18 August, 2018

எங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...


 சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை

எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க...

சரி 5000 செலவாகுங்க பரவாயில்லையா..

இவ்வளவா...! எனக்கு கல்யான செலவே 500 தாங்க ஆச்சி...!

எப்பவுமே சுதந்திரம் சும்மா கிடைக்காது தம்பி...


********************************



மாமியார் : இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட மோதிரம்!

மருமகன் : இதை வாங்கி தந்ததுக்கு நீங்க ஸ்கூட்டரே வாங்கி தந்திருக்கலாம்!

மாமியார் : வாங்கியிருக்கலாம்தான்! ஆனா கவரிங் ஸ்கூட்டர் எங்கே கிடைக்குது?

********************************



ராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன் !

சோமு : அடடா... அப்புறம் ?

ராமு : மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு !

சோமு : அடப்பாவி...!!!!!!

********************************


கடைக்காரர் : டாக்ஸி டிரைவரா இருந்தவனை 
ஜவுளிக்கடையில் வைத்தது தப்பா போச்சு ?

மற்றவர் : ஏன்?

கடைக்காரர் : துணி எடுக்க வருபவர்களிடம் 
மீட்டருக்கு மேல் எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறான்..

********************************


ஒருவர் : எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி 
இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

டாக்டர் : ஏன்?

ஒருவர் : என் மனைவியை திட்ட 
வேற வழி தெரியலை டாக்டர்...

டாக்டர் : !!!!!!!!!!!!

********************************

பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும் என்பது இதுதானோ..!!!
பார்த்து சூதானா இரும்மா...!

5 comments:

  1. சிரித்தேன்... ரசித்தேன்...

    ReplyDelete
  2. கவரிங் ஸ்கூட்டர் சூப்பர்

    ReplyDelete
  3. சுதந்திர வாங்கின நாளன்னு கொடியேத்தி இலவசமா மிட்டாய் கொடுத்தாங்க.. உங்களுக்கு கிடைக்கல போலிருக்கு....

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!