12 December, 2014

ரஜினியின் லிங்கா விமர்சனம் / Lingaa movie review


கதையானது ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தொடங்குகிறது. சோலையூர் கிராமமானது மழைக்காலத்தில் வெள்ளத்தாலும், வெயில்காலத்தில் வறட்சியாலும் பாதிப்படைகிறது. இதனால் அங்கு விவசாயம்‌ பொய்த்து விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.

மைசூர் பகுதிக்கு ராஜாவான ரஜினி தன் தந்தையின் ஆசைக்கிணங்க படித்து மதுரை பகுதிக்கு ஆட்சியாளராக வருகிறார்... சோலையூர் மக்களின் துயரை நேரில் பார்க்கும் ரஜினி அந்த பகுதியில் பெரிய அணைக்கட்டவேண்டும் என ஆங்கில அதிகாரிகளிடம் மேல்முறையிடு செய்கிறார். அதனால் ஆங்கில கம்பெனிக்கு எந்த லாபமும் இல்லை என மறுத்துவிடுகிறார்கள். கோவமடைந்த ரஜினி தன் பதவியை துறந்துவிட்டு தானே தன்னுடைய சொந்த செலவில் அணை கட்டுகிறேன் என்று முடிவெடுக்கிறார். (ரஜினி சிவில் இஞ்ஜினியரீங் படித்தவராக இருக்கிறார்).


ஆங்கிலேயர் தரும் பல்வேறு இன்னல்களுக்கு இடையே  தன்னுடைய அரண்மனை, சொத்து, நகைகள் என அனைத்தையும் ஆங்கில அதிகாரிக்கு எழுதிகொடுத்துவிட்டு மக்களுக்காக அணையை கட்டிமுடிக்கிறார். கூடவே அந்த அணையை ஒட்டி ஒரு சிவன் கோயிலும் கட்டுகிறார். ஆனால் அதை திறக்கும் சமையத்தில் சிலரின் சதியால்  ரஜினி மீது பல்வேறு பழிகள் வர அவர் அந்த கிராமத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்.


ரஜியின் மீது வெறுப்படைந்த மக்கள் அவர் கட்டிய கோயிலை மூடிவிடுகிறார்கள். அணையும் இடிந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். ஆனால் அணை எந்தபாதிப்பில்லாமல் நீர்நிரம்பி சரியாக செயல்படுகிறது... ராஜாவான ரஜினி தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் விற்றுதான் இந்த அணையை கட்டிமுடித்திருக்கிறார் என்ற உண்மை வெளிவர ஊர்மக்கள் மனதிருந்துகிறார்கள்.

ராஜா ரஜினியை வைத்தே மீண்டும் அந்த கோயிலை திறக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். தேடிஅலைந்து ரஜினியை கண்டுபிடித்து அழைக்க அவர் மறுத்துவிடுகிறார். பூட்டிய கோயில் பூட்டியபடி இருக்கிறது.

80 ஆண்டுகளுக்குப்பிறகு ராஜா லிங்கேஸ்வரனின் பேரனான தற்போதைய ரஜினியை எப்படியாவது தேடிகண்டுபிடித்து பூட்டிய இந்த கோயிலை திறக்கவேண்டும் என்று முடிவெடுத்து அவரை தேடுகிறார்கள். அவரை தேடும் பணியை அனுஷ்காவிடம் ஒப்படைக்கிறார்கள்.


அப்படி ரஜினி கிடைத்தாரா....? கோயில் திறக்கப்பட்டதா..? தற்போதை அரசியல்வாதிகள் மூலம் அந்த அணையின் பலம்  சரியில்லை என்று சொல்லி 4000 கோடியை புதிய அணைக்கட்டி சம்பாதிக்க நினைக்கும் சதியை எவ்வாறு முறியடிக்கபட்டது.... என்பதையே இறுதி காட்சிகள் விளக்குகிறது.


கதை புதிதில்லை என்றாலும்... ரஜினியை வைத்து ரசிகர்களை கொஞ்சம் சிரித்து, கொஞ்சம் அழுது, கொஞ்சம் கைதட்டி குடும்பத்துடன் ரசிக்ககூடிய படத்தை என்னால் தரமுடியும் என்று இன்னொறு முறை நிறுபித்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

தற்போது விமர்சனத்திற்கு வருகிறேன்...!

