12 February, 2011

பத்துக்கு பத்து - தமிழ் சினிமா இந்தவாரம் 12-02-2011

ஆச்சரியப்படுத்தும் அனோஷ்கா!
அஜீத்- ஷாலினி இருவரும் குழந்தை அனோஷ்காவுக்கு இப்போதில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கிறார்கள்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரியாதையாக `வணக்கம்' சொல்வது, வீட்டில் வேலை செய்பவர்களை, `அங்கிள்,' `ஆன்ட்டி' என்று அன்புடன் அழைப்பது...

என மூன்று வயது அனோஷ்கா ரொம்பவே ஆச்சரியப் படுத்துகிறாள்! 
***************************************************************************************
அவன் இவன் புதிய தகவல்  

அவன் இவன் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தவர்கள் முகத்தில் கண்டிப்பாக இளநகை தோன்றும். ிஷால், ஆர்யாவின் தோற்றங்கள் அப்படி.

தோற்றம் மட்டுமா? பெயர்களும் அப்படிதான் என்பது இப்போது தெ‌ரிய வந்திருக்கிறது.

அவன் இவனில் ிஷாலின் பெயர் வால்டர் வணங்காமுடி. ஆர்யாவின் பெயர் கும்பிடறேன் சாமி. பாலாவின் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களாகவே இருப்பர்.

இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. முக்கியமான வித்தியாசம், மற்றப் படங்களைப் போல் சீ‌ரியஸாக இல்லாமல் படு நகைச்சுவையாக அவன் இவனை எடுத்திருக்கிறாராம்.

பாலா படமில்லையா... நகைச்சுவையும் ப்ளாக் ‌ியூமராகதான் இருக்கும். 

**************************************************************************************

இலங்கை கடற்படையை கண்டித்து விஜய் ஆர்பாட்டம்

தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் வரும் 22ம் தேதி நாகப்பட்டினத்தில் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறார்.

நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் இலங்கை கடற்படையால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயகுமார் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவியும் செய்து வருகின்றனர். ஜெயக்குமார் மனைவிக்கு கருணாநிதி அரசு வேலை கொடுத்துள்ளார். பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஜெயக்குமார் மனைவியை நேரில் சந்தித்து ரூ. 2 லட்சம் நிதி அளித்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஜெயக்குமார் குடும்பத்தாரை வரும் 22-ம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரும் உடன் செல்கிறார். விஜய் வருவதையொட்டி அவரது ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வருகின்றனர்.

அதே தினத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து ஆர்பாட்டம் நடக்கின்றது. இதில் விஜய் கலந்துகொண்டு இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார். இந்த தகவலை நாகை, திருச்சி மாவட்டம் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் நாகை வருகின்றனர். மேலும், இதில் விஜயின் தந்தையும், மனைவியும் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.

 *********************************************************************************
சிம்புவிற்கு ரசிகர்கள் தந்த பரிசு!

யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் ‘வானம்'. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து, சிம்பு நடித்த படங்களின் தலைப்புகளை வைத்து பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்து அவருக்கு பரிசாக அளித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.  

**********************************************************************************

செல்வராகவனுக்கு ஜூலை 3ஆம் தேதி திருமணம்


"நடந்தது நடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாக நடக்கட்டும்" என்ற வாக்கியம் தற்போது செல்வராகவனுக்கு சரியாக இருக்கும். சினிமா வாழ்க்கையில் வெற்றிகொடி நாட்டிய செல்வராகவன் திருமண வாழ்க்கையில் ஏனோ பெரும் தோல்வியை சந்தித்தார். அவர் சந்தித்த தோல்விகளை வெற்றிகளாக்க அவருடன் இல்லர வாழ்க்கையில் இணைகிறார் கீதாஞ்சலி.

இந்த கீதாஞ்சலி யார், இவரும் செல்வராகவனும் எப்படி இணைந்தார்கள் என்ற செய்தியை நாம் முன்பே வெளியிட்டதால், நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

இயக்குநர் செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் பிப்ரவரி 10 திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மணப்பெண் கீதாஞ்சலியின் இல்லத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இரு வீட்டாரின் உறவினர்கள் கலந்துகொண்டார்கள். மேலும் ரஜினிகாந்த், லதா ரஜினி, கமல்ஹாசன், கெளதமி, மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம், ராம்குமார், யுவன் சர்ங்கர் ராஜா, தயாரிப்பாளர் தனஞ்செழியன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, செளந்தர்யா ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ராணா ஆகியோரும் இதில் கலந்துகொண்டார்கள்.

இந்த நிச்சயதார்த்ததில் செல்வராகவன் - கீதாஞ்சலியின் திருமணம் 2011, ஜூலை 3ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

*****************************************************************************
நண்பன் படத்தில் லாரன்ஸ் கெஸ்ட் ரோல்! 

ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், ‘3 இடியட்ஸ்’. இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் ஆமிர்கான் வேடத்தில் விஜய் நடிக்கிறார்.

