதிவர்களுக்கும் தான் சொல்கிறேன்.

      செளந்தர் இதுபோல் சந்திப்பை குறை கூறி பதிவிடுவார் என நான் பதிவர் சந்திப்பன்றே எதிர்பார்த்தேன். அதற்கான காரணம் சென்ற ஆண்டு அவருக்கு இருந்த ஆர்வம் இந்த வருடம் இல்லை. அதுபோல் எந்த கூட்டங்களிலும் வேண்டும் என்றே கலந்து கொள்ளவில்லை. அதற்கு ஞாயிறு தோறும் வேலை இருந்தது என்ற சப்பைக் கட்டு வேறு. மற்றவர்கள் எல்லாம் ஏதோ தண்டச் சோறு தின்று விட்டு வேலையில்லாமல் ஞாயிறு அன்று கூடி விவாதிக்கிறார்கள் என்று நினைப்பில் இருக்கலாம்.

      குறை சொல்வதில் அளவை சற்று அதிகமாகவே தாண்டி விட்டார். தயிர் பச்சடியில் சற்று நீர்த்து இருந்ததை கூட பதிவர் சந்திப்பு அன்று ஏற்பாட்டாளர்களின் குறை என்று தான் கூறியிருப்பார்.

      நான் உங்களை அக்கா என்று கூப்பிட்டு தான் இவர்களிடம் உங்களுக்கும் எனக்கும் இருக்கும் சகோதரத்துவத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. விட்டுத் தள்ளுங்கள். எங்கள் குழுவில் இணைந்து தியானம் செய்யுங்கள். அன்பே சிவம். அரே ஓ சம்போ.

      Delete
    2. எப்படிப்பார்த்தாலும் அவர் சொன்ன குறைகளில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.அதே வேளையில் அதற்கு எந்த தனிப்பட்ட நபரும் பொறுப்பேற்க முடியாது. இது ஒரு கூட்டு முயற்சி...

      பதிவர் சந்திப்பை நடத்துவர்களிடம் ஏதோ ஒரு பரபரப்பு இருக்கிறது.அது பதிவு போடுவதிலா அல்லது தன்னை முன்னிலைப் படுத்துவதிலா என தெரியவில்லை. பழைய/பிரபல பதிவர்களை அழைக்கும் போது ஓபனாகவும் தனியாகவும் அழைப்பு விடுக்கலாம். இதில் ஈகோ பார்க்க வேண்டாம்.என்னதான் இருந்தாலும் அவர்கள் சீனியர்கள் தானே. இன்னொரு முக்கியமான நெருடல்... தமிழ் வலைப்பதிவர்கள் என மொத்தமாக குறிப்பிட்டு நடத்தப்படும் இது போன்ற நிகழ்வில் ஒரு குருப் மட்டுமே கூடி கும்மியடிப்பது போன்ற ஒரு பிம்பம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

      Delete


    3. சி.பி செந்தில் வரவில்லை என்பதற்கு வேறு காரணமும் இருக்கலாம். தமிழ் மணத்தில் அவர் இல்லை..அதனால் ஓட்டு தேவைப்படாது... கமெண்டும் தேவைப்படாது...

      Delete
    4. ///////
      அது செளந்தராக கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.
      /////////
      என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டு நான் உச்சிக்குளிர்ந்தேன்....

      எந்த ஒரு சந்தர்பத்திலும் என்பதிவில் கூட நான் தவறான கருத்துக்களையோ, தவறான வார்த்தைகளையோ பயன்படுத்திருக்கமாட்டேன்.

      அனானமியாக வந்து கருத்திடும் கோழைஅல்ல நான்...

      தயவு செய்து நியாயமான என் கருத்துக்களை கூறைக்கூறாதீர்கள்... பதிவின் நோக்கத்தை திசைதிருப்பாதீர்கள்....

      Delete
    5. என் தாமதத்திற்கான காரணம் சொல்லட்டுமா...!

      இதை ராஜீ அக்காவிடமே சொல்லியிருக்கிறேன்...

      சனிக்கிழமையே பதிவர் சந்திப்புக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சனிக்கிழமை பள்ளி முழுவேலை நாளாக இருந்தது... விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலை...

      இந்நிலையில் சனிக்கிழமை பெரியபாளையம் அருகில் உள்ள பூரிவாக்கம் கிராமத்தை சார்ந்த என்னுடைய நெருக்கிய நண்பருடைய தந்தை காலமாகிவிட்டார்... அந்த இரங்கல் நிகழ்வில், ஞாயிறு காலை 8.00 மணி வரை இருக்கவேண்டியதாயிற்று அதனால் தான் பதிவர் சந்திப்புக்கு என்னால் 10.30 மணிக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது... இந்த காரணத்தை நெருங்கிய சில பதிவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்...

      மனதை தொட்டு சொல்லுங்கள் செந்தில்

      இந்த பதிவர் சந்திப்பில் குறையேதும் காணமுடியவில்லையா...?

      Delete
    6. ஆலோசனை கூட்டத்தில் தாங்களும் ஒருவர் அல்லவா. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும் தங்களுக்கும் மெயில் மூலம் தெரியப்படுத்தப்பட்டது அல்லவா. அதுபோல் குறைகளை குரூப் மெயிலாக அனுப்பியிருந்தால் தங்களுக்கு கூட பொறுப்பு இருந்தது என்று பெருமைப்பட்டு இருப்பேன். பொதுவில் அதுவும் பல மடங்கு கூடுதலாக இட்டு கட்டி வெளியிட்டு தங்களது பொறுப்புணர்ச்சியை நிரூபித்து விட்டீர்கள்.

      இனி நீங்கள் எங்கள் நெருங்கிய நண்பர்கள் வட்டத்திலிருந்து எங்கள் நெருங்கிய செல்லம் வட்டத்துக்கு வந்து விட்டீர்கள். இனி உங்களை கலாய்ப்பது எங்களுக்கு சுலபம். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன தருகிறீர்களோ அது தான் தங்களுக்கும் கிடைக்கும். தங்களை கலாய்க்க கொஞ்சம் யோசித்த காலம் போய் இனி சாதாரணமாக உங்களை எங்கும் எங்கெங்கும் கலாய்த்து தள்ளலாம். கலாய்த்தே தீர வேண்டியவர்கள் பட்டியலில் வந்து விட்டீர்கள்.

      அதுக்காக இதை மிரட்டல் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் ஒரு உதாரணம் சொல்லுகிறேன். நக்கீரன் சர்வ சாதாரணமாக எப்படி எல்லோராலும் ஓட்டப்படுகிறார். அவர் முதலில் மற்றவர்களை விமர்சிக்கிறார். அதனால் அவரும் விமர்சிக்கப்படுகிறார். அதே என் ராஜபாட்டை ராஜா மற்றவர்களை கலாய்ப்பதும் இல்லை. அதனால் கலாய்க்கப்படுவதும் இல்லை. ஒரு எல்லையுடன் நிறுத்திக் கொள்கிறார்.

      நீங்கள் ராஜா போல் இருந்து இன்றிலிருந்து நக்கீரன் ஆகிப் போனீர்கள். நீங்கள் எங்கள் நண்பர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கலாய்க்கப்படுவதையும் விடப் போவது இல்லை.

      நக்கீரன் இதனால் கோவப்படப் போவதும் இல்லை. அதுதான் அவருக்கான பக்குவம், நீங்களும் உங்களது பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நான் பரவாயில்லை. எல்லோராலும் கலாய்க்கப்பட்டு கலாய்ப்பட்டு மரத்துப் போனவன். நீங்கள் தான் சிரமப்படுவீர்கள்.

      கிலி கிலி பிலி பிலி ஜெய் போலோநாத். அரே ஓ சம்போ.

      Delete
    7. மனதை தொட்டு சொல்லுங்கள்... ஆக உங்களுக்கு மட்டும் தான் வேலை...! ...ம்...

      Delete
  21. பதிவர் சந்திப்பு குறித்த தங்களின் இந்த பதிவு வருத்தமே. எந்த விழாவையும் எதிர்மறையாக வெகு எளிதில் விமர்சித்து விட முடியும். பலபேரின் கூட்டு உழைப்பை எளிதில் குறை காண இயலும்.
    பலவிதமான இடங்களில் இருந்து வெவ்வேறு பின்புலங்களில் வருபவர்களின் எல்லாவிதமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியம்.

    பெரிய அரங்கம் நகரின் மையப்பகுதியில் எடுப்பது என்பது நமது பொருளாதார வசதியைப பொறுத்தது அல்லவா ? ஒருவேளை புறநகர் பகுதியில் எடுத்து இருந்தால் வெளியூர் வாசிகளை வந்து செல்ல பெரிய இடையூறாக இருந்தது என்ற விமர்சனம் கூட வந்து இருக்கலாம் !!!

    ReplyDelete
  22. பதிவர் விழாவிற்கு வந்த யாவரும் சொந்த பந்தங்களோ ஏற்கனவே அறிமுகமானவர்களோ கிடையாது. இணையத்தின் மூலம் அறிமுகமானவர்களே. அனைவருக்காக தங்களது சொந்த வேலைகளை விட்டு விட்டு பலமுறை ஆலோசனை கூட்டம் நடத்தி நிதி திரட்டி, செய்த ஒரு விஷயத்தை எதிர் கருத்து கூறுகிறேன் என்று அனைவரது உழைப்பு, திட்டமிடல் , செலவழித்த நேரத்தை சாதாரணமாக குறை கூறிவிட்டீர்களே இது சரியா ?

    சில குறைகள் இருந்திருக்கலாம். தங்களுக்கு எதிர்கருத்து இருப்பின் விழாக் குழுவினரிடமே வெளிப்படுத்தி இருக்கலாமே .அவர்கள் தரப்பு கருத்தும் தங்களுக்கு தெரிந்து இருக்கும் பட்சத்தில் ,
    அதுவும் சரியாக இருப்பின் இந்த பதிவு தேவைப்பட்டிருக்காது அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. நமக்குள் நாமே சொல்லிக்கொள்கிறேன்... இது ஒரு தனிப்பட்டவர்களின் பிரச்சனையாக இருந்திருந்தால் தனியாக சொல்லியிருக்கலாம் பொதுப்பிரச்சனைதானே...

      இப்படியே சென்றால் நாளை பதிவர் சந்திப்பு என்றாலே முகம்சுழி்க்கும்படி ஆகிவிடும்...

      அந்த உள்நோக்கம் கொண்டதுதான் இந்தபதிவு...

      Delete
    2. கவிதை வீதி... // சௌந்தர் //

      // இப்படியே சென்றால் நாளை பதிவர் சந்திப்பு என்றாலே முகம்சுழி்க்கும்படி ஆகிவிடும்... //

      அடுத்த பதிவர் திருவிழாவில் முகம் சுழி்க்காத படி செய்வது உங்கள் பொறுப்பு... தலைவரே நீங்கள் தான்... அது மதுரையில் நடந்தாலும் சரி.. ஈரோடில் நடந்தாலும் சரி...

      Delete
  23. இந்த பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த அனைத்து பதிவர்களும் அரங்கினுள் அவ்வப்போது மாத்திரமே தலைக்காட்டினார்கள்// இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் எல்லாரும் உட்கார்ந்து கொண்டால் யார் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை பார்ப்பது ?? அவர்களுடன் இணைந்து புதிதாய் அறிமுகமானவர்கள் சென்றதில் தவறொன்றுமில்லையே ???

    பெரும்பாலான சென்னைபதிவர்கள் இருக்கைகளில் அமைந்து இருக்க வில்லை.// அனைத்து வேலைகளையும் செய்தது அவர்கள் தானே பின் அவர்கலை அரங்கத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும் .

    ReplyDelete
  24. பதிவர்களை கலாய்ப்போம் தவறாக எண்ணக்கூடாது என்றெல்லாம் அலம்பல் செய்திருந்தார்கள்...// இந்த அலம்பல் வார்த்தை பிரயோகம் சற்று தடிப்பானதாக இல்லை .

    இந்த பதிவர் சந்திப்பு வெற்றி அடைந்ததாஎன்ற...? // வெறும் இணைய அறிமுகத்தை மட்டுமே நம்பி வெளியூரிலிருந்தும் வந்து சிறப்பித்த வகையில் (உங்கள் பாஷையில் சில குறைகள் இருப்பினும் ) கண்டிப்பாக வெற்றிதான் நண்பரே.

    ReplyDelete
  25. உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..

    பலரும் ஒருங்கிணையும் ஒரு விழாவில் சில குறைகள் இருப்பது இயல்பே. நீங்கள் குறைகளாக காண்பவற்றை கூறியுள்ளீர்கள், இது ஆரோக்கியமான அணுகுமுறையே. இதில் உண்மையிருந்தால் அடுத்த சந்திப்பில் இவை நிச்சயம் சரி செய்யப்படும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கலாம்.

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல... துரோகமான அணுகுமுறை... கூட இருந்தே குழி பறிப்பது...!

      Delete
    2. //துரோகமான அணுகுமுறை...//



      யோவ்..தவறை சுட்டிக் காட்டினால் துரோகமா.... ?

      அன்பிலார் எல்லாம் தமக்..... ச்சே.. இந்த நேரம் பார்த்து எந்த குறளும் ஞாபகத்துக்கு வந்து தொலைய மாட்டேங்குது...

      Delete
  26. சொந்தகாரங்க விஷேஷத்துக்கு வந்தா கூட ரயில்வே ஸ்டேஷன் வந்து கூப்பிட்டு போகமாட்டாங்க. ஆனா பதிவர் சந்திப்பில் பதிவர்கள் யார் போன் செய்தாலும் எங்கு இருந்தாலும் வந்து அழைத்து சென்றனர். சீனு, சிவா, ஸ்கூல் பையன், செந்தில்,அரசன் போல பலர் தங்கள் வேலைகலை விட்டுவிட்டு இதுக்க்காக உழைத்துள்ளனர். சாப்பாட்டில் சிறுகல் இருந்தது என்பதற்காக சாப்பாட்டை குறைகூறகூடாது.

    ReplyDelete
    Replies
    1. அவர்களின் உழைப்பு கடைசி நேரத்தில் பறிபோனது பற்றிய பதிவு இது....

      அவர்களின் உழைப்புக்கும் ஏற்பாட்டிற்கும் நான் தலைவணங்குகிறேன்... அதில் கடைசி நேரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாகஇருந்திருக்கும்

      Delete
    2. கவிதை வீதி... // சௌந்தர் //

      /// கடைசி நேரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ///

      என்னையா கவனம்... please tell me...

      Delete
    3. // please tell me...//

      actually what he is trying to tell is the curreption in the constipation is not the occupation of the ventilation to the innovation. so basically......ata pongkappaa...

      Delete
  27. தயவு செய்து ஆராமுதன் கமெண்டை நீக்குங்கள். . .சொந்த முகத்தில் வரமுடியாத முண்டம் கருத்து என்ற பெயரில் வாந்தி எடுத்து வைத்துள்ளது. தாயிக்கு பொறந்தவனா இல்லை பேயிக்கு பொறந்தவனா??

    ReplyDelete
    Replies
    1. கவிதை வீதி... // சௌந்தர் //

      ///நீக்கியாச்சி.///

      அடேங்கப்பா... பெரிய விஷயம்...

      Delete
  28. பாஸ்,
    உங்க ப்ளாக் படிக்கிறதை நான் ரொம்ப மாசத்துக்கு முன்னாடியே நிறுத்திட்டேன். வெறும் ஹிட்ஸ் மட்டுமே நோக்கம்ன்னு வச்சு கிட்டு "தட்ஸ்தமிழ்", "வெப்துனியா" போன்ற தளங்களில் வரும் செய்திகளை வெட்டி ஒட்டி பிழைப்பு நடத்தும் உங்களை நான் என்னைக்குமே பிளாக்கரா நினைச்சது கிடையாது. பத்துல ஒரு சொந்த கவிதை பதிவு எழுதுற ஆள் நீங்க. நீங்க இது மாதிரி ஞாயம் பேசுறது எனக்கு பெரிய ஆச்சிரியம் இல்ல. ஹிட்ஸ் மட்டுமே நோக்கம்னு நினைச்சு இந்த பதிவை எழுதி இருக்கீங்க.
    நீங்க தானே "அது" இருந்தா ஆம்பளையான்னு" புரட்சிகரமான தலைப்பு வச்சு எழுதின ஆளு ?? போங்க பாஸ். வேற யாரு கூடவாது வம்பு இழுங்க.
    // (அந்த பொருப்பை அவரிடம் தரவில்லை என்றால் அவர் பதிவர் சந்திப்புக்கு வந்திருப்பாரா என்று தெரிவில்லை).// இது சுரேகா மேல இருக்கிற காண்டுல எழுதுனது. ஏங்க சுமார் ஆறு மணி நேரம் விடாம தொகுத்து வழங்குறது என்ன சும்மாவா ? அவரை விட சிறந்த தொகுப்பாளியை நீங்க அடையாளம் காட்டிடுங்க பார்க்கலாம்.
    //மேடையை ஒரு சில சென்னைப்பதிவர்கள் மாத்திரமே ஆக்கிரமித்தார்கள். பிரபல பதிவர்கள் என்ற போர்வையில் இவர்களே முன்னிலைப்படுத்தப்படுவது வளரும் பதிவர்களுக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை//
    மேடையில ஒட்கார்ந்து இருந்தது "கேபிள் ஷங்கர்". அவர் மேல உங்களுக்கு இருக்கிற கொலைவெறி இன்னும் அடங்கல போல. இன்னைக்கும் பிளாக்கர் போல செயல்படுற வெகு சில பேருல அவரும் ஒருவர். ரொம்பவே பிரபலம். அவரை விட பிரபலமான தமிழ் பிளாக்கரை நீங்க காட்டுங்க.
    //சென்ற பதிவர் சந்திப்பில் தனக்கு பிடித்த பதிவர்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தனர் ஆனால் இந்த சந்திப்பில் யாரும் யாருடனும் அதிகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுபோல் தெரியவில்லை.//
    இது அவங்க அவங்க சொந்த விருப்பம். விருப்பம் இருந்தா யார் கூட வேணா அனுமதி வாங்கிட்டு அவங்க போட்டோ எடுத்துக்கிட்டும். யாரும் அவங்கள் தடுக்கவில்லையே. ஏன் பாஸ் உங்க கூட யாரும் போட்டோ எடுத்துகலன்னு கோவமா..??
    //பதிவர் அறிமுகம் இனிதேவையில்லை என்று நினைக்கிறேன்.‌ பெரும்பாலான பதிவர்கள் அனைவரும் அறிந்ததே. புதிய பதிவர்களை வேண்டுமானால் அறிமுகத்தில் பயன்படுத்தியிருக்கலாம்.///
    இது உங்களுக்கே ஓவரா தெரியல. உங்களுக்கு மிஞ்சி மிஞ்சி போனா 30 பிளாக்கர் பேரு தெரியுமா..?? இல்ல 50..??அங்க வந்து இருந்தது 160 பிளாக்கர்ஸ். அறிமுகம் இல்லாட்டி எப்படி பாஸ் ??
    //சில மூத்தப்பதிவர்கள் (வயதில்) இப்படி பலரை தன்னுடைய அனுபவங்களையும் அவர்களுடைய பயனுள்ள தகவல்களையும் சிறப்புறையாக பயன்படுத்தியிருக்கலாம்.///
    இந்த ஈரவெங்காயத்தை சாரி...இந்த ஐடியாவை சந்திப்புக்கு முன்னாடியே நீங்க குடுத்து இருக்கலாம். ரொம்ப ஓவர் பாஸ்.
    முத பேராவுல நான் சொன்ன மாதிரி நீங்க ஒரு ஹிட்ஸ் வெறியார். சி.பிக்கு அடுத்த படியா நான் பார்த்த மோசமான தமிழ் பிளாக்கர்ல நீங்களும் ஒருத்தர். உங்க பதிவை என்னால நேர்மையான விமர்சனமா எடுத்துக்க முடியல.

