“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி-ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க.
சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி”
====================================
====================================
நான் உங்களுக்கு 5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன், வெரி ஸ்வீட் கேர்ள்ஸ். ஜாலியா கடலை போடலாம்.
எவ்வளவு நேரம் வேணாலும் அவங்களோட பேசலாம்..
ஏர்டெல் -121
ஏர்செல் – 55333
ரிலையன்ஸ் – 369
பி எஸ் என் எல் -123
வோடஃபோன் -111
இந்த மேட்டர் யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்,
நமக்குள்ளயே இருக்கட்டும்.
====================================
இந்த மாணவன்தான் எங்கள் பள்ளியில் நடந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றவன்.
எதைப் பற்றி கட்டுரை எழுதினான்.
தண்ணீரின் பயன்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கான்.
அப்படியா நல்லது.. உங்கப்பா என்ன பண்றாருப்பா?
பால் வியாபாரம்.
===================================
பால் வியாபாரம்.
===================================
வர வர லஞ்ச விவகாரம் இவ்வளவு முத்திப் போகும்னு
கனவுல கூட நினைக்கல!
ஏன்? என்ன ஆச்சு?
ஒரு வேலைய முடிக்க எவ்வளவு லஞ்சம் ஆகும்னு சொல்றதுக்கே
100 ரூபா லஞ்சம் கேக்கறாங்கன்னா பாத்துக்கயேன். ====================================
டாக்டர்; தினமும் ஒரு வேலை கஞ்சி தான் குடிக்க வேண்டும்.
நோயாளி: எத்தனை நாளைக்கு டாக்டர்?
டாக்டர்: என்னிடம் செய்து கொள்ளும் வைத்தியத்திற்கு பணம் கொடுக்கும் வரை.
நோயாளி: கஞ்சி சாப்பிடுவதற்கும்,பில் தொகை கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்,டாக்டர்?
டாக்டர்: அப்போதுதானே என் பில் தொகை கொடுக்க உங்களிடம் பணமிருக்கும்?
====================================
====================================
'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''
''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''
''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.'' ====================================
சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து!
ஹா... ஹா... நல்ல வியாபாரம்...
ReplyDeleteஅழகான பெயர்... வாழ்த்துகள்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி.
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன்
உங்கள் செல்லக் குழந்தைக்கு வாழ்த்துகள்
ரசித்தேன்...
ReplyDeleteஅழகான பெயர்.... வாழ்த்துக்கள்.