01 October, 2015

மூத்தவர்களை ஒதுக்கி வைப்பதா...?



அணுவணுவாய் 
அனுபவித்து எழுதிவைத்த
திறந்தவெளி  பல்கலைக்கழகங்கள்...!

வாழ்வியல் 

நிஜங்களை எடுத்துரைக்கும்
வாழ்க்கை சக்கரத்தின் ஆதாரங்கள்...

அனைத்தும் 

அறிந்தும்... தெரிந்தும்...
அமைதி காக்கும் ஆலயங்கள்...!

பாரங்களை 

சுமக்க பழகிக்கொண்டு
பரிதவிக்கும் பழுத்த மரங்கள்..!

விழுதுகளுக்கு 

வேர்பிடிக்க வழிவிட்டு
ஒதுங்கிக்கொள்ளும் ஆணிவேர்கள்..!

மகரந்தங்களை 

பூமியெங்கும் தூவிவிட்டு
வாடிப்போய்கிடக்கும் வாடாமலர்கள்...!


நினைவலைகளை
அசைப்போட்டு அசைப்போட்டு

ஆதரவற்றுக்கிடக்கும் சுமைதாங்கிகள்...!

இவர்களின் 
சுறுக்கங்கள் காட்டும்
வாழ்க்கையில் கடந்துவந்த பாதைகளை...!


இவர்களின் 
நரைகள் சொல்லும்
ஏறிவந்த கரைகளின் சுவடுகளை...!


காலக்கடலில் 
முத்தெடுத்த ரகசியம் பற்றி
முதுமைச் சொல்லும் ஆயிரம் கதைகள்...!

முதியோர்களை
ஒதுக்கிவிட்டு நடக்கும் சமூகம்
ஒருபோதும் முன்னேறி விடாது..!

இவர்கள்...!
முதுமை என்கிற பெயரில்
நடமாடும் அதிசயங்கள்...


முதுமைக்கு மதிப்பளிப்போம்
முதுமைகளை ஆதரிப்போம்...
!

 


உலக முதியோர் தினம் (அக்-1)
International Day of Older Persons


வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

29 September, 2015

விஜய்-யின் புலி திரைப்படமும்... சில நகைச்சுவைகளும்

விஜய் படம் வருதுன்னாவே  ஊடகங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் வரும் நகைச்சுவைகளுக்கும், கலாட்டாக்களுக்கும் பஞ்சம் இருக்காது... படம் நல்லாயிருந்தா அது அப்படியே முடிஞ்சுடும்... படம் சரியில்லன்னா கிண்டல்கள் செய்வது இன்னும் அதிகமாகும்... 

தற்போது வெளிவர இருக்கும் புலி படம் எப்படியிருக்குன்னு தெரியில இந்த படத்தைப்பத்தி 1-ந் தேதி விமர்சனத்தில் பார்க்கலாம் அதற்குமுன் எனது வாட்ஸ்அப்பில் வந்த புலி படத்தை நக்கல்செய்து வந்த நகைச்சுவை படங்கள்.. அவைகளுடன் நான் நசித்த நகைச்சுவை துணுக்குகள்....


ரெடி ஸ்டார்ட்....

சிறுவன்: ஏ‌ம்பா... என் மார்க் ஷிட்டில் கையெழுத்து போடாமல் 
கைநாட்டு வைக்கிறீர்க‌ள்?

தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க 
தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டாம்!
========================

என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு
நேத்துதான் தெரிஞ்சது !

'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?'

'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன்
========================

எதுக்குயா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு? 

எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு 
நெஞ்சுல ஈரேமே இல்லைனு சொல்றாங்களாம!!
========================

எதிரி அனுப்பிய புறா எதற்கு திசைமாறிப் போகிறது…?

நம் அரண்மனையிலிருந்து வரும் மசாலா
வாசத்தை உணர்ந்து, புறமுதுகிட்டுப்
பறந்திருக்கும், மன்னா!

========================

மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?

கணவன்: நான் ஏன் சொல்லணும்?

மனைவி: : நீங்க அவரு பிரண்டுதானே..

கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?

========================


நானும் என் மனைவியும் காதலித்து கல்யாணம் செய்தவர்கள்

எனக்கு தெரியும் ? எப்படி... யாரு சொன்னா ?

அடிக்கடி உங்கள் மனைவி காற்றுவாங்க போனேன் வரும் வழியில் ஒரு கழுதையை வாங்கிவந்தேன் என்று பாடுவதை கேட்டது உண்டு....

========================


"விமானம், ராக்கெட்டைப் பார்த்து: நண்பா எப்படி இவ்வளவு 
வேகமாக பறக்கிறாய் என்றது."

"ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... 
உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ.........."

========================


"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?"

"ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"
=====================

வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?

ஓ.......
 ஒரே ஒரு முறை தொடமுடியுமே!

====================

நண்பர் 1: என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...?
நண்பர் 2: நான் தான் சொன்னேன்ல... 
பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு! 

========================


ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !

அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

========================

சிம்புதேவன் மீது நம்பிக்கையிருக்கிறது படம் நன்றாக 
இருக்கும் என்றே நம்புகிறேன்...
அடுத்த பதிவு  - புலி சினிமா விமர்சனம்

24 July, 2015

இப்படியும் இருக்குமா... அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை...


உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர் வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, "என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது.. ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் "வாலி"பன் அல்லவா?" என்றார். எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தாா்.

===========================


எதிர்க்கட்சித் தலைவர் அனந்தநாயகி : என்னை அரசு சி.ஐ.டி. வைத்து வேவு பார்க்கிறது. என்னை சிஐடி போலீசார் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்..


முதல்வர் கலைஞர் : உங்களுக்குத் தெரியும்படி உங்களைக் கண்காணிப்பவர்கள் எப்படி சிஐடி போலீஸாக இருக்க முடியும்?

===========================


கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்டார்..


"இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப்போகிறீர்கள்..?


" எந்த தொகுதி கேட்டாலும் தான் எதாவது காரணத்தை சொல்லி மறுத்து விடுகிறீர்கள்.. நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை.. பாண்டிசேரியில் நிற்கப்போகிறேன்..!"


உடன் கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில், கவிஞருக்கு இருக்கும் மதுப் பழக்கத்தை மனதில் கொண்டு சொன்னார்..


பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!"

====================



ஒருமுறை பெர்னாட்ஷா அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அங்கே அழகான ஹாலிவுட் நடிகையும் பங்கேற்றாராம்.


விருந்து முடியும் தருவாயில் நடிகை பெர்னாட்ஷாவை பார்த்து, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்கு பிறக்கும் குழந்தை என்னை போல் அழகாகவும், உங்களை போன்று அறிவானதாகவும் இருக்கும் தானே, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்.


அதற்கு பெர்னாட்ஷா சொன்னாராம் "ஒருவேளை பிறக்கும் குழந்தத உன்னுடைய அறிவையும், என்னுடைய அழகையும் கொண்டதாக பிறந்தால் என்ன செய்வது"

அவ்வளவு தான் நடிகை துண்ட காணோம், துணிய காணோமுன்னு இடத்தை காலி செய்தாராம்.



====================




ஒருமுறை கலைவாணர் நாடகத்தில் கோமாளியாக நடித்தார். ராஜா வேடமிட்டவர் மந்திரியைப் பார்த்து ஒவ்வொரு சிற்றரசரும் என்ன கப்பம் கட்டினார்கள் என விசாரிக்கும் காட்சி.

ஒரு கட்டத்தில் கலிங்க ராஜா என்ன கட்டினார் என்று கேட்க மந்திரி வசனத்தை மறந்து பேய் முழி முழிக்க, இதை அறியாத அரசர் இன்னுமொரு தடவை சத்தமாக கேட்டார்..


கலிங்க ராஜா என்ன கட்டினார்..?

கலைவாணர் உடனடியாக " வேஷ்டி" என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது.


====================



ஒருமுறை நம்ம ஆபிரஹாம் லிங்கன் அவர்களை காண ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் வந்திருந்தாராம், அந்த நேரம் பார்த்து அவர் வெளியே போயிருக்க, கொஞ்சம் நேரம் காத்திருந்து கடுப்பாகி, வீட்டு வாசலில் கழுதை என்று எழுதி வைத்து சென்றாராம்.


வந்தவர் யார் என்பதை எழுத்தை வைத்து அறிந்த ஆபிரஹாம் லிங்கன், அடுத்த நாள் அவரை சந்தித்து நேற்று நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்க போலிருக்குது, உங்க பெயரை எழுதி வைச்சிட்டு போனீங்க, அதனால யார் வந்தது என்பதை அறிய ரொம்ப வசதியா போச்சு என்றாராம்

=========================



ஆசிரியர் இல்லத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது..


நெருப்பில் சாம்பிராணியைப் போடும் பொறுப்பு அந்த மாணவனுக்கு. அளவு பாராமல் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான்.. அந்தக் காலத்தில் சாம்பிராணி அரிதாகக் கிடைக்கும் பொருள்..!


ஆசிரியர் சொன்னார்.. அப்பா.. கொஞ்சமாகப் போடு..! பின்னாளில் நீ சாம்பிராணி விளையும் நாடு எதையும் போரில் வென்று கைப்பற்றுவாயானால் அப்போது அள்ளிப் போடலாம்..!


ஆசிரியர் வாக்கு பொய்க்கவில்லை.. பிற்காலத்தில் அம்மாணவன் சிரியா நாட்டைக் கைப்பற்றி சாம்பிராணி, குங்கிலியம் போன்ற பொருட்களைக் கவர்ந்தான்.. அவற்றை முதல் வேலையாக தன் ஆசிரியருக்கு அனுப்பினான்.. கீழ்கண்ட குறிப்புடன்..


பெருமானே..! இனி பிரார்த்தனையின்போது தாங்கள் சிக்கனம் காட்ட வேண்டியிராது..!