    ReplyDelete
    Replies
    1. ராஜ்,

      எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,
      எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது,
      எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!

      இதன் படியே போகத்தான் மக்களில் பலரும் விரும்புகிறாகள், எனவே யாரும் பேச தயாரில்லை, பேசினால் கல்லடி தான் ,நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் அவ்வ்!

      பின் குறிப்பு:

      //உங்களை நான் என்னைக்குமே பிளாக்கரா நினைச்சது கிடையாது.//

      ஓ நீங்க பிளாக்கராக நினைக்கலைனா பதிவே போட முடியாதா பாஸ்?

      இப்படி பேசுறதெல்லாம் ரொம்ப சின்னப்புள்ளை தனமா இருக்கு,அப்படி நான் நினைச்சா இங்கே பிளாகரா இப்போ ஒருத்தனுக்குமே தகுதி இல்லைனு சொல்வேன் :-))
      (ஹி..ஹி காமெடி இது)

      பேசும் போது நிதானமாகவே பேசலாமெ ஏன் இத்தனை ஆங்காரம்?

      Delete
    2. பின் குறிப்பு:

      யே யப்பா சவுந்தருக்கு தான்

      ////உங்களை நான் என்னைக்குமே பிளாக்கரா நினைச்சது கிடையாது.//

      என சொல்லி இருக்கார் ராஜ், அதை பொதுவான பார்வையில் நீங்க தான் யாரு பிளாக்கருனு முடிவு செய்வீங்களானு கேட்டு வச்சேன்,எனவே நோ உள் குத்து, நோ பள்ளம் நோண்டிபையிங் ,ஓகே!

      ஐ அம் ஒன்லி வழி போக்கன் :-))

      Delete
    3. நான் நினைச்சதை சொன்னேன் வவ்வால்.
      நான் சொன்னதுனால இவர் என்ன காப்பி பேஸ்ட் பண்ணுறதை விட்டுட்டு போயிட போறாரா ..?? நாளைக்கே அமலா பாலுக்கு "அது" பெருசுன்னு தலைப்பு வைச்சு தட்ஸ்தமிழ் செய்தியை பதிவா போடத்தா போறாரு.
      //இப்படி பேசுறதெல்லாம் ரொம்ப சின்னப்புள்ளை தனமா இருக்கு,அப்படி நான் நினைச்சா இங்கே பிளாகரா இப்போ ஒருத்தனுக்குமே தகுதி இல்லைனு சொல்வேன் :-))
      (ஹி..ஹி காமெடி இது)///
      இது உங்க பார்வை. நீங்க பண்ணுறது எல்லாமே காமெடி தான். தனியா சொல்ல வேண்டாம் வவ்வால்.. :):)
      //பேசும் போது நிதானமாகவே பேசலாமெ ஏன் இத்தனை ஆங்காரம்?///
      சின்னபுள்ளை தனமா கடுப்பு எத்துறார் மை லார்ட்.

      Delete
    4. அய்யய்யோ நான் பதிவர் இல்லையா...?

      திரைப்படங்களையும் பிரபதிவர்களையும் குறை மட்டுமே சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டும் நம் ராஜ் அவர்களா இப்படி பொங்குவது...!


      நல்லது தம்பி...!

      Delete
    5. //இப்படி பேசுறதெல்லாம் ரொம்ப சின்னப்புள்ளை தனமா இருக்கு,அப்படி நான் நினைச்சா இங்கே பிளாகரா இப்போ ஒருத்தனுக்குமே தகுதி இல்லைனு சொல்வேன் :-))//

      அட பாவிகளா சுத்தி வளைச்சி இங்கதான் வாரீங்களா...

      Delete
    6. மிஸ்டர் ராஜ் உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு முழு உடன்பாடு... இவ்வளவு வருஷம் பதிவு எழுதி லாட் ஆப் பாலோயர்ஸ் வச்சிக்கிட்டு இன்னமும் சௌந்தர் , சிபி மாதிரி சினிமா நியுசையும் காபி பேஸ்டையும் போடுவது முறையா... கடசில சிபிக்கு வந்த நிலைமைதான் இவருக்கும் வரும்... தமிழ்மணம் கவனிக்க..

      Delete
    7. ராஜ்,

      நீங்க மனசிலப்பட்டதை சொன்னீங்க, அதுவே நல்லதும் கூட, அதே போல யாரேனும் விமர்சித்து சொன்னாலும் ,அது சின்னப்புள்ளத்தனமாக இருந்தாலுமே ,அவங்க மனசுல அதான் பட்டிருக்கு சொல்லுறாங்கனு லைட்டாவே எடுத்துக்கலாம் என்பதே நான் சொல்ல வருவது.

      ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி ஃபீலிங்ஸ் பாஸ்!

      # ஆரம்பத்துல ஏதோ ஆக்கப்பூர்வமாக மேம்படுத்த குறிப்பிட்டாற்போல பேசிட்டு இருந்த சவுந்தர் ,இப்போ தண்ணி கூட குடுக்கலைனு மெய்யாலுமே சின்னப்புள்ளத்தனமா பேச ஆரம்பிச்சிட்டார் அவ்வ்!

      Delete
  29. ராஜ் : ஒவ்வொன்றும் உண்மை... ஒரு நாளைக்கு ஏதேனும் ஒரு பதிவு தான்...

    ReplyDelete
  30. இதற்கும் மீறி விவாதம் தொடர நினைத்தால்...

    தெருவீதி சௌந்தர்...

    நன்றி எனது இனிய இணைய நண்பருக்கு... thats all...

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ கைப்புள்ள அரிவாளோட கெலம்பிருச்சி இனி என்ன ஆகப்போகுதோ...

      Delete
  31. நீ என்ன...? நானும் என்ன...?
    பேதங்கள் தேவை இல்லை...
    எல்லோரும் உறவே என்றால்; சோகங்கள் ஏதும் இல்லை...
    சிரிக்கின்ற நேரம் மட்டும் நட்பென்று தேங்கிடாதே...!
    அழுகின்ற நேரம் கூட நட்புண்டு நீங்கிடாதே...!!
    தோல்வியே என்றும் இல்லை...
    துணிந்தபின் வலி இல்லை... வெற்றியே...!

    சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
    சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

    உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்...
    தொடங்கும் கலகம் துணிந்துவிடட்டும்...
    பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்...
    தோள்கள் திமிரட்டும்...
    துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்...
    தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்...
    வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்...
    நட்பே ஜெயிக்கட்டும்...

    சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ
    சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ

    ஏக்கங்கள் தீரும் மட்டும் வாழ்வதா வாழ்க்கையாகும்...?
    ஆசைக்கு வாழும் வாழ்க்கை ஆற்றிலே கோலமாகும்...
    பொய்வேடம் வாழ்வதில்லை...
    மண்ணோடு வீழும் வீழும்...
    நட்பாலே ஊரும் உலகும் எந்நாளும் வாழும் வாழும்...
    சாத்திரம் நட்புக்கில்லை...
    ஆத்திரம் நட்புக்குண்டு.. காட்டவே !!!

    ReplyDelete
    Replies

    1. ஏன்யா இப்படி.... உனக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் எதுவுமே தெரியாதா.

      Delete
  32. 1. அரங்கம் தேர்வு செய்கையில் முதலில் கவனித்தது பட்ஜெட் தான், சென்ற முறை மக்கள் சந்தை அரங்க ஏற்பாட்டை பார்த்துக் கொண்டார்கள், அப்படி இருந்துமே கடந்த முறை பட்ஜெட் கையை கடித்தது, அது போல் இம்முறை ஏற்படக் கூடாது என்பது தான் முதல் கூடத்தில் முடிவு செய்யப்பட்டது...

    பதிவர் சந்திப்புக்கு முன்னான சில தினங்களில் இருந்து தான் போதிய நிதி உதவி கிடைக்க ஆரம்பித்தது, அதனால் திடிரென்று வேறு மண்டபம் தேடி ஓடுவது என்பது எப்படி? இங்கு வேலை செய்தவர்கள் அனைவரும் தங்கள் பணிகளுக்கு மத்தியில் வேலை செய்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்...

    2. //ஏற்பாடு செய்திருந்த அனைத்து பதிவர்களும் அரங்கினுள் அவ்வப்போது மாத்திரமே // நான், ரூபக், எங்கள் பின் வரிசையில் பிலாசபி, ஆரூர், செல்வின் முன் வரிசையில் ஸ்கூல் புலவர், கவியாழி மற்றும் உங்கள் வரிசையில் சசிகலா அக்கா அமர்ந்திருந்தனர். விழாக்குழு என்பதால் வேலை வரும் போதெல்லாம் நகர்ந்து செல்ல வேண்டி இருந்தது.

