20 December, 2014

பிசாசு - சினிமா விமர்சனம் / mysskin pisasu movie review


மனிதன்... மிருக இனத்தின் முதன்மையானவன்... தெய்வ இனத்தின் கடைசியானவன்... தெய்வத்தின் இயல்புகள் நம்மிடம் இருந்தாலும் நமக்குள் இருக்கும் மிருகமே நம்மை ஆட்சிசெய்கிறது... ஒவ்வொறு மனிதனும் ஒரு மிருக குணாதிசயங்களை கொண்டிருக்கிறான் அந்த குணாதியசங்கள் மேலோங்கும்போது அவனால் இயல்பான நிலைக்கு வரமுடியாமல் போய்விடுகிறது... (உதாரணம் வேண்டுமா.. இன்றை செய்திதாளில் வந்த சில செய்திகளை படிங்கள்...) அப்படிப்பட்ட சில மனிதர்களின் குணங்களை வெளிகாட்டியப்படம்தான் மிஸ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  என்ற திரைப்படம்..

படம் போட்டப்பணத்தை எடுக்கவில்லை என்றாலும் அதன் காட்சியமைப்பு, ஓளி,ஒலி பதிவு, கதாபாத்திரங்களை கையாண்டவிதம், திரைக்கதை அமைப்பு போன்றவை என்றைக்கும் தமிழ்சினிமாவின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்... (கதைப்பற்றிய விவாதம் வேண்டாம்) அந்தப்படம் பாலாவை கவரவே இந்த இருவரின் கூட்டணி பிசாசு படத்தின் மூலம் இணைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஓ... ஆ... படத்தில் மனிதனை மிருத்துடன் சம்பந்தப்படுத்திய மிஸ்கின்.. இந்தப்படத்தில் மனிதனை ஆவிகளுடன் சம்பந்தப்படுத்தியிருக்கிறார்... மனிதர்களுக்குள் பேய் குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்... சில பேய்களுக்கும் மனிதகுணமும் இருக்கிறது... பேய்கள் நம்மோடும் நட்புறவுக்கொள்ளும் என்ற விஷயத்தை தன்னுடைய பாணியில் சொல்லியிருக்கிறார்.



பிசாசு படத்தில்... நெஞ்சை அதிரவைக்கும் பயங்கர காட்சிகள்... மிரளவைக்கும் முகங்கள், ராட்ஸச உருவங்கள், இப்படி ஏதும் அதிக அளவில் இடம்பெறாமல் எளிமையான கதையை எடுத்துக்கொண்டு தன்னுடைய திரைக்கதை மற்றும் கேமராவின் மூலம் உயிர்கொடுத்து கொஞ்சமாய் மி‌ரட்டியிருக்கிறார் மிஸ்கின்...


முதல் காட்சி... நாயகியின் (புதுமுகம் பிரயாகா) முகம் குளோசப்பில் காட்டப்படுகிறது... அழகிய மெல்லிய, புன்முருவல், காட்சி விரியும்போதுதான் தெரிகிறது .. ‌ஸ்கூட்டியில் வரும் இவரை ஒருகார் இடித்துவிட சாலையோரம் அடிப்பட்டு ரத்தம் வடிந்து படுத்திருக்கிறார்... அருகில் இருக்கும் சிலர் ஓடிவந்து அரை பார்க்கிறார்கள்.... அதில் ஒருவர்தான் நாயகன் (புதுமுகம் நாகா).

இறக்கும் தருவாயில் இருக்கும்  அவரை மருத்துவமனையில் சேர்க்க ஆட்டோவில் ஏற்றிக்கொண்டுச் செல்கிறார்கள்... மருத்துவமனையில் உள்ளே செல்லுகையில் நாயகனின் கையை பிடித்துக்கொள்கிறார் நாயகி... அதன்பிறகு நாயகனை பார்த்தவாரே உயிரை விட்டுவிடுகிறார்... (இந்த படத்தில் நாயகிக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வசனம்தான் அது இறக்கும் தருவாயில் நாயகனை பார்த்துசொல்லும் “ப்பா..“ என்பதுதான்)



இனிதான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.. படத்தில் நாயகன் இசையமைப்பாளரிடம் பணிபுரியும் ஒரு வயலின் வாசிப்பாளராக இருக்கிறார். இந்த சம்பவத்துக்குபிறகு அவரால் அதிக கவனம் சொலுத்தமுடியாமல்  மனஅழுத்தம் கொள்கிறார்... அப்பார்மெண்டில் தனியாக இருக்கும் இவர் தன்னுடைய வீட்டில் வித்தியாசமாக சிலவிஷங்களை பார்க்கிறார்...

தன்னுடைய வீட்டில் இறந்த அந்த பெண்ணின் ஆவி இருக்கிறது என்ற உண்மை இவருக்கு தெரியவருகிறது. அதன் பிறகு பயந்துநடுங்கி அதை விரட்ட பல்வேறு வழிகளை மேற்கொள்கிறார்.... அது தனக்கு மிகுந்த இன்னல்களை தருவதாக நினைத்துக்கொள்கிறார்... இப்படியே இடைவேளைவரை பயமும் கலகலப்புமாக நகர்கிறது.


