08 January, 2016

என் வெற்றிக்கான மூலதனம்...!



நான் வெற்றியை
பதிவு செய்யும் போதெல்லாம்
என் சுற்றம்
பொறாமைக் கொள்கிறது...

அவர்களுக்கு தெரியாது
என் வெற்றிக்கு மூலதனம்
அவர்கள் கொடுத்த 
அவமானங்கள் என்று...

********************************

நான் ரசித்த ஜென் கதை...!

பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.

ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார்.


பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ‘ஐயா, உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்றார் அமைதியாக.

’எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்திருக்கிறது, தெரியுமா?’

‘தெரியவில்லை, சொல்லுங்கள்!’

’அவர் நீர்மேல் நடப்பார், தீயை அள்ளி விழுங்குவார், அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும், நடனம் ஆடினால் பூமியே நடுங்கும்!’ என்றார் பூசாரி. ‘இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் என்று எப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?’

‘நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய். ‘ஆனால், எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்யமுடியும்.’

‘அதென்ன?’

அமைதியாகச் சொன்னார் பான்கெய். ‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்துவிடுவோம்!’


********************************** 

மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா 
இருக்கிற மாதிரி நடிங்க

கணவன்: ஏன் .. .. ?

மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு 
உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே

**********************************  


மரங்களின்றி உயிரினங்களுக்கு வாழ்வில்லை....
மரங்கள் வளர்ப்போம்....

6 comments:

  1. வணக்கம்
    அற்புதாக உள்ளதுவாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மரம் ஹைக்கூ நல்லா இருக்கு

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு சௌந்தர்.
    நலந்தானே?

    ReplyDelete
    Replies
    1. நலம்தான் ஐயா.. விசாரித்தமைக்கு மிக்க நன்றி...!

      Delete
  4. மூலதனத்தில் எல்லாம் அருமை...
    கவிதை... கதை... ஹைக்கூ.. நகைச்சுவை என எல்லாம் அருமை...
    எப்படியிருக்கீங்க... எழுதி ரொம்ப நாளாச்சு போலவே...?

    ReplyDelete
    Replies
    1. நலமே... பணிச்சுமைக்காரணமாகவே கொஞ்சம் ஒதுங்க வேண்டியதாயிருந்துது... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..

      Delete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!