    (உ.ம் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு பதிவர்கள் வருகை பதிவை மேடைக்கு எடுத்துச் செல்வது, விழாவையும் முழுதாக கவனிக்க வேண்டும், இதையும் செய்ய வேண்டும் என்றால் ஒரே இடத்தில எப்படி என்னால் அமர்ந்து இருக்க முடியும், இதுபோல் மற்றவர்கள் வேலையை பொறுத்து அதை பாலோஅப் செய்து கொண்டிருந்தார்கள்.

    3. //பெரும்பாலான சென்னைபதிவர்கள் இருக்கைகளில் அமைந்து இருக்க வில்லை. // இதனை விழாகுழு மூலமாக நானும் பிலாசபியும் கூறிக் கொண்டிருந்தோம், சொல்ல தான் முடியும்...

    4. // புதுமுக மற்றும் வெளியில் வந்த பதிவர்களை முதன்மை படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.// ஒன்றை நன்றாக கவனித்தீர்களா விழாக்குழு தங்களை அறிமுகம் செய்யவில்லை, காரணம் புதியவர்களும் வெளியூர் பதிவர்களும் தங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதால் தான்...

    5. //எனது அடுத்த கேள்வி ஏன் சில பதிவர்களையே சிறப்புறை ஆற்றவைத்திருக்க கூடாது.// அடுத்த முறை சந்திப்பு நடந்தும் போது கருத்தில் கொள்வோம்

    6. //நேரத்தை மிகவும் கச்சிதமாக கையாண்டு// முடிந்தளவு நேரம் கச்சிதமாக கையாளப்பட்டது, கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது பதிவர்களுக்கு தயார் செய்ய நேரம் கிடைக்காததால் கைவிடப்பட்டது.

    7. //பதிவர் அறிமுகம் இனிதேவையில்லை என்று நினைக்கிறேன்.‌ பெரும்பாலான பதிவர்கள் அனைவரும் அறிந்ததே.// நிச்சயமாக இதனை கருத்தில் கொள்ளலாம்

    8. //புத்தக வெளியீடு பெருமைக்குறியதுதான் அதற்காக உணவு இடைவேளைக்கு பிறகு மொத்த நேரத்தையும் இந்த நிகழ்வே எடுத்துக்கொண்டது. // அழைப்பிதழ் படி நான்கு மணிக்கு மேல் தொடங்கியது, கூட்டங்களில் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு.

    9. //என்பேர் பிரம்மன் // இது உங்கள் தனிப்பட்ட விருப்பம், காரணம் மயிலன் மற்றும் தேவாதிராஜன் கவிதை வாசித்தனர், கோவை ஆவியுடன் இணைந்து நாங்கள் பாடல் பாடினோம்.

    10. //மேடையை ஒரு சில சென்னைப்பதிவர்கள் மாத்திரமே ஆக்கிரமித்தார்கள். // அப்படி ஒன்றும் நடக்கவில்லை, யாரும் தேவையில்லாமல் மைக் பிடித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை.

    11. // இந்த பதிவர் சந்திப்பு வெற்றி அடைந்ததாஎன்ற...? // வெற்றி என்பதன் அளவீடு மாறும் பொழுது உங்களைப் பொறுத்தவரை அது வெற்றியில்லை என்றால் என்ன செய்வது ?

    ReplyDelete
  33. நான் கொஞ்சம் பின்னுட்டம் படித்தேன்...பிறகு பதிவு எழுத போய் விட்டேன்....

    http://naai-nakks.blogspot.in/2013/09/18.html

    சத்தியமா சவுந்தருக்கு பதில் பதிவு...{18+}


    பார்ப்போம்....!!!

    மிஸ்டர்...வவ்வால்....இருக்கிறா...?சும்மா கேட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. நநக்ஸ் அண்ணாத்த,

      //மிஸ்டர்...வவ்வால்....இருக்கிறா...?சும்மா கேட்டேன்...//


      என்னாதிது, வந்தமா பின்னூட்டம் போட்டமானு இல்லாம,வந்த எடத்தில என்ன விஜாரிக்கீர், என்னலாம் சும்மா கேட்டா எப்பூடி ,ஒரு அரைப்புட்டி தீர்த்தம் வச்சு விஜாரிக்கோனும் சொல்லிப்புட்டேன்!

      Delete
  34. செளந்தர்,

    உங்களுடைய இந்த பதிவு ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போன்றதொரு சுயநலம். நீங்கள் எதற்காக இந்த பதிவை எழுதியிருக்கிறீர்கள் என்று எல்லோருக்குமே தெரியும்.

    ஆனால் தாங்கள் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. சந்திப்பில் கலந்துக்கொண்ட சில பதிவர்களும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அடுத்தடுத்த பின்னூட்டங்களில் விரிவாக பதிலிடுகிறேன்.

    ReplyDelete
  35. செளந்தர்,

    மேலோட்டமாக பதிவர் சந்திப்பு அரங்கத்தை சுற்றிவிட்டு வந்து என்னென்ன குறை சொல்லலாம் என்று நோட்ஸ் எடுத்துக்கொண்டு வந்து எழுதியிருப்பது போல் தெரிகிறது.

    பதிவர் சந்திப்பில் சில குறைகள் இருந்தது உண்மைதான். ஆனால் நீங்கள் அவற்றில் ஒன்றைக் கூட சரிவர சுட்டிக்காட்டவில்லை.

    1. அரங்கம்

    அரங்கத்தில் சரியான காற்று வசதி இல்லை. நிறைய பதிவர்கள் அதனாலேயே கிளம்பிவிட்டார்கள். இடையில் சில நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டது என்று சில குறைகள் இருந்தன. பட்ச, நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல அரங்கம் பிரதான சாலையிலிருந்து உள்ளே செல்வதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. அரங்கம் வடபழநியில் விஜயா ஃபோரம் மால், ஏ.வி.எம் ஸ்டூடியோ போன்ற பிரபல லேன்ட்மார்க்குகளுக்கு இடையே, நகரின் மையப்பகுதியில் பப்பரப்பா என்று இருக்கிறது. மேலும் மேடையை முன்சீட்டில் உள்ளவரின் தலை மறைக்காதபடி கச்சிதமாக இருந்தது.

    ReplyDelete
  36. 2. அமைப்புக்குழு வெளியில் சுற்றிக்கொண்டிருந்ததாக சொல்கிறீர்கள். நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என நினைக்கிறேன். அமைப்புக்குழு பதிவர்கள் யாரும் இருக்கையில் அமரவில்லை. அதே சமயம் மேடையின் அருகே சிலர், அரங்கத்தின் பிற்பகுதியில் சிலர், அரங்கத்தின் வெளியே சிலர் என்று நின்றுக்கொண்டிருந்தோம். சில பதிவர்கள் ஆங்காங்கே சில நிமிடங்கள் அமர்ந்தபடியும் இருந்தனர். கல்யாண வீட்டுக்கு போயிட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என் பக்கத்துல உட்காரவே இல்லைன்னு சொன்னா எப்படி ? அப்புறம் எப்படி எல்லோரையும் கவனிக்கிறது ?

    ReplyDelete
  37. 3. பதிவர்கள் அறிமுகம் சம்பிரதாயம் போல நடைபெற்றது என்றிருக்கிறீர்கள். இது பதிவர்களுக்காக பதிவர்கள் அறிமுகம் செய்து கொள்கிற சம்பவம். அப்படியென்றால் பதிவர்கள் அறிமுகப்படலத்தின் போது மற்ற பதிவர்கள் சிரத்தை எடுத்துக்கொண்டு கவனித்திருக்க வேண்டும். அப்படி கவனிக்காத பட்சத்தில் அமைப்புக்குழு அதற்கெல்லாம் பொறுப்பேற்க முடியாது.

    அமைப்புக்குழுவை பொறுத்தவரையில் பதிவர்கள் அறிமுகம் முறையாக நடைபெற வேண்டும் என்று சீனு போன்றவர்களின் உழைப்பை கேட்டுப்பாருங்கள். தவிர, மேடையில் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு சில பதிவர்களை தேடிப்பிடித்து மேடையேற்ற வேண்டியிருந்தது.

    ReplyDelete
  38. 4. பதிவர்கள் தனித்திறன்

    திட்டமிட்டபடி சில நிகழ்ச்சிகள் செய்ய முடியவில்லை. எனினும், மதுமதியின் குறும்படம், மயிலனின் கவிதை, குடந்தையூரின் மிமிக்ரி (சுமாராக இருந்தாலும் தனித்திறன் தான்) ஆகியவை நடைபெற்றன.

    மயிலனின் கவிதையை யாரும் சரியாக கவனிக்கவில்லை என்று சொன்னது அபத்தத்தின் உச்சக்கட்டம். பதிவர் சந்திப்பின் மிகச்சிறந்த பகுதியாக அவருடைய கவிதை அமைந்திருந்தது. கிட்டத்தட்ட அனைவரும் கைதட்டி பாராட்டினர், அவர் கீழே இறங்கியதும் நிறைய பதிவர்கள் கைகுலுக்கி வாழ்த்தினார்கள்.