கதை தற்போதைய பேரன் ரஜினியிடம் இருந்து ஆரம்பிக்கிறது. ராஜா பரம்பரை என்பதை தவிர தற்போது வேறெதுவும் தன்னிடம் இல்லை என்பதால் திருட்டு வேலை செய்து  காலத்தை ஓட்டுகிறார் ரஜினி...! அவருடன் கூட்டாளியாக சந்தானம், கருணாகரன், பாலாஜி டீம்... முதல் அரைமணிநேர படம் இவர்களுடைய லூட்டியால் அரங்கம் அதிர்கிறது...!



இவர்தான் ராஜா லிங்கேஸ்வரனின் பேரன் என்பதை அறிந்த அனுஷ்கா இவரை எப்படியாவது தன்னுடைய சோலையூர் அழைத்து சென்று அந்த கோயிலை திறக்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

ஆனால் முதலில் வரமறுக்கும் ரஜினியை... ஒரு நகைத்திருட்டில் மாட்ட வைத்து அவரை தப்பிக்கவைப்பதைபோல் சோலையூர் அழைத்துவருகிறார்... அங்கு வந்தப்பிறகு தன்னுடை்ய தாத்தாவின் உண்மையான தான தர்மத்தையும் அறிந்துக்கொள்கிறார். தாத்தாக்கட்டிய அணைக்கு தற்போதைய அரசியல்வாதியால் ஏற்படவிருக்கும் இன்னலை எப்படி சமாளிக்கிறார் என்பதையும்  பரபரப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் லிங்கா...!

வயசானாலும் அந்த ஸ்டைலும், அழகும் அப்படியே இருப்பது ரஜினி ஒருவருக்கு மட்டும்தான் என்று நினைக்கிறேன். படம் முழுக்க அப்படியெரு வேகம்... ராஜா கெட்டப்பில் வரும் ரஜினி இன்னும் அமர்களப்படுத்தியிருக்கிறார்...! சென்னைவாசியாக சந்தானத்துடன் சேர்ந்து ரசிகர்களை சிரிக்கவைக்கிறார்...

காதாநாயகிகளாக அனுஷ்காவும், சோனாக்ஷி, தற்போதைய கதையில் ரஜினியை தேடி கண்டுபிடித்து அழைத்துவரும் பொறுப்பில் அனுஷ்காவும், ராஜா ரஜினிக்கு கிராமத்து கதாபாத்திரத்தில் சோனாக்ஷியில் ஜோடிபோட்டு தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்துமுடித்திருக்கிறார்கள்...



கே.எஸ்.ரவிக்குமார் படம் என்றாலே கதாபாத்திரங்களுக்கு குறைவிருக்கிறது... இதிலும் அப்படியே..! ஆனாலும் குழப்பமில்லாமல் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்.


இடைவேளையில் கொஞ்சம் இழுப்பதுபோல் தெரிந்தாலும் அதை தேசப்பற்று டானிக்கை சேர்த்து இழுவை மறக்கடித்துவிடுகிறார்.. 80 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய கார்கள், ஆடைகள், ரயில் வண்டி, சாரட்வண்டிகள் என கலைஇயக்குனரை சரியாக பயன்படுத்தி சபாஷ்வாங்குகிறார்...

இசை சொல்லவே தேவையில்லை... அத்தனையும் அழகு... ஏ.ஆர் ‌ரஹ்மான் தன்னுடைய பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்...  இந்தியனாய் வா பாடல் எழுச்சியாய் இருக்கிறது...! அனைத்து பாடல்களையும் அழகிய செட்போட்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்கள்...!


குடும்பத்துடன் சேர்ந்துபார்க்கக்கூடிய படத்தை கொடுத்து மீண்டும் ஒருமுறை வெற்றிப்பெற்றிருக்கிறது ரஜினி கே.எஸ். கூட்டணி...

7 comments:

  1. ரஜினி படத்தில் கதையை யார் பார்க்கிறார்கள் ரஜினியைத்தானே! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வெற்றி தான்... பார்ப்போம்...!

    ReplyDelete
  4. Get all the latest Telugu Movie Reviews. Read what the movie critics say and give your own rating. Find Here all complete information about Movie
    Latest Movie Reviews

    ReplyDelete
  5. தங்கள் விமர்சனம் நன்று...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!