03 October, 2013

நீங்கள் விரோதியா..? சீர்திருத்தவாதியா...?

தனக்கு கிடைக்காதது
யாருக்கும் கிடைக்கக்கூடாது
என்று சிந்திக்கிறவன்
சமூக விரோதியாகிறான்....!

தனக்கு கிடைக்காதது
மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும்
என்று கருதுபவன்
சமூக சீர்திருத்தவாதியாகிறான்..!

இந்த இரட்டை பார்வையிலிருந்துதான்
தரம்பிரிக்கப்படுகிறான்
மனிதன்...

தனக்கென்று வாழ்பவன்
தன் காலங்களில் வற்றிப்போகிறான்...

இந்த சமூகத்திற்கென்று  வாழ்பவன்
தன் காலங்களிலேயே வரலாறாகிறான்...!
வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

12 comments:

  1. உண்மை... உண்மை... சுயநலமில்லாத வாழ்க்கை சிறந்தது...

    தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்...
    தன்னலம் மறந்தால் பெரும்பேர் இன்பம்...

    பிறக்கும் போதும் அழுகின்றாய்...
    இறக்கும் போதும் அழுகின்றாய்...
    ஒருநாளேனும் கவலை இல்லாமல்...
    சிரிக்க மறந்தாய் மானிடனே...

    படம் : கவலை இல்லாத மனிதன்

    ReplyDelete
  2. எப்படிச் சொல்வது
    கடவுள் பாதி
    மிருகம் பாதி
    சேர்த்துச் செய்த கலவையாகவே
    பல சமயங்களில் இருக்க நேரும் போது...

    ReplyDelete
    Replies
    1. இந்த இரு பாதிக்குள்....
      கடவுளை நிரந்தரமான தூங்க வைத்துவிட்டு
      மிருகத்தை விழிக்கவைத்துக்கொண்டு இருக்கிறோம்...


      மாறுமா சமூகம்...!

      Delete
  3. சமூகத்திற்காக வாழ்பவர்கள் வெகு சிலரே...

    ReplyDelete
  4. அருமையான கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சுரேஷ்....

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி குமார்...

      Delete
  6. நல்ல கருத்தை எடுத்துச்சொல்லும் கவிதை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!