    ReplyDelete
  39. 5. மூத்த பதிவர்களின் சிறப்புரை, கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள் என்று உங்களுக்கு நிறைய கருத்துகள் இருக்கின்றன, I agree. இதே போல எல்லோரிடமும் நிறைய கருத்துகள் உள்ளன. உங்களுக்கு பிடித்த கவியரங்கம் வேறு சிலருக்கு பிடிக்காமல் போகலாம். உங்களுக்கு மூத்த பதிவராக தெரியும் விக்கியுலகம் வேறொருவருக்கு பீத்த பதிவராக (!!!) தெரியலாம்.

    பதிவர் சந்திப்பு நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கு பொதுவில் தகவல் பகிரப்படுகின்றன. அங்கே உங்களுடைய ஆலோசனைகளை சொல்லியிருக்கலாம் என்பதை விட, ஏற்கனவே இதுபோன்ற நிறைய ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு தான் நிகழ்ச்சிகள் முடிவு செய்யப்பட்டன.

    ReplyDelete
  40. ஏதோ கோபத்தில் வந்து இருக்கு என்பது மட்டும் புரிகின்றது எல்லாப்பதிவும் படித்த பின் கூட்டு உழைப்புக்கு தலைசாய்யுங்கோ!

    ReplyDelete
  41. 6. பதிவர்கள் அறிமுகம் இனி தேவையில்லை என்று எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முடிவு செய்ய முடியாது. புதிதாக வந்திருக்கும் சில பதிவர்களுக்கு கவிதை வீதி செளந்தர் யாரென்றே தெரியாது :) ஒவ்வொரு ஆண்டும் பதிவர் அறிமுகம் நடைபெறும்போது புதியவர்கள் பழையவர்களையும், பழையவர்கள் புதியவர்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது சரி...ஆனால் பதிவர் அறிமுகத்தை வேற மாதிரி மாற்றலாம்... என்பேரு சப்பாணி இல்ல ராசா கோபாலு என்கிற அதே பழைய பாணி வேண்டாம்.. குறிப்பா உங்களைப் போல பிரபலப் பதிவர்கள் யாரவது அஞ்சுபேர் குரூப் குரூபா பிரிச்ச்க்கிட்டு புதிய பதிவர்களை மேடைக்கு அழைத்து,இவர் இந்த வலைபூ எழுதறார்... அப்படி இப்படின்னு ஒரு அறிமுகம் கொடுத்த அவுங்களும் உச்சி குளுந்து போவாங்க...

      Delete
    2. இது மிகவும் நல்ல ஐடியாவாக இருக்கிறது, நான் தாறுமாறாக ஆதரிக்கிறேன் மாங்கொட்டை

      Delete
  42. 7. உணவு இடைவேளைக்கு பிறகு மொத்த நேரத்தையும் புத்தக வெளியீடே நடைபெறவில்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். சில வரிகளை படிக்கும்போது யோவ் லூசாய்யா நீயி என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    உணவு இடைவேளை முடிந்து, நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள பதிவர் தனித்திறன் நிகழ்ச்சிகள் நடைபெற்று, சிறப்பு விருந்தினர்கள் வாமு.கோமு, முத்து நிலவன், கண்மணி குணசேகரன் ஆகியோர் பேசி முடித்தபின்னரே புத்தக வெளியீடுகள் நடைபெற்றன.

    ReplyDelete
  43. 8. உட்காரவைத்து உணவு பரிமாறும் வகையில் ஏற்பாடு செய்யாததை ஒரு குறையாக கருத்தில் கொள்ளலாம். அடுத்தமுறை இதுகுறித்து கவனமாக இருப்போம்.

    ReplyDelete
  44. நிகழ்ச்சி மாலை 5:15 மணிக்கு நிறைவுற்றது. ஆனால் நீங்கள் 4:45 வரை இருந்தீர்கள் என்று சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் மதியம் கண்மணி குணசேகரன் பேசியதைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதாக தெரியவில்லை. தவிர, மதியம் முழுவதும் புத்தக வெளியீடே நடைபெற்றது என்று உளறியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  45. // மேடையை ஒரு சில சென்னைப்பதிவர்கள் மாத்திரமே ஆக்கிரமித்தார்கள். பிரபல பதிவர்கள் என்ற போர்வையில் இவர்களே முன்னிலைப்படுத்தப்படுவது வளரும் பதிவர்களுக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை. //

    இதுதான் உச்சபட்ச நகைச்சுவை. கிட்டத்தட்ட காலையில் பதிவர் அறிமுகம் நடைபெறும் போதெல்லாம் மேடை இருக்கைகள் ஆக்கிரமிக்கப் படவே இல்லை. (அறிமுகம் செய்துக்கொள்ள மேடையேறிய பதிவர்கள் தங்கள் முறை வரும்வரை காத்திருப்பதற்காக சில நிமிடங்கள் அமர்ந்தார்கள்). BTW, அமைப்புக்குழுவில் உள்ள பதிவர்கள் யாரும் அறிமுகம் என்ற பெயரில் மேடையேற்றப் படவில்லை. அதன்பிறகு புலவர் அய்யாவும், சென்னை பித்தனும் மேடையேற்றப் பட்டார்கள். அதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    மதியம் மறுபடி சிறப்பு விருந்தினர்கள் வாமு.கோமு, முத்து நிலவன், கண்மணி குணசேகரன் ஆகியோருடன் புலவர் அய்யாவும், சென்னை பித்தனும் அமர்ந்திருந்தனர்.

    அதன்பிறகு இவர்கள்தான் விழாக்குழுவினர் என்று அறிவிக்கும்பொருட்டு பதிவர்கள் சில நிமிடங்கள் மேடையேற்றப்பட்டோம். கவனிக்க: அவர்கள் அனைவரும் சென்னை பதிவர்கள் கிடையாது. தமிழ்வாசி பிரகாஷ், வீடு சுரேஷ், திண்டுக்கல் தனபாலன் உட்பட வெளியூர் ஆட்களும் இடம்பெற்றிருந்தார்கள்.

    ReplyDelete
  46. // நிகழ்ச்சிகளை தொகுக்க நாள் முழுவதும் ஒருவரே எனும் போது பல்வேறு பதிவர்களிடையே கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது. பலபேரிடம் பகிர்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். (அந்த பொருப்பை அவரிடம் தரவில்லை என்றால் அவர் பதிவர் சந்திப்புக்கு வந்திருப்பாரா என்று தெரிவில்லை). //

    சென்றமுறை தாங்கள் குறிப்பிட்ட முறையை பின்பற்றி சில பதிவர்கள் மேடை நாகரிகம் தெரியாமல் பேசினார்கள். தவிர, நம்மிடம் சுரேகா போன்ற திறமையான அறிவிப்பாளர் உண்டா என்று தெரியவில்லை. இருப்பின், தாங்களாகவே முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டால் மறுப்பதற்கில்லை.

    ReplyDelete
  47. நியாயமான குறைகள் இருப்பின் மின்மடல் மட்டுமல்ல, பகிரங்கமாக பதிவெழுதியும் சுட்டிக்காட்டலாம். ஆனால் இதுபோன்ற லுச்சாத்தனமான பதிவுகளை தவிர்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. அதத்தானங்க இவர் செஞ்சியிருக்காரு...

      Delete
  48. செளந்தர் உட்பட மற்ற பின்னூட்டவாதிகளுக்கு,

    சீனுவும் நானும் இந்த துப்புக்கெட்ட பதிவிற்கு மிகவும் நேர்மையாக பதில் சொல்லியிருக்கிறோம். இதற்கு மேலும் யாருக்கேனும் சந்தேகங்கள், குறைகள் இருப்பின் விரிவாக விவாதிக்க தயார்.

    ReplyDelete
    Replies
    1. பிரபா ,

      //சீனுவும் நானும் இந்த துப்புக்கெட்ட பதிவிற்கு மிகவும் நேர்மையாக பதில் சொல்லியிருக்கிறோம்./

      மிகத்தெளிவான பதில்களை நீங்கள் இருவரும் அளித்துள்ளீர்கள்,ஆனால் அப்படியான பதில் வர இப்படியாக யாரேனும் பதிவு போட்டு கிண்டனுமா என ஒரு கேள்வியும் எழுகிறதே அவ்வ்!

      தற்சமயம் வரையில் நிர்வாக குழுவின் சார்பாக தெளிவான ஒரு "கவரேஜ்" பதிவே வரவில்லை, ஆள் ஆளுக்கு என்னமோ எழுத எங்கோ போய் முட்டிக்குது,எனவே , பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நிரல் வரிசைப்படி,

      தமிழ்த்தாய் வாழ்த்து, உண்மை தமிழன் வரவேற்புறை, தலைமையுரை, சிறப்புறை பாமரன்,கண்மணி குணசேகரன்,,பதிவர் அறிமுகம் ,புத்தக வெளியீடு,இன்னபிற என பட்டியலிட்டு சுருக்கமாக நிகழ்வினை விவரித்து அதிகாரப்பூர்வமாக பதிவினை வெளியிட ஆவண செய்யவும்.

      நா.முத்துகுமார் வாராக,வைரமுத்து வாராக போன்று முன்னர் கிளப்பிவிடப்பட்டதால்,யார் வந்தாங்க, என்ன நடந்தது என தெரியாமல் குழப்பங்கள் உருவாவதை தவிர்க்க இம்முறை உதவும்.

      அப்படி ஒரு பதிவு ஏற்கனவே வந்திருந்து நான் அறியவில்லை எனில் எனது அறியாமை என கருதி மன்னிக்கவும்!

      வந்தவங்களுக்கு நிகழ்ச்சி தெரியும் என இருக்கலாம், ஆனால் வந்தவங்களை விட வராதவங்க தான் பெரும்பாண்மை , என்ன நடந்தது என சுமார் நாளு நாள் ஆகியும் பலருக்கும் தெரியாமல் ,ஆளுக்கொரு சித்திரத்தினை வரைந்து கொண்டுள்ளார்கள்.

