17 August, 2018

சீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...



சமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்கு போகும்போது அந்த 60 ஆயிரம் யானைகளையும் ஒரே கப்பலில் கொண்டுப்போவார்கள் என்றும்.... யானைகள் மட்டுமன்றி அதனுடன் பாகன்கள் போர் கருவிகள் யானைக்கான உணவுகள் மற்ற படை வீரர்கள் என அத்தனையும் கப்பலில் செல்லும்... கப்பல்கள் அப்படியிருந்தது என்றும்  இந்த யானைப்படையை பார்த்தே எதிரிபடை சரண்அடைந்துவிடும் என்று பேசியிருந்தார்...

என்ன கப்பலில் 60 ஆயிரம் யானைகளை ஏற்றினார்களா என்று முகநூலில் பாகுபாடின்றி வறுத்தெடுத்துகொண்டு இருக்கிறார்கள்....

அதுபோக இதற்கு முன்னர் மறைந்த கலைஞர் பற்றி இரங்கல் தெரிவிக்கும் போது நான் கலைஞர் சட்டைப்பையில் உள்ள பேனாவை எடுத்து எழுதும் அளவுக்கு நெருக்கம் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்...

இதற்கும் பல்வேரு தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்தது மட்டுமின்றி என்ன கலைஞர் பேனா எடுத்து எழுதும் அளவுக்கு நெருக்கமா என்று மீம்ஸ்க்கள் முகவுநூல் டிவிட்டர் பதிவுகள் வறுத்தெடுத்தன.. 

சீமான் சொல்வது அத்தனையும் கட்டுகதைகளே என்று ஆளாளுக்கு நகைச்சுவை பதிவிட்டு கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்...

சீமான் அவர்கள் பிரபாகரன் சந்திப்பைப்பற்றி அவர் இருக்கும் போது ஏதும் வாய்திறக்காது அவரது மரணத்துக்கு பிறகு... நானும் அவரும் அப்படி இப்படி என்று அளந்து விட்டுக்கொண்டிருக்கிறார்... போர் பயிற்சி... குண்டு விழுந்தது... ஆமைக்கறி சாப்பிட்டோம் என்று வந்ததை சொல்வதை கண்டு சோசியல் மீடியாவில் அவர்குறித்து நகைச்சுவை பதிவுகள் அறங்கேறி வருகிறது....

அவர் எப்பவும் இப்படிதான்.. தலைவர்கள் இருக்கும் போது அவர்கள் பற்றி குறிப்பிடாமல் அவர் இறந்த பிறகு வந்து எனக்கு இப்படி பழக்கம் அப்படி பழக்கம் என்று அளந்துவிடுவார் என்று கற்பனையோடு எழுத ஆரம்பித்துவிட்டார்கள்..



தற்போது வாஜ்பாய் இறப்பை ஒடடி சீமான் எப்படி பேட்டிக் கொடுப்பார் என்று முகநூலில் பன்னிகுட்டி ராமசாமி எழுதிய பதிவு இது.. (Maram r)

(சீமான் சொல்வது போல்) திடீர்னு ஒருநாள் நடுராத்திரி ஒரு போன் கால்.. அதுவும் இந்தில வருது.. என்ன பேசுறதுன்னே புரியல.. அப்புறம் ஒருத்தர் பிஎம் உங்க கிட்ட பேசனுமாம் பேசுங்கனு சொல்றார்.. எனக்கு இந்த ஏஎம், பிஎம் தான் தெரியும் இது எந்த பிஎம்னு கேக்கிறேன்.. அதுக்குள்ள மே வாஜ்பாயி போல்ரஹாஹூனு கணீர்னு நம்ம வாஜ்பாயி குரல் கேக்குது.. 

நான் அப்படியே திகைச்சுப் போயிட்டேன்.. சீட்டுல இருந்து எந்திரிச்சி என்ன சார் வேணும்னு கேட்டேன்.. அதுக்கு அவரு பாகிஸ்தான் எந்த நேரத்துலயும் போர் தொடுக்குற மாதிரி இருக்கு.. அத எப்படி தடுக்குறதுனு தெரியல ரொம்ப கவலையா இருக்குன்னாரு.

 நான் உடனே இதுக்கு ஏன் சார் கவலைப்படுறீங்க. அணுகுண்டு இருக்கானு கேட்டேன்... இருக்குன்னு சொன்னார்.. அத தூக்கி போட்ருங்கன்னு சொல்லிட்டேன்.. அவரு பதறிப்போய் அது ரொம்ப ஆபத்து, அணு ஆயுத போர் வந்துடும்னாரு..


நான் அதுக்கு அட அந்த குண்ட நம்ம ஊரு மேல போடுங்க சார்னு சொன்னேன்.. அத கேட்டு அவரு மிரண்டுட்டாரு.. என்னங்க சொல்றீங்கனு கேட்டார்.. ஆமா நம்மூர்லயே ஆள் இல்லாத இடமா பாத்து போடுங்க.. அது வெடிக்கிறத நாலு பக்கமும் இருந்து போட்டோ புடிச்சி பத்திரிக்கைல போடுங்க அத பாத்துட்டு பாக்கிஸ்தான்காரன் பயந்து ஓடிருவான் பாருங்கன்னு சொன்னேன்.. 

அத கேட்டு அப்படியே அசந்துபோய்ட்டார்.. சீமான் ஜீ.. பகூத் அச்சா ஐடியா ஜீ னு திரும்ப திரும்ப சொல்லி சந்தோசப்பட்டார்.. அடுத்த நாள் காலைல பேப்பர்ல நியூஸ் போடுறான்.. இந்தியா அணுகுண்டு சோதனை செய்ததுன்னு... பாருங்க.. இதுக்கெல்லாம் யார் காரணம்.. சிந்திக்கனும்...

சிரிச்சி வயிறு வலிக்குது...

7 comments:

  1. ஆஹா.கவனிக்கும்படியாக எதையாவது உளறுவதில் எங்க ஊர் செல்லூர் ராஜு இவரிடம் தோற்று விடுவார் போல் தெரியுதே

    ReplyDelete
    Replies
    1. அவர் தேச அளவு என்றால் இவர் சர்வதேச அளவு

      Delete
  2. சீமானை வச்சு நீங்ளும் நல்லா செஞ்சிருக்கீங்க! அதான் ஆமையன்னு இவரை விளிக்கிறாங்களா?!

    ஆமா, சீமானுக்கு பேனாலாம் எதுக்கு? எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்குத்தானே பேனா தேவைப்படும்???

    கலைஞர் எழவுவீட்டில், சீமான், பாரதிராஜா, சத்தியராசு எல்லாத்தையும் காணோம்? செத்த்துட்டானுகளா? இல்லைனா எழவு வீட்டில் உள்ளே விடலையா?

    சீமானின் அறிவுப்படி கலைஞர் தெலுகுக்காரர். இவன் எதுக்கு கலைஞர் பைக்குள்ளா கைவிடுறான்?!

    ReplyDelete
  3. சீமானை நான் ஆமைன்னு சொல்ல வில்லை.. சீமான்தான் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது நாங்கள் இருவரும் ஆமை கறி சாப்பிட்டதாக குறிப்பிட்டிருந்தார்....

    இதை வச்சிதான் அவரை கிண்டல் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  4. சீமானுக்கு அதிகமான தைரியந்தான்...செத்தவர்கள் திரும்ப வந்து சட்டையை பிடித்து கேட்காவா போகிறார்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!