அம்மாணவன்... மாவீரன் அலெக்சாண்டர்..!


=========================

16 July, 2015

லோராண்டி-ன்னு பேர் வைக்கலாமா?


“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி-ன்னு வச்சிருக்கோம்”
 
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
 
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. 
சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
 
“அது என்ன பாடல்?”
 
“நந்தவனத்தி லோராண்டி”

====================================

நான் உங்களுக்கு 5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன், வெரி ஸ்வீட் கேர்ள்ஸ். ஜாலியா கடலை போடலாம். 

எவ்வளவு நேரம் வேணாலும் அவங்களோட பேசலாம்..
ஏர்டெல் -121
ஏர்செல் – 55333
ரிலையன்ஸ் – 369
பி எஸ் என் எல் -123
வோடஃபோன் -111
 

இந்த மேட்டர் யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்,
நமக்குள்ளயே இருக்கட்டும். 

====================================


இ‌ந்த மாணவ‌ன்தா‌ன் எ‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌யி‌ல் நட‌ந்த க‌ட்டுரை‌‌ப் போ‌ட்டி‌யி‌ல் முத‌ல் ப‌ரிசு‌ப் பெ‌ற்றவ‌ன்.
எதை‌ப் ப‌ற்‌றி க‌ட்டுரை எழு‌தினா‌ன்.
 
 த‌ண்‌ணீ‌‌ரி‌ன் பய‌ன்க‌ள் எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் க‌ட்டுரை எழு‌தி‌யிரு‌க்கா‌ன்.
 
அ‌ப்படியா ந‌ல்லது.. உ‌ங்க‌ப்பா எ‌ன்ன ப‌ண்றாரு‌ப்பா?
 

பா‌ல் ‌வியாபார‌ம்.
  ===================================

வர வர லஞ்ச விவகாரம் இவ்வளவு முத்திப் போகும்னு 
கனவுல கூட நினைக்கல!
 

ஏன்? என்ன ஆச்சு?
 

ஒரு வேலைய முடிக்க எவ்வளவு லஞ்சம் ஆகும்னு சொல்றதுக்கே 
100 ரூபா லஞ்சம் கேக்கறாங்கன்னா பாத்துக்கயேன். ====================================

டாக்டர்; தினமும் ஒரு வேலை கஞ்சி தான் குடிக்க வேண்டும்.
 

நோயாளி: எத்தனை நாளைக்கு டாக்டர்?
 
டாக்டர்: என்னிடம் செய்து கொள்ளும் வைத்தியத்திற்கு பணம் கொடுக்கும் வரை.
 
நோயாளி: கஞ்சி சாப்பிடுவதற்கும்,பில் தொகை கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்,டாக்டர்?
 
டாக்டர்: அப்போதுதானே என் பில் தொகை கொடுக்க உங்களிடம் பணமிருக்கும்?  
====================================

'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''
 
''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''
 
 ''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.'' ====================================

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
  

பையன்: பி.எ.
 

சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! 
அதையும் தலை கீழா படிச்சிருக்கே! 

====================================


நேற்று காலை (15-07-2015) என் குழந்தைக்கு
பெயர் சூட்டினோம்...

பெயர்.: ROHNISH RIO - ரோனிஷ் ரியோ
பொருள் : Rohnish - The Moon. Rio - river on the moon....

14 July, 2015

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் - மலரும் நினைவுகள்


87 வயதான பிரபல திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரத்திற்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் உடல், சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி சடங்குகள் நாலை காலை 10 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மாயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்க்கை குறிப்பு...

எம்.எஸ்.விஸ்வநாதன் 1928 ஜூன் 24 ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். எம்.எஸ்.விஸ்வநாதன், 1945 முதல் 2015 வரை 60 ஆண்டு காலம் திரைத்துறையில் கோலோச்சியவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 1,200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

1953ல் வெளிவந்த 'ஜெனோவா' படத்துக்கு முதன் முதலாக இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியுடன் இணைந்து 700 படங்களில் இசை அமைத்துள்ளார். 500 படங்களுக்கு மேல் தனியாக இசை அமைத்துள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு 'மெல்லிசை மன்னர்' என்ற பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்தார். 'நீராரும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மோகன ராகத்தில் இசை கோர்த்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, கங்கை அமரன் பாடல்களில் பாடிய எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதும் பெற்றவர்.





இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ்.வி-யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். மனதைத் தொடும் மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றின் பெர்சனல் பக்கங்கள் இதோ.....

எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.

அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!.

நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி.


இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!. 


மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை! 

குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்! 

இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான்! 

மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம்! 

சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி! 

எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்! 

மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்! 

இளையராஜவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்! 

`புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்! 

தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்! 

1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு! 

தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது! 

உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார்! 

`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது! 

இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான் சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது! 

கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறு சுறுப்பாக இருக்கிறார்! 

பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்! 

சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள்! 

வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது! 

`அத்தான்..... என்னத்தான்....’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிரிந்தது அரங்கம்!