      மிக முக்கியமான ஒன்று,

      பதிவர் சந்திப்பு நடத்த பலர் கடுமையாக உழைத்து நேரம் செலவிட்டதற்கு இணை எதுவும் இல்லை,அதில் குறை சொல்ல யாருக்கும் தகுதியில்லை,வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்!

      # சென்னையில் நடப்பது சென்னையில் மற்ற ஊர்களில் நடக்கும் பதிவர் சந்திப்பு அவ்வூர்களுக்கு என இருக்கும் போது,இங்கிருந்து இடப்பயெர்ச்சி செய்யப்போவது போல சிலர் சில ஊர் பெயர்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், இதை எல்லாம் யார் எதற்கு முடிவு செய்கிறார்கள்? ஒன்றுமே புரியலை.

      அடுத்தாண்டு சென்னையில் வேறு யாரேனும் பதிவர் சந்திப்பு என நடத்தினால் நாடுகடத்திடுவாங்களோ அவ்வ்!

      Delete


    2. // இந்த துப்புக்கெட்ட பதிவிற்கு//

      இது எப்படி பிரபா துப்புகெட்ட பதிவாகும்....? அப்படினா நீங்க கொடுத்த பதிலும் துப்பு கெட்டதா...?

      ஒரு பதிவர் சந்திப்பு விழாவில் இருந்த குறைகளை வெளிபடையாக தெரிவிப்பதுதானே சரி... எதற்கு என்றால் இவர் பீல் பண்ணின அதே விசயத்த எவ்வளவு பேர் பீல் பண்ணியிருகாங்கனு உங்களுக்கு தெரியுமா... ஆரம்பத்தில் விழுந்த கமெண்டை கொஞ்சம் படித்துப் பாருங்க... தமிழ்வாசி, குணபாலன் உட்பட நிறைய பதிவர்களே ஒத்துக் கொண்டுள்ளனரே... உள்ளுக்குள்ளேயே விவாதித்தால் இந்த தவறுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் உணர்ந்தார்கள எப்படி பிற பதிவர்கள் உணர்வார்கள்.முக்கியமாக புதிய பதிவர்கள்.

      இன்னும் நேர்மையாக சொன்னால் இந்தப்பதிவை முதலில் நீங்கதான் போட்டிருக்கணும். ஏன்னா இதில் உள்ள குறைபாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் முதலில் உங்களிடமிருந்துதான் வந்திருக்கணும்.. எவ்வளவோ சிரத்தையுடன் செயல் பட்டும் இது போன்ற சிறு குறைகள் ஏற்பட்டது.. அடுத்த முறை அது தவிர்க்கப்படும் என பொறுப்பான ஒரு பதிவு உங்களிடமிருந்து வந்திருந்தால் எவன் இதுபோல பதிவு போடப்போறான்..?

      நிகழ்ச்சி முடிந்து யார் என்ன சொன்னா என்ன என விட்டுவிட்டு சென்றுவிட்டு இப்போது இதை துப்பு கெட்ட பதிவு என சொல்வது எப்படி நியாயமாகும்..?

      Delete
    3. வவ்வால்,

      நீங்கள் கேட்டுக்கொண்ட படி முழுத்தொகுப்பு பதிவை கொண்டுவர முயல்கிறேன்...

      பதிவர் சந்திப்பு அடுத்த ஆண்டு மதுரையில் அல்லது ஈரோட்டில் நடைபெறும்... இதுகுறித்து அடுத்ததடுத்த ஆலோசனை கூட்டங்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்...

      வேறு யாரேனும் சென்னையில் நடத்துவதானாலும் தடுப்பதற்கில்லை...

      Delete
    4. // இது எப்படி பிரபா துப்புகெட்ட பதிவாகும்....? அப்படினா நீங்க கொடுத்த பதிலும் துப்பு கெட்டதா...? //

      சப்பிப்போட்ட மாங்கொட்டை,

      இதை ஏன் துப்புக்கெட்ட பதிவு என்று சொன்னேன் என்பதை நீங்கள் றோபல் போட்ட அடுத்த பின்னூட்டத்தை பார்க்கவும்...

      பதிவர் சந்திப்பில் குறைகள் இருந்தன. ஆனால் அண்ணன் அவற்றை சரிவர குறிப்பிடாமல் வேறு ஏதோ எழுதனுமே என்கிற ரீதியில் குறை சொல்லியிருக்கிறார்...

      "சவுக்கடி கேள்விகள்", சரியா சொன்னீங்க, தைரியமா உண்மைய சொல்லியிருக்கீங்க போன்ற சில டெம்ப்ளேட் ஆசாமிகள் போடும் டெம்ப்ளேட் பின்னூட்டங்களை வைத்து அவங்களே ஒத்துக்கிட்டாங்க பார்த்தியா என்று கேட்பது முறையல்ல...

      நான் குறைகளை சுட்டிக்காட்டுவதென்றால் நேரடியாக விழாக்குழுவினரிடமே சொல்லிவிடுவேன்...

      Delete
    5. பிரபா,

      //நீங்கள் கேட்டுக்கொண்ட படி முழுத்தொகுப்பு பதிவை கொண்டுவர முயல்கிறேன்...//

      நன்றி, அவ்வாறு முழு விவரங்களுடன் நிகழ்ச்சிப்பற்றி பதிவு வெளியானால் இது போல ஊகமாக அல்லது பல்வேறு குழப்பமான வாதபிரதிவாதங்கள் எழுவது தவிர்க்கப்பட்டுவிடும்.

      பதிவர் சந்திப்பு என்பது கலந்து கொண்டவர்களுக்கு நிச்சயமாக நம்பிக்கையும் ,புத்துணர்வும் அளிக்கும்,ஆனால் அதே போல கலந்து கொள்ளாமல் என்ன நடக்கிறது என தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம், அவர்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை எனில் அவநம்பிக்கை அடையக்கூடும் ,அதனை தவிர்க்கும் வகையில் உங்கள் பதிவு அமையும் என தோன்றுகிறது.

      #//நான் குறைகளை சுட்டிக்காட்டுவதென்றால் நேரடியாக விழாக்குழுவினரிடமே சொல்லிவிடுவேன்...//

      பதிவாக போட்டாலும் பிழையில்லை என நிர்வாகிகள் பெருந்தன்மையுடன் இருப்பதே நல்லது, ஏனில் அனைவருக்கும் கருத்து சொல்ல ,விமர்சிக்க உரிமை இருக்கு, கருத்து சுதந்திரம் வேண்டி தான் வலைப்பதிவுகளே உருவாச்சு, அதுல ஏன் இப்படித்தான் உங்க கருத்தைவெளிப்படுத்தனுமெனசொல்லிக்கிட்டு,கேள்விகள்

      எழுப்பப்பட்டால் பதில்கள் மூலம் சமன் செய்யப்படுவதே சரியான அணுகு முறையாகும்.

      Delete
    6. //"சவுக்கடி கேள்விகள்", சரியா சொன்னீங்க, தைரியமா உண்மைய சொல்லியிருக்கீங்க போன்ற சில டெம்ப்ளேட் ஆசாமிகள் போடும் டெம்ப்ளேட் பின்னூட்டங்களை வைத்து அவங்களே ஒத்துக்கிட்டாங்க பார்த்தியா என்று கேட்பது முறையல்ல...//

      பிரபா நீங்க சொல்ற டெம்பிளேட் ஆசாமிகள் கீழே இருக்காங்களே இவங்களா...

      தமிழ்வாசி பிரகாஷ்,Ramani S ,கவியாழி கண்ணதாசன்,திண்டுக்கல் தனபாலன்,சக்கர கட்டி,ஸ்ரவாணி,உஷா அன்பரசு,அமுதா கிருஷ்ணா..

      இவர்கள் எல்லோரும் இதை பாசிடிவாகத்தானே எடுத்துக் கொண்டார்கள். 17 ஓட்டு போட்டது எல்லோரும் உங்கள் நண்பர்கள்தானே.ரமனி சார் உட்பட. மூனா செந்திலுக்குப் பிறகுதான் இந்தபதிவு வேறு கோணத்திற்கு திசை திருப்பப் பட்டது... நீங்கள் கூட ஒருநாள் கழித்துதானே இதை துப்புகெட்ட பதிவு என அறிந்தீர்கள். அதுவரை படிக்கவில்லை என பொய் சொல்ல வேண்டாம்.

      சரி அவர்தான் இதை தவறுதலாக பொதுவெளியில் வைத்தார்.ஒத்துக் கொள்கிறேன் தவறுதான். ஆனால் இதன் எதிர்வினையை நீங்களும் அவர் மாதிரி பொதுவெளியில் தானே வைத்திருக்கிறீர்கள். ஏன் அவரிடம் பர்சனலாக உங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடியாதா...

      Delete
    7. வவ்வால், சப்பிப்போட்ட மாங்கொட்டை

      குறைகளை தனி மடலில் தான் அனுப்ப வேண்டும் என்று நான் எங்கேயும் குறிப்பிடவில்லை.

      For your reference, என்னுடைய முந்தய பின்னூட்டம் ஒன்று :-

      // நியாயமான குறைகள் இருப்பின் மின்மடல் மட்டுமல்ல, பகிரங்கமாக பதிவெழுதியும் சுட்டிக்காட்டலாம். ஆனால் இதுபோன்ற லுச்சாத்தனமான பதிவுகளை தவிர்க்கவும். //

      குறைகள் குறைந்தபட்சம் நேர்மையாக இருக்க வேண்டும்... அதை விடுத்து வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவது முறையல்ல...