இவரைப்பார்க்க வரும் அம்மாவுக்கு இந்த விஷயத்தை சொல்ல  அவர்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பேயாவது பிசாசாவது என்று கூறி அங்கு தங்குகிறார்... தன்னுடைய அம்மாவை ஏதாவது செய்துவிடுமோ என்ற பயத்தில் நடுங்குகிறார்...

அவர் எதிர்பார்த்தபடி‌யே அம்மாவுக்கு குளியலரையில் வழுக்கிவிழுந்து அடிப்பட்டுவிடுகிறது.. அதற்கு காரணம் அந்த பெண்ணின் ஆவிதான் என தவறாக புரிந்துக்கொள்கிறார்... உன்னைகாப்பற்ற வந்ததற்கு எனக்கு இதுதண்டனையா.. முடிந்தால் கென்றவர்ளை தேடி போகவேண்டியதுதானே என குமுறுகிறார்...


அதன்பிறகு நாயகனின் அம்மா குணமடைந்து உண்மையை சொல்கிறார் அடிப்பட்ட விழுந்த என்னை காப்பாற்றியது அந்த ஆவிதான் என்று... அதன்பிறகே இவருக்கு தெரிகிறது இந்த பேய் நமக்கு உதவிச்செய்கிறது என்று...!



சம்மந்தமே இல்லாத நமக்கு இப்படி உதவியாய் இருக்கும் இந்த பெண்ணை விபத்திற்குள்ளாக்கியது யார் என்ற உண்மையை கண்டுபிடிக்க துப்பு துலக்குகிறார்... அதன்பிறகுதான் பரபரப்பான... யாரும் எதிர்பார்க்காத சில உண்மைகள் வெளிவருகிறது...

விபத்திற்குல்லாக்கிய அந்த நபர்யார்...  இவரை பின்தொடர காரணம் என்ன, அதன்பிறகு நடக்கும் விபரீதங்கள் என்ன... அந்த பெண்ணின் ஆவி இறுதியில் என்னாகிறது என்று விறுவிறுப்பான திரைக்கதைமூலம் புரியவைத்து தெளியவைத்து மிரட்டலுடன் படத்தை முடிக்கிறார்  இயக்குனர். (கண்டிப்பாக மீதிக்கதையை திரையில்தான் பார்க்க வேண்டும்)





நாயகன் நாகா நன்றாக தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.... அடந்த முடி... முகத்தை மறைக்கும் அளவுக்கு  வளர்திருக்கிறது.... வயலின் வாசிப்பாளர்.... இடைவேளைவரை  சோகத்தை, பயத்தை, மெல்லிய நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் விதம் அழகு... இறுதிகாட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

நாயகியை ஒருஷாட்டில் மட்டுமே  தன்உருவத்தில் வருகிறார். அவருடைய வேலை அவ்வளவுதான்... இறுதிக்காட்சிகளில் ஆவியாக நன்றாக வேலைவாங்கியிருக்கிறார் இயக்குனர்.


நாயகியின் அப்பாவாக ராதாரவி நல்லதொரு நடிப்பு... வெகுநாளுக்குப்பிறகு இவருக்கு நல்லதொருபடம் அமைந்திருக்ககிறது...

நாயகனுடன் இரண்டு நண்பர்கள் கதைக்குபலம்.. ஒருஅப்பார்ட்மெண்ட் அதில் சில முகங்கள் என குறைந்த எண்ணிக்கையில் தான் கதாபாத்திரங்கள்...

இசை புதுமுகம்... நன்றாக கைகொடுத்திருக்கிறார்... சப்பேவில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சி, அங்கே ஒரு சோகப்பாடல், ஆவியை ஓட்ட வரும் பெண்படும்பாடு, ராதாரவி இரந்த தன்மகளுடன் காட்டும் உருக்கும் பாராட்டப்படவேண்டியவை....

மக்களுக்கு என்ன ‌தேவையோ அதை மசாலாவோடு தரும் இயக்குனர்கள் ஒருவகை... தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை அப்படியே கொடுப்பவர்கள் படமாக்குபவர்கள் இன்னொருவகை... இதில் மிஸ்கின் இரண்டாம் வகை...

ஒருவகையில் ஆனந்தபுரத்துவீடு படத்தை நினைவுபடுத்தினாலும் மிரட்டல் காட்சிகளில் நாம் அதை மறக்கடித்துவிடுகிறார்... மிகுந்த எதிர்பார்ப்புடன் போகாமல் ஒரு தமிழ் சினிமாவை ரசிக்க  வேண்டும் என்ற மனநிலையோடு இந்த படத்தை பார்க்கப்போனால் ரசித்துவிட்டுவரலாம்.  

பொருமையோடு பார்த்தால் இந்த பிசாசும் ரசிக்ககூடியதே.

5 comments:

  1. நல்ல விமர்சனம்... அருமை.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே
    இன்றே இப்பிசாசுவை ரசிக்கச் செல்கிறேன்

    ReplyDelete
  3. விமர்சனம் அருமை சௌந்தர். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!