24 July, 2015

இப்படியும் இருக்குமா... அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை...


உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர் வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, "என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது.. ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் "வாலி"பன் அல்லவா?" என்றார். எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தாா்.

===========================


எதிர்க்கட்சித் தலைவர் அனந்தநாயகி : என்னை அரசு சி.ஐ.டி. வைத்து வேவு பார்க்கிறது. என்னை சிஐடி போலீசார் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்..


முதல்வர் கலைஞர் : உங்களுக்குத் தெரியும்படி உங்களைக் கண்காணிப்பவர்கள் எப்படி சிஐடி போலீஸாக இருக்க முடியும்?

===========================


கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்டார்..


"இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப்போகிறீர்கள்..?


" எந்த தொகுதி கேட்டாலும் தான் எதாவது காரணத்தை சொல்லி மறுத்து விடுகிறீர்கள்.. நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை.. பாண்டிசேரியில் நிற்கப்போகிறேன்..!"


உடன் கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில், கவிஞருக்கு இருக்கும் மதுப் பழக்கத்தை மனதில் கொண்டு சொன்னார்..


பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!"

====================



ஒருமுறை பெர்னாட்ஷா அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அங்கே அழகான ஹாலிவுட் நடிகையும் பங்கேற்றாராம்.


விருந்து முடியும் தருவாயில் நடிகை பெர்னாட்ஷாவை பார்த்து, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் குழந்தை என்னை போல் அழகாகவும், உங்களை போன்று அறிவானதாகவும் இருக்கும் தானே, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்.


அதற்கு பெர்னாட்ஷா சொன்னாராம் "ஒருவேளை பிறக்கும் குழந்தத உன்னுடைய அறிவையும், என்னுடைய அழகையும் கொண்டதாக பிறந்தால் என்ன செய்வது"

அவ்வளவு தான் நடிகை துண்ட காணோம், துணிய காணோமுன்னு இடத்தை காலி செய்தாராம்.



====================




ஒருமுறை கலைவாணர் நாடகத்தில் கோமாளியாக நடித்தார். ராஜா வேடமிட்டவர் மந்திரியைப் பார்த்து ஒவ்வொரு சிற்றரசரும் என்ன கப்பம் கட்டினார்கள் என விசாரிக்கும் காட்சி.

ஒரு கட்டத்தில் கலிங்க ராஜா என்ன கட்டினார் என்று கேட்க மந்திரி வசனத்தை மறந்து பேய் முழி முழிக்க, இதை அறியாத அரசர் இன்னுமொரு தடவை சத்தமாக கேட்டார்..


கலிங்க ராஜா என்ன கட்டினார்..?

கலைவாணர் உடனடியாக " வேஷ்டி" என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது.


====================



ஒருமுறை நம்ம ஆபிரஹாம் லிங்கன் அவர்களை காண ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் வந்திருந்தாராம், அந்த நேரம் பார்த்து அவர் வெளியே போயிருக்க, கொஞ்சம் நேரம் காத்திருந்து கடுப்பாகி, வீட்டு வாசலில் கழுதை என்று எழுதி வைத்து சென்றாராம்.


வந்தவர் யார் என்பதை எழுத்தை வைத்து அறிந்த ஆபிரஹாம் லிங்கன், அடுத்த நாள் அவரை சந்தித்து நேற்று நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்க போலிருக்குது, உங்க பெயரை எழுதி வைச்சிட்டு போனீங்க, அதனால யார் வந்தது என்பதை அறிய ரொம்ப வசதியா போச்சு என்றாராம்

=========================



ஆசிரியர் இல்லத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது..


நெருப்பில் சாம்பிராணியைப் போடும் பொறுப்பு அந்த மாணவனுக்கு. அளவு பாராமல் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான்.. அந்தக் காலத்தில் சாம்பிராணி அரிதாகக் கிடைக்கும் பொருள்..!


ஆசிரியர் சொன்னார்.. அப்பா.. கொஞ்சமாகப் போடு..! பின்னாளில் நீ சாம்பிராணி விளையும் நாடு எதையும் போரில் வென்று கைப்பற்றுவாயானால் அப்போது அள்ளிப் போடலாம்..!


ஆசிரியர் வாக்கு பொய்க்கவில்லை.. பிற்காலத்தில் அம்மாணவன் சிரியா நாட்டைக் கைப்பற்றி சாம்பிராணி, குங்கிலியம் போன்ற பொருட்களைக் கவர்ந்தான்.. அவற்றை முதல் வேலையாக தன் ஆசிரியருக்கு அனுப்பினான்.. கீழ்கண்ட குறிப்புடன்..


பெருமானே..! இனி பிரார்த்தனையின்போது தாங்கள் சிக்கனம் காட்ட வேண்டியிராது..!

அம்மாணவன்... மாவீரன் அலெக்சாண்டர்..!


=========================

10 comments:

  1. கலைஞர் மற்றும் கலைவாணர் அவர்களின் உடனடி பதில்களை ரசித்தேன்...

    முடிவு சிறப்பு...

    ReplyDelete
  2. அனைத்தும் படித்தேன் சுவைத்தேன்!

    ReplyDelete
  3. அனைத்தும் ரசிக்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
  4. அனைத்தும்
    அருமை நண்பரே
    ரசித்தேன் நன்றி
    தம +1

    ReplyDelete
  5. அனைத்தும் மிக அருமை.

    ReplyDelete
  6. அனைத்தும் மிக அருமை.

    ReplyDelete
  7. மிகச்சிறப்பு

    ReplyDelete
  8. தமிழீன்ற பெருமக்கள்
    தமிழ்க்கவிதைகள் தம்மோடு
    தரணியில் உலவிடவே வாய்ப்பளித்த
    கவிதை வீதி காசினியில் வாழியவே

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!