      Delete
    8. சப்பிப்போட்ட மாங்கொட்டை,

      இந்த சப்பை மேட்டருக்கு நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்... நான் ஒருநாளில் ஓரிரு மணிநேரங்கள் மட்டுமே இணையத்தில் செலவழிக்கிறேன்... அதுவும் செளந்தரின் பதிவுகளை நான் சில மாதங்களாக படிப்பதில்லை... இந்த பதிவு கூட நக்கீரனின் பதிவை பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன்...

      Delete
  49. அனைத்து நண்பர்களுக்கும்....

    பதிவர் சந்திப்பில் பதிவர் என்ற முறையில் கலந்துக்கொண்டு மிகவும் சிறப்பாக இருந்தது. இதை நான் என்றா வகையிலும் விட்டுக்கொடுக்க வில்லை.

    மேலும் சில குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோன்றியது. அது என்ன புகழ்ந்து பதிவிட்டவர்களையெல்லாம் சென்று ஏன் இப்படி பதிவாக இடுகிறீர்கள் மெயில் சொல்லியிருக்க வேண்டியதுதானே என்று சொல்லவில்லை ஆனால் குறைகளைச்சுட்டி காட்டினால் மாத்திரம் இப்படியா...?

    பிரபாகரனுக்கு ஒரு கேள்வி..

    வளாகத்திற்குள் புகைப்பிடிக்ககூடாது என்று வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள்...
    எத்தனை பதிவர்கள் குறிப்பாக சென்னைபதிவர்கள் வளாகத்திற்குள் புகைத்துதள்ளீனார்கள் என்று நான் வேறசொல்லிக்காட்ட வேண்டும்.... இதை சுட்டிக்காட்டினால் சண்டைக்கு வருவாதா...?

    மதியம் 3.00 மணிக்கு மேல் குடிதண்ணீர்கூட ஏற்பாடுசெய்யவில்லை... வெளியில் சென்று குடிதண்ணீர் குடித்துவிட்டு வந்தோம்.... இதை சுட்டிக்காட்டியது தவறா...?

    ReplyDelete
    Replies
    1. செளந்தர்,

      அரங்கத்திற்குள் புகைபிடிக்கக் கூடாது என்றுதானே சொல்லியிருந்தோமே தவிர, வளாகத்தில் அல்ல... உங்கள் தேவைக்கு தகுந்தபடி வார்த்தைகளை மாற்றுவது அழகல்ல.

      தண்ணீர் கேனுக்கு அரசன் பதில் சொல்லியிருக்கிறார். பார்க்கவும்.

      Delete
    2. சவுந்தர்,

      //மதியம் 3.00 மணிக்கு மேல் குடிதண்ணீர்கூட ஏற்பாடுசெய்யவில்லை... வெளியில் சென்று குடிதண்ணீர் குடித்துவிட்டு வந்தோம்.//

      இதெல்லாம் கொஞ்சம் ஓவரு, யாராவது திட்டம் போட்டு தண்ணி கொடுக்க கூடாதுனு செய்வாங்களா? தண்னீர் தீர்ந்து போயிருக்கும்,கவனிச்சிருக்க மாட்டாங்க, நீங்களே குறிப்பிட்டு கேட்டிருந்தால் மீண்டும் தண்ணீர் வந்திருக்கும்,மேம்படுத்தி கொள்ள என்பதாக ஆரம்பித்து கடைசியில் எதையாவது சொல்லியே ஆகனும் என சொல்ல ஆரம்பித்துவிட்டதாக தோன்றுகிறது அவ்வ்.

      ஹி...ஹி எனக்கு டஸ்ட் அலர்ஜி மண்டப கூறையில நிறைய ஒட்டடை இருந்துச்சு,அதை சுட்டிக்காட்டினேன் யாரும் ஒட்டடை அடிக்கலைனு சொல்லிட மாட்டிங்கனு நம்புவோம் :-))

      Delete
  50. பொதுவாக நாம் யாரை வேண்டுமானாலும் குறைக்கூறுலாம் நாமை யாராவது குறைகூறினால் நம்மால்பொருத்துக்கொள்ள முடியாது...

    அப்படித்தான் இருக்கிறது இந்த கொந்தளிப்பு....

    ReplyDelete
  51. இந்த பதிவை குறைக்கூறுபவர்கள் கண்டிப்பாக கீழ்கண்ட பதிவை சென்று படித்து விட்டு வரவும்...

    இது என்னங்க சென்னை பதிவர்களுக்கு மட்டும் தனிசட்டமா...?

    http://www.madrasbhavan.com/2011/12/2011.html

    ReplyDelete
    Replies
    1. ஆமால.... யாரோ உடைச்சா மண் சட்டி ..பொன் சட்டி என்பாங்களே அது இதுதானா..

      Delete
  52. ////////
    ஆரூர் முனா செந்திலு said...

    சிவா சொல்ல வேண்டியது மாற்றுக் கருத்தாக இருந்தாலும் துணிச்சலாக சொன்னது பாராட்டும்படியானது. இந்த குறைகள் இல்லாமல் நாம் சென்னையில் பதிவர் சந்திப்பை நடத்த வேண்டியது அவசியம். அதனை நீங்கள் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி. புலவர் சங்கரலிங்கம் வேறு தொடர்பு கொண்டு பதிவர் சங்கம் பற்றி கேட்டுக் கொண்டேயிருக்கிறார். நான் சிவாவை கேட்டு தான் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டேன். இது சம்மந்தமாக ப்ரீயாக இருந்தால் போன் செய்யவும். விளக்கமாக சொல்கிறேன்.
    //////////

    இப்படி பேசிய இவரா இப்படி...?

    http://www.madrasbhavan.com/2011/12/2011.html

    ReplyDelete
  53. மதியம் 3.00 மணிக்கு மேல் குடிதண்ணீர்கூட ஏற்பாடுசெய்யவில்லை... வெளியில் சென்று குடிதண்ணீர் குடித்துவிட்டு வந்தோம்.... இதை சுட்டிக்காட்டியது தவறா...?//

    தலைவா நான் தான் குடி தண்ணீர் கேனை கொண்டு வந்து (மூன்றரை மணி இருக்கும் என்று நினைக்கிறேன்) நிரப்பினேன், கூடவே கோகுல் இருந்தார்! பக்கத்து அறையில் இருந்து எடுத்து வர தாமதமே வர தண்ணீரே இல்லை என்று பச்சை பொய் கூறுவது உங்களுக்கு அழகல்ல! உங்களுக்கு உண்மையில் அக்கறை இருப்பின் (வெளியே பொழுதை போக்கியதாக நீங்கள் சொல்லும்) விழாக் குழுவினரிடம் கேட்டிருக்கலாமே! பதிவில் கேட்கும் உங்களின் எண்ணம் கண்டு சிரிக்கத்தான் முடிகிறது!

    ReplyDelete
  54. http://goundamanifans.blogspot.in/2013/09/blog-post_5.html

    ReplyDelete
  55. ஆனா பாருங்க இம்புட்டு ரணகளத்திலும் ஒருத்தர் கூட மைனஸ் ஓட்டு போடல... நீங்க எல்லாம் அம்புட்டு நல்லவிங்களா...

    ReplyDelete
  56. என்னய்யா அம்புட்டுதான...?

    ReplyDelete
  57. எப்படியோ ஹிட்ஸ் கிடைச்சிருச்சு சௌந்தர்க்கு இந்த வாரம் நீதான் முதல் பதிவர் தமிழ்மனத்துல.

    நம்ம வவ்வு கூட வந்திருக்கு

    கவிதைவீதிக்கு ஏன் இத்தனை எழுத்துப்பிழை முதலில் அதைத்திருத்து அடுத்தவங்கள திருத்தலாம்.

    இது ஒரு வெட்டி பீசு அடப் போங்கப்பா போய் வேலைய பாக்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸேட்டு,

      ஹி...ஹி நாம காலத்தின் குரல்,பதிவுலகின் மனசாட்சி,எங்கும் உலாவுவோம்.

      Delete
  58. அட இது காமெடி போலிஸாச்சேப்பா :)

    வாத்தியார் தினத்தன்னிக்கா உட்டு அடிக்கிறது ?

    மிஸ்டர் நடுநிலை மொதல்ல அசிங்கசிங்கமா தலைப்பு போட்டு காப்பிபேஸ்ட் செய்வதை நிறுத்துங்க... அட்வைஸ் எல்லாம் அப்பாலிக்கா பாக்கலாம்

    ReplyDelete
  59. 'I Love Walking in the Rain Because Nobody can see me Crying" -Charlie Chaplin & I///

    ROFL

    ReplyDelete
  60. பதிவர் சந்திப்பை நேரலையில் பார்க்க முயற்சித்தேன் ...இயலவில்லை...பதிவர் சந்திப்பு எப்படி நடந்ததோ எனக்கு தெரியாது ...இருப்பினும் பதிவர்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்பதும், மேலும் பல பதிவர் சந்திப்புகள் சிறப்பாக நடத்தப்படவேண்டும் என்பதும் எனது தாழ்மையான வேண்டுகோள்...

