02 October, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா சினிமா விமர்சனம்


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா என வித்தியாசமான படத்தலைப்பை வைத்துக்குகொண்டு புதுசா ஏதாவது சொல்வார்களா என்று ரசிகர்களை ஆவலில் வைத்தப்படம். (விளம்பரங்கள் அதுபோல் இருந்தது....)


சம்மந்தமில்லாத மூன்று கதைகளை... சின்ன சின்ன ப்ளாஸ்பேக்குகளுடன் சொல்லி... பின்பு ஒன்றையென்றை சம்மந்தப்படுத்தி ஒரு இரவில் ஒன்றாக்கும் கதை. 

சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி...  வடச்சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வேலைவெட்டியில்லாத பையன்... தனக்கு எதிர்வீட்டில் இருக்கும் நந்திதாவை ஒருதலையாக காதல் செய்கிறார்... நந்திதாவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் தொல்லைக் கொடுப்பதுதான் இவருடைய வேலை...

சேதுபதியின் தொல்லை தாங்க முடியாத நந்திதாவுடைய அப்பா (பட்டிமன்ற ராஜா) இவரைமிரட்ட  ரவுடி அண்ணாச்சியான பசுபதியிடம் முறையிடுகிறார்.. பசுபதியும் விஜய்சேதுபதியை கூப்பிட்டு பஞ்சாயத்துப்பண்றாறு.... (இது ஒருகதை)


அப்புறம் வங்கியில் வேலைசெய்யும் பெய்யையே பொழப்பாகக்கொண்ட பாலா (அஸ்வின்)... அவருக்கு ஜோடியாக
ஸ்ருதி... இந்த இருவருக்கும் காதல்... இவர்களுக்குள் அடிக்கடி சண்டை சமாதானம் இப்படியே போய்கிட்டு இருக்கு... காதலிடமும் அலுவலகத்தில் மேனஜரிடமும் செமதிட்டுவாங்கி பொழப்பை ஓட்டறதுதான் இவருடைய வேலை... (இது ஒரு கதை)


அதற்கு அடுத்தாற்போல் ஒரு ஆந்திர அழகி.... தன்னை காதலிப்பதாக சொன்ன இரண்டுப்பேரை வச்சி தன்னுடைய கணவனை கொல்ல திட்டமிட்டு  ஒயின்ஷாப்பில் தண்ணிஅடிக்கும் போதே கொலைசெய்துவிடுகிறார்கள்.. (கள்ளக்காதலனாக இரண்டுபேர் அதுல ஒருத்தர் மொட்டை நான் கடவுள் ராஜேந்திரன்) இவர்களுக்குள் நடக்கும் உரையாடல்.... (இது மூன்றாவது கதை...)

இந்த மூன்று கதையும் ஒயின்ஷாப்புலதான் ஆரம்பிக்கிறது. பின்பு எப்படி இந்த மூன்று கதையையும் ஒன்றாக்குகிறார் என்பதைதான் டிராஜெடியான கா‌மெடியுடன் சொல்லியிருக்கிறார்


சம்மந்தமே இல்லாத இந்த மூன்று கதையை.. ஒரு இரவில் கொஞ்சகொஞ்சமாய் சம்மந்தப்படுத்தி இறுதியில் அனைத்திற்கு நல்லதொரு முடிவு சொல்லியிருக்கும் படம்தான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.... (குழப்பமாக இருந்தாலும் புரிஞ்சிகிட்டுதான் ஆகனும்... படமும் அப்படித்தான் இருக்கு).

அஸ்வின் குடிச்சிட்டு பைக்கை ஓட்டி வரும்போது...  ஒரு கர்ப்பிணி பெண்ணை மோதிடறாரு... பிரச்சனை ஆரம்பிக்கிறது... மருத்துவமனையில் சேர்த்துப்பின் அவருக்கு ரத்தம் தேவைப்படுது அந்த இரத்த குருப்... நம்ம சேதுபதியோடது... இரதத்திற்காக இரவெல்லாம் அவரை தேடி அலையுறாங்க....

பஞ்சாயத்து பண்ண கூப்பிட்ட பசுபதிகிட்ட தன்னுடைய காதலை நகைச்சுவையோடு விவரமா சொல்ல.. கடைசியில நந்திதா இவரை பிடிக்கலன்னு போன்பண்ணி சொல்லிடுறாங்க.....  பின்பு அனைவரும் சேர்ந்து சேதுபதியை செமமாத்து மாத்தி அனுப்புறாங்க... 

அடிப்பட்ட பீலிங்கோட சரக்குசாப்பிட... சரக்கு கிடைக்குமா என்று ரொம்ப சுமார் மூஞ்சி குமார் என்ற இன்னோரு கேரட்டரோடு ஒரு ஒயின்ஷாப் விடாம இரவு முழுவதும் சுத்திகிட்டு இருக்காரு.... (வா குவாட்டர் கட்டிங்க சிவாபோல) இவருடைய செல்போன் மெட்டை ராஜேந்திரன்கிட்ட மாட்டிக்குது...


