விலகி நடந்த உன்னை
நெருங்க வைத்தது...
சிலையாய் நடந்த உன்னை
சிலிர்க்க வைத்தது....
வேகமாய் நடந்த உன்னை
நளினப்பட வைத்தது....
ரம்மியமாய் நடந்த உன்னை
ரசிக்க வைத்தது...
ஆகையால் மழை நல்லது...!
நெருங்க வைத்தது...
சிலையாய் நடந்த உன்னை
சிலிர்க்க வைத்தது....
வேகமாய் நடந்த உன்னை
நளினப்பட வைத்தது....
ரம்மியமாய் நடந்த உன்னை
ரசிக்க வைத்தது...
ஆகையால் மழை நல்லது...!
நீ நட்டு வைத்த பூச்செடி
என்னை சபித்துக்கொண்டிருக்கிறது...
மழையில் நனைகிறதே என்று
குடைபிடித்ததற்கு....!
ஒருவேளை
உன்னை எனக்கு பிடித்தது போல்
செடிகளுக்கு மழை பிடிக்குமோ..?
அழிக்கவும் அழகாக்கவும்
செய்கிறது மழை...!
நீ போட்ட கோலத்தை
அழித்துவிடுகிறது...
நனையும் உன் கோலத்தை
அழகாக்குகிறது...
எதை அழிக்க வேண்டும்
எதை அழகாக்க வேண்டும்
என்று தெரிந்த மழையை...
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னோடு சேர்ந்து..!
#மழைக்_கால_கவிதைகள்
வணக்கம்
ReplyDeleteமழைக்கால கவிதையின் வரிகள் அருமையக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்துக் கவிதைகளும் அருமை!. மிக ரசித்தேன்.
ReplyDeleteசெடிக்கு குடைப் பிடித்தீர்களா? ..கலக்கிவிட்டீர்கள் .. :)
அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ சிறப்பான வரிகள் இவை மேலும் தொடரட்டும் மழைபோல் மக்களின் மனதையும் கவரும் வண்ணம் .
ReplyDeleteதண்ணீரில் மிதக்கும் கோலமாய் தெரியும் அவளை நானும் ரசிக்கிறேன் !
ReplyDeleteத ம 6
அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமை :)
ReplyDelete//நீ நட்டு வைத்த பூச்செடி
ReplyDeleteஎன்னை சபித்துக்கொண்டிருக்கிறது...
மழையில் நனைகிறதே என்று
குடைபிடித்ததற்கு....!
ஒருவேளை
உன்னை எனக்கு பிடித்தது போல்
செடிகளுக்கு மழை பிடிக்குமோ..?/// அருமை அருமை...
அன்பின் சௌந்தர் - கவிதைகள் அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஆகையால் மழை நல்லது...!
ReplyDeleteஅதனால் வந்த கவிதையும் நல்லது!