08 January, 2015

யாராவது இதை தட்டிக்கழிப்பார்களா?



பொறிந்த தன் இனத்திற்காக
தாலாட்டு பாடுகிறது
உச்சிக்கிளையில் அமர்ந்தபடி
குயில் ஒன்று...

புரியாமல் விழிக்கிறது...
முட்டை யாருடையது
என்று அரியாமல் அடைக்காத்த
காக்கை ஒன்று...

 
******************************************


இதுதான் சரியென்று
நம் மனதுக்கு தெரிந்தும்...!

செய்வதற்கான முயற்சிகள்
தம்மிடம் இருந்தும்...!

கிடைக்கும் வாய்ப்புகளை
திறமையாய் பயன்படுத்தாமல்..!

தட்டிக் கழிப்பதின் பெயரே
கோழைத்தனம் என கொள்க...!

******************************************


வார்த்தைகளின் நீளம்
குறையும்போது...


வாழ்க்கையின் நீளம்
அதிகரிக்கிறது...
 
******************************************
வணக்கம் மக்களே...!

9 comments:

  1. தற்போதைய சூழலில் வாய்ப்பும் அரிது...

    ReplyDelete
  2. வார்த்தைகளின் நீளம்
    குறையும்போது...


    வாழ்க்கையின் நீளம்
    அதிகரிக்கிறது...//////////

    உண்மைதான்.....

    ReplyDelete
  3. வணக்கம்
    அழகிய வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வார்த்தைகளின் நீளம்
    குறையும்போது..
    வாழ்க்கையின் நீளம்
    அதிகரிக்கிறது...

    அருமை
    அருமை

    ReplyDelete
  5. அருமை! நலமா நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நலமே ஐயா..!

      தங்கள் விசாரிப்பின் மூலம் புத்துணர்ச்சி அடைந்தேன்..

      நன்றி ஐயா..!!!!!

      Delete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!