இறுதியில் சேதுபதியை தேடி கண்டுபிடிச்சி விபத்தில் சிக்கிய அந்த பெண்ணுக்கு இரத்தம் கொடுக்கவைக்கிறாங்க... இதற்கு பிரிதிபலனா நந்திதா தன் காதலை ஓகே பண்றாங்க.... (இரவு முழுவதும் தேடி இவருக்கு சரக்கு கிடைக்கல.. அதனாலதான் ‌இரத்தம் கொடுத்து அந்த பெண்ணை காப்பாத்த முடிஞ்சது.)

படம் முதல் பாதியில் அனைத்து கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி கொஞ்சம் மொக்கை காமெடியோடு நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.. பிற்பாதியில் ‌கொஞ்ச கலகலப்போடு விருவிருப்பை ஏற்றியிருக்கிறார்...

விஜய் சேதுபதி பொருத்தவரை தன்னுடைய
ரோலை நல்லா பண்ணியிருக்கிறார். சும்மாயிருக்கிற குடிகார கெட்டப்புல செம கலக்கல்.... நந்திதாவிடம் திட்டுகளை வாங்கிக்கொண்டு அதையெல்லாம் மறந்து மீண்டும் அவர்பின் சுற்றுவது.... பசுபதியிடம் தன்னுடைய காதலை நகைச்சுவையோடு சொல்வது... ஆள்வைத்து அடித்தவுடன் அந்த பீலிங்கில் சரக்கடிக்க ஆப் தேடி அலைவது என.... தன்னுடைய ‌ரோலை நன்றாக செய்திருக்கிறார்.

இந்த நந்திதாவை ஏங்க எந்தப்படத்திலும் ஹீரோவை லவ் பண்றமாதிரி காட்டமாட்டேங்குறாங்க... (நான் பார்த்தது அட்டக்கத்தி, எதிர் நீச்சல்) படத்தில் இவருக்கு வேலையில்ல... சேதுபதியை திட்டுவதோடு சரி..


படம் ஒயின்ஷாப்புல ஆரம்பிச்சி ஒயின்ஷாப்பிலே முடியுது... எந்தப்பக்கம்பார்த்தாலும் டாஸ்மாக் காட்சிகள் வந்துடுது... கதையில் பெரும்பாலான காட்சி அமைப்புகள் ஒயின்ஷாப்பிலே நடக்குது...

இருக்கும் அத்தனைப்பேரும் தன்பங்குக்கு காமெடியில் கலக்கியிருக்காங்க... குறிப்பாக சேதுபதி... பசுபதி.. கூடஇருக்கும் ரோபோ ஷங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர், பரோட்டா சூரி.. ராஜா, லிவிங்ஸ்டன் இப்படி பல காதாப்பாத்திரங்கள் தன்பங்குக்கு கலக்கியிருக்காங்க....


சரி.. படத்துல என்ன மெசேஜ் சொல்லியிருக்காங்கன்னு கேக்றீங்களா... அதாவது குடி குடியை கெடுக்கும்...  யாரும் குடிக்காதீர்கள் என்ற கருத்தை மையப்படுத்தியிருக்கிறார். குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் விபத்து ஏற்படுகிறது... குடிக்காமல் இருந்ததால் இரத்தம் கொடுத்து ஒருத்தரை காப்பாத்த முடிஞ்சது... இதனால இனிமேல் யாரும் குடிக்காதீங்க என்று தன்னுடைய பாணியில் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் கோகுல்... (இந்த நாளில் வெளிவர பொருத்தமான படம்தான்)

படத்துல நிறைய வசனங்கள் புரியலை.. நிறைய காட்சிகள் குடிப்பதை காட்டுவதால் கொஞ்சம் அறுவருப்பாக இருக்கிறது... பாடல்கள் சுமார்... இசை பரவாயில்லை...  மொத்தத்தில் படம் சுமாரே... ஒரு முறை பார்க்கலாம்...! (ஓசியில டிக்கெட் கிடைச்சா பெஸ்ட்)


நான் ரசித்த வசனங்கள்.. ‌அத நான் சொல்ல மாட்டேன்....
 
எதிர்பார்க்கப்படும் குமுதம் ஆனந்த விகடன் ரேங்க் : அடுத்த வாரம் அந்தந்த புக்குல வரும் பார்த்துக்கங்க...
 
இயக்குனருக்கு நான் சொல்ல வருவது : ஏதும் இல்லை...

என்னோட பஞ்ச்.. :  இப்ப ஏதுவும் தோணல...

ரைட்டுவிடு...!

3 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!