19 January, 2015

இந்த வாழ்க்கை யாருக்கும் வேண்டாம்


 
கோயிலுக்குச் சென்று
ஏக்கத்தோடு பார்த்துவிட்டு வருகிறேன்...
கடவுளையல்ல...
 
அங்கிருந்த படையலையும்
ஆரத்திதட்டில் இருந்த 
சில்லரைகளையும்...!

*************************************

யாசகம் கேட்டவனிடம்
ஏதும் சொல்லாமல்
அமைதியாய் இருந்துவிட்டு...

தனிமையில் 
புலப்பிக்கொண்டிருக்கிறேன்
என் இயலாமையோடு...!
*************************************

 
 தென்றல் வருடியது...
பட்டாம்பூச்சிகள் 
தொட்டுசென்றது...
கூடவே குயில்களின் கானம்..

ஆனால் தீரவில்லை
பசி....!

*************************************
 
 
ஒவ்வொரு வேளையும்
ஒரு கடவுளின் அவதாரம்
என் வழிப்பாட்டில்....

பசியை மறைக்க
விரதங்களென்று...!
 
*************************************
 
#‎வறுமை_வரிகள்‬

4 comments:

  1. வேண்டவே வேண்டாம்... இது போல் நடக்கவே வேண்டாம்...

    ReplyDelete
  2. வறுமையின் வரிகள் மனதை பாரமாக்கியது! நன்றி!

    ReplyDelete
  3. வறுமை வரிகள்... கஷ்டமாயிருக்கிறது...
    இந்த நிலை மாறணும்...

    ReplyDelete
  4. வறுமை
    மனதை கனக்கச் செய்யும் வரிகள்
    தம +1

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!