19 November, 2013

யுத்தமின்றி சப்தமின்றி ஒரு வன்முறை..!

Beautiful Girl

ன் நினைவு
எப்போதெல்லாம் பொழிகிறதோ!

அப்போதெல்லாம்
முளைத்த காளான்கள் தான்
இந்தக்கவிதைகள்..!

I Love You

னதோடு புதைந்த காதலை
விழிவழியாய் சொல்ல 
நினைக்கையில்...

முடியாமல் போகிறது
முன்பே சுரந்துவிட்ட 
கண்ணீரால்..!

I love you

த்தியின்றி ரத்தமின்றி
ஒரு மரணம்..!

யுத்தமின்றி சப்தமின்றி
ஒரு வன்முறை..!

உன் மௌனத்தால்..!

Beautiful Rose

காதல் தொடங்கியபோது
அரை கவிஞன் ஆனேன்..!

காதல் முடிந்த போது
முழு கவி‌ஞனாகிவிட்டேன்..!

A rose for you

மிழுக்கு அங்கீகாரம்
கிடைக்கவில்லையென்று
யார் சொன்னது...

அதோ ...!
அவளை உச்சரிக்க விடுங்கள்..!

Pink Rose

ந்தர்ப்ப சூழ்நிலைகளால்
பிடிக்காமல் போயிருக்கலாம்

ஆனால், 
காதலை யாரும்
சபித்தது கிடையாது..

எட்டவில்லையென்றாலும்
இது இனிக்கின்ற பழமே...!

Heart made of pink roses

சொல்லத் தெரிந்தாலும்
சொல்ல முடிவதில்லை...!

எழுதத் தெரிந்தாலும்
எழுத முடிவதில்லை..!

தொண்டையில் சிக்கிய முள்போல்
உள்ளே செல்ல முடியாமலும்
வெளியில் வரமுடியாமலும்
தவிக்கிறது என் காதல்..!

Yellow Flowers

வீசிய வலையில் சிக்கிய படங்களுடன்
என் காதல் கவிதைகள்...!
(மீள் பதிவு)

8 comments:

  1. சூப்பரா இருக்கு.
    அதிலும் அவள் உச்சரிப்பில் தமிழுக்கு
    அங்கிகாரம் என்பது நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்.
    தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டேன்.

    ReplyDelete
  2. வணக்கம்

    கவிதையின் வரிகள் அருமை ரசித்தேன்... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மீள் பதிவிலிருந்தும் என்னால்
    மீள முடியவில்லை.

    கவிதைகள் அருமை சௌந்தர்.

    ReplyDelete
  4. அற்புதமான அசத்தலான
    காதல் கவிதைகள்
    காதலிக்கத் தூண்டுகிறது
    காதல் வெற்றி பெறவில்லையென்றாலும்
    கவிஞனாக அதிக வாய்ப்பிருக்கிறதே
    மனம் கவர்ந்த கவிதைகளுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அசத்தல்...

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. காதல் தொடங்கியபோது
    அரை கவிஞன் ஆனேன்..!

    காதல் முடிந்த போது
    முழு கவி‌ஞனாகிவிட்டேன்..!

    காதலின் மகிமையே அதுதான்!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!