16 December, 2013

இது ஒரு பேருந்து பயணத்தில் நிகழ்ந்தது...!



எனக்கான இன்றைய
பேருந்து பயணத்தில்
காதலாய் ஒரு கவிதையை 
தந்துவிட்டு செல்கிறாள் அவள்..

எனக்கு முன்
ஏதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி...
எனக்குப் பின் 
ஏதோ ஒரு நிறுத்தத்தில் இறங்குகின்றாள்...

அவள் ஏறிய இடமும்
இறங்கிய இடமும் தெரியாது
 இந்த பயணத்தில்...

ஜன்னலுக்கு வெளியே
ரசித்துக்கொண்டு வந்த அவளை
ரசித்துக்கொண்டிருந்தேன் நான்...!

ஒரு காதல் காவியத்தில்
தொலைந்துப்போன பக்கங்கள் போல
இறங்கிப்போகிறாள் அவள்...

ஐகூக் கவிதையில்
மூன்றாம் வரியை தவறவிட்ட
வாசகன்போல் தவிக்கிறேன் நான்...


சஞ்சலப்பட்ட மனதோடு
தற்போதைக்கு
இறங்கும் இடத்தை மறந்துவிட்டு
பயணிக்கிறேன் நான்...!



தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

7 comments:

  1. தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி... விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

    ReplyDelete
  2. //ஒரு காதல் காவியத்தில்
    தொலைந்துப்போன பக்கங்கள் போல
    இறங்கிப்போகிறாள் அவள்...

    // மிகவும் அருமை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கவிதை அழகு...

    ReplyDelete
  4. ஹலோ! வாத்தியான நீங்களே பஸ்சுல போற புள்ளையை சைட்டடிச்சா பசங்களும் அதைத்தானே பண்ணுவாங்க!!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!