    ReplyDelete
  61. திரு.சவுந்தர் அ வில் ஆரம்பித்து ஃ வரை குறைகள் மட்டுமே கூறியிருக்கிறீர்கள் என்ற விஷயத்தை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

    சில முனுமுணுபுக்களை தாண்டி விழா எதிர்பார்த்தபடி நடந்தது, விழா பிடிக்காமல் இருந்ததலா பெரும்பாலானவர்கள் விழா முடியும் வரை அரங்கில் இருந்தார்கள், ஒருவேளை பதிவர்கள் உடனான சந்திப்பு பிடிக்காமல் போயிருந்தால் அரங்கம் இல்லை அரங்க வளாகத்தை விட்டே போயிருப்பார்கள்...

    நான் என் வலையில் காதல் கடிதபோட்டி நடத்தினேன், அதற்கான பரிசுகளை மேடையில் வழங்குமாறு பலரும் என்னை வற்புறுத்தினர், ச்ச மேடையில் வழங்காமல் போய்விட்டோமோ என்று கூட ஒரு கட்டத்தில் வருத்தப்பட்டேன், நல்லவேளை நான் எடுத்த முடிவு சரி தான் என்பதை நீங்கள் நிருபித்து விட்டீர்கள், என் நிலைபாட்டில் இருந்த குழப்பம் விலகியது. மிக்க நன்றி

    பதிவர் சந்திப்பு குறித்த தகவல்களை, முன்னேற்பாட்டுக் கூட்டங்களில் கலந்தாலோசித்து எடுத்த முடிவுகளை முடிந்த அளவிற்கு தொகுத்துள்ளேன்.... இதற்கு மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் விவாதிப்போம்... தொகுப்பின் சுட்டியை இங்கே பின்னூட்டம் இடும் மற்ற பதிவர்களின் கவனத்திற்கு இணைகிறேன்...

    http://www.seenuguru.com/2013/09/tamil-bloggers-meet6.html

    ReplyDelete
  62. // 8. உட்காரவைத்து உணவு பரிமாறும் வகையில் ஏற்பாடு செய்யாததை ஒரு குறையாக கருத்தில் கொள்ளலாம். அடுத்தமுறை இதுகுறித்து கவனமாக இருப்போம்.//

    சவுந்தர்...

    இது ஒரு பெரிய விசயம் இல்லை... இப்பைலாம் பெரிய பெரிய திருமணங்களில் கூட புவே சிஸ்டம்ல நின்னு தான் சாப்பிட்ற மாதிரி செட் பண்றாங்க... சோ உணவு நின்னுகிட்டு சாப்பிட்றது இந்த காலகட்டதில் பெரிய விஷயம் இல்லை...

    அரங்கத்தில் வேர்த்தது உண்மை தான்... ஆனாலும் யாரும் இங்க நிறைய பணம் வச்சிகிட்டு இந்த அரங்கை புக் பண்ணல... எல்லாம் நிதிநிலை கருதி தான் இப்படி புக் பண்ணி இருக்காங்க... ஒவ்வொன்னுக்கும் காசு வருமா? வராதா? கைய கடிக்குமா? கடிச்சா என்ன பன்றதுன்னு 1000 கவலை விழாக்குழுக்கு இருந்துச்சு... அதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  63. பொதுவாகவே இது போன்ற பதிவர் சந்திப்புகள் அல்லது எந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டாலும், அதில் பங்களிக்க விரும்புபவர்கள் ஆரம்ப கட்டதிலே நான் இவ்வளவு தருவேன் என்று சொல்லிவிடுவதும், அதை எவ்வளவு விரைந்து அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைந்து அனுப்புவதும் நல்லது...

    வருமா?? வராத? என்ற நிலையில் வேலை பார்ப்பது மிகவும் சிரமம்... இதையும் இங்கு பின்னூட்டம் இட்ட அனைவரும் கருத்தில் கொண்டு, அடுத்த சந்திப்புக்கு ஆரம்ப கட்டதிலே பணத்தை அனுப்பி விடுங்கள் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்...

    ஏற்பாட்டாளர்கள் ஒவ்வொன்றுக்கும் தங்கள் கை காசை போட்டு செலவழிக்கும் சூழலை ஏற்படுத்தி கொடுத்தது பதிவர்களாகிய நமது தவறு... அந்த தவறை செய்துவிட்டு குவாலிட்டி எதிர்பார்ப்பது நியாயம் இல்லாதது....

    இங்க யாரும் 10 லட்சத்தை கைல வச்சிகிட்டு, கஞ்சத்தனமா இந்த ஹாலை புக் செய்யவில்லை... வேறு வழி இல்லாததாலே புக் செய்தார்கள்...

    ReplyDelete
  64. சீனு, அரசன், சிவா, பிரபா, செந்தில் மற்றும் விழா குழுவினருக்கு...

    ஒரு பெரிய நிகழ்சிக்கு பின் இது போன்ற குறைகள் வருவது இயல்பே... இது போன்று இன்னும் நிறைய பதிவுகள் வரலாம்... ஒவ்வொருத்தருக்கும் தனி தனியாக பதில் சொல்வது கடினம்...

    பேசாம ஒரு விளக்க பதிவ போடுங்க...குறைகளை பரிசீலிக்கிறோம் அடுத்த முறை அவை இல்லாமல் இருக்க முயற்சிக்கிறோம்னு சிம்பிளா சொல்லி முடிங்க.... அடுத்த முறை இந்த குறைகள் இல்லாமல் செய்யலாம்...

    மற்றபடி, ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கூட்டம் போட்டு, விவாதித்து, இந்த அளவு சிறப்பாக நடத்திய விழாக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...

    ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ சீனு, அரசன், சிவா, மதுமதி அன்ட் செந்தில்... குட் வொர்க்....

    ReplyDelete
    Replies
    1. சிராஜ்,

      சீனு முடிந்தவரையில் தொகுத்திருக்கிறார்.

      http://www.seenuguru.com/2013/09/tamil-bloggers-meet6.html

      Delete
  65. கவுண்டமணி - செந்தில் ப்ளாகில் எழுதியதை இங்கும் பகிர்கிறேன் :
    ***********
    சௌந்தர் பதிவு - அதிலுள்ள பின்னூட்டங்கள் மற்றும் இப்பதிவு இன்று வாசித்தேன்

    சௌந்தர் - நீங்கள் குறை சொல்வதில் தவறில்லை - நிறைகளை சொல்லிவிட்டு சில குறைகளை சொல்லியிருக்கலாம் ஆனால் குறைகளை மட்டுமே சொல்லியது .............................

    அவர் கூறியவற்றில் விழா அரங்கம் இன்னும் நன்றாக தேர்ந்தெடுத்திருக்கலாம் மற்றும் லைவ் ரிலேயில் ஆடியோ கேட்கும்படி இருந்திருக்கலாம் என்ற இரு குறைகள் தவிர மற்ற எதுவுமே பெரிய விஷயம் அல்ல !

    பதிவுலகில் உள்ள பல்வேறு குழுக்களிடமும் நட்புடன் பழுகுபவன் என்ற முறையில் - சொல்கிறேன் - பதிவர் சந்திப்பை நடத்தும் இக்குழுவிடம் உள்ள உழைப்பும், நேர்மையான வெளிப்படையான அணுகுமுறையும், ஒவ்வொரு பதிவரையும் அன்புடன் வரவேற்று அவர்களை உபசரிக்கும் பாங்கும் - சான்சே இல்லை ! இப்படி உழைப்பவர்கள் மீது - மளிகை கடை லிஸ்ட் போல குறை சொல்லும்போது - வலிக்கத்தான் செய்யும்

    சென்ற முறை நடந்த விழாவிற்கு வராத, சிறு வருத்தித்தில் இருந்த எத்தனையோ பதிவர்கள் இம்முறை வந்ததுடன் - விழா பற்றி பெரிதாய் எந்த குறை சொல்லாததையும் நாம் கவனிக்க வேண்டும்


    இவ்வளவு பெரிய விழா நடந்தால் - நிச்சயம் 2-3 குறைகள் வரத்தான் செய்யும் ; அவை தான் அரங்க தேர்வும், ஆடியோ பிரச்னையும். நிச்சயம் அடுத்த முறை இந்த தவறுகள் இல்லாதபடி விழாக்குழு பார்த்து கொள்ளும் ; ஆனால் அப்போதும் புதுசாய் சிறு சிறு குறைகள் இருக்கும் - அதனை பற்றி நிச்சயம் சௌந்தர் எழுத மாட்டார்; வேறு ஒரு நபர் புதிதாய் கிளம்பி வரக்கூடும் !

    " If you want to avoid Criticism, do nothing, say nothing; Be nothing".

    ReplyDelete
  66. இச் சாதாரண குறைகள் எல்லாம் சரி செய்யக்கூடியது
    ஆனால் கலந்து கொள்பவர்களின் குறைகளை விழாக்குளிவினர் சரி செய்ய முடியாதது
    இச்சந்திப்பின் நோக்கம் என்னவென்று தெரிந்து கொண்டு ஏற்பட்டர்களுக்கு ஒத்துழைத்து அதை எவ்வாறு சிறப்பிக்கலாம் ,உடனடி குறைகளை எவ்வாறு சரி செய்யலாம் ,தன்னுடைய சிறப்பான பங்கு இது என்ற அர்பணிப்புடன் கலந்து கொண்டால்தான் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெரும்.
    இருந்தாலும் குறைகள் சொல்பவர்களிடம் கோபப்படாமல் சரி செய்வது விழா குழிவினரின் ஒரு முக்கிய பொறுப்பு
    விழா குழிவினரின் ஆக்கிரமிப்பு என்பது மனித இயல்பே
    இது அவர்கள் விரும்பாவிட்டாலும் நடக்ககூடியதே
    இதில் தவறு கிடையாது
    அடுத்த சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!