மேலும் இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், அனுயா உட்பட பலர் நடிக்கின்றனர். நண்பன் படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ‘எந்திரன்’ சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு, ஷங்கர் இயக்குகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். நா.முத்துக்குமார் பாடல்கள். படத்தின் ஷூட்டிங், ஊட்டியில் நடந்து வருகிறது. இம்மாதம் 25&ம் தேதி முதல் விஜய் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகிறது.

இந்நிலையில் நண்பன் மேலும் ஒரு கெஸ்ட் ரோலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதலில் இந்த கெஸ்ட் ரோலுக்கு நடிகர் பிரசன்னாவைத்தான் கேட்டிருந்தார்களாம். தேதிகள் இல்லாத காரணத்தால் அவருக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
 
**********************************************************************************

பிரகாஷ்ராஜ்-ப்ருத்விராஜ் கூட்டணியில் உருவான 'அன்வர்' 

மொழி', 'வெள்ளித்திரை' படங்களை தொடர்ந்து பிரகாஷ்ராஜ், ப்ருத்விராஜ் இணைந்து நடிக்கும் படம் 'அன்வர்'. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ரெட் கார்ப்பெட் நிறுவனம் தயாரிக்க, ராம்கோபால் வர்மாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அமல்நீரத் இயக்கியுள்ளார்.

தீவிரவாத செயல்களால் நம்முடைய நாடு எவ்வளவு பாதிப்புக்குள்ளாகின்றது. அவற்றை களைய ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் படமாக அன்வர் தயாராகியிருக்கிறது. கோயமுத்தூர் குண்டு வெடிப்பு முதல் அண்மையில்
நடைபெற்ற மும்பை தாக்குதல் வரையிலான நாட்டில் நடந்த தீவிரவாத நிகழ்வுகளை கோர்வையாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார்
 
இயக்குநர் அமல்நீரத். மேலும் படத்தில் ஐந்து குண்டு வெடிப்பு சம்பவங்களை படமாக்கியுள்ளார்கள். இந்த காட்சிகள் படம்  பர்ப்பவர்களுக்கு குண்டு வெடிப்புகளின் கொடூரங்களை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

மதத்தலைவர் ஒருவருடைய கையாளாக நடித்திருக்கும் ப்ருத்விராஜின் கதாபாத்திரம் இதுவரை பார்த்திராத மாதிரி வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருடைய கதாபாத்திரத்தின் நடவடிக்கை படம் முழுக்க ஒரு புதிருடன் கூடிய விருவிருப்பை கொடுக்கும் விதத்திலும் இருக்கும். இவருக்கு ஜோடியாக மம்தா மோகன் தாஸ், வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

மும்பை தாக்குதல் நேரத்தில் பலியான காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்க்கரை நினைவுபடுத்தும் விதமாக ஒரு புலனாய்வு போலீஸ்
அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடிக்க, இவர்களுடன் லால், சம்பத், கீதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

படம் பார்க்கும் இளைஞர்கள் அனைவரும் தீவிரவாத செயல்களை பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்காமல் அதற்கு எதிராக நாமும் செயல்பட முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டும் விதத்தில் உருவாகியிருக்கும் 'அன்வர்' பிப்ரவரி 25ஆம் தேதியன்று வெளியாகிறது.
****************************************************************************************

ட்விட்டரில் யுத்தம் செய்

பொதுவாக திரை நட்சத்திரங்கள் தங்களது தகவல்களை டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் சேரன் வித்தியசமாக, தனது டுவிட்டர், பேஸ்புக் நண்பர்களுக்காக ‘யுத்தம் செய்’ படத்தின் பிரத்யேக காட்சியை திரையிட்டுள்ளார். ஏன் இப்படி என்று கேட்டதற்கு வெளியிட்ட காட்சிகள் மூலம் ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார். 
 ****************************************************************************************
ஆபாச குற்றச்சாட்டில் ஆரண்ய காண்டம்

எஸ்.பி.பி.சரண் தயா‌ரித்துள்ள ஆரண்ய காண்டம் படத்துக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட கட்-கள் கொடுத்து ஏ சான்றிதழ் தந்திருக்கிறது சென்சார். சர்வதேச திரைப்பட விழாவில் ப‌ரிசு வாங்கியிருக்கும் எங்கள் படத்துக்கு இத்தனை வெட்டா? என்று பொங்கியிருக்கிறார் சரண்.
விஷயம் பெ‌ரிதாவதை உணர்ந்த சென்சார் அதிகா‌ரிகள் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் எப்படிப்பட்டவை என்று மீடியாவுக்கு விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன அனைத்தும் இரட்டை அர்த்த ஆபாசங்கள். குறிப்பாக ர‌ஜினி, கமலை வைத்தும் காமெடி என்ற பெய‌ரில் ஆபாசத்தை அரங்கேற்றியிருக்கிறார்களாம்.
இத்தனை கட் களுடன் படத்தை வெளியிட முடியாது என்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது தயா‌ரிப்பாளர் தரப்பு.  


****************************************************************************************

மிஷ்கின் இயக்கும் மார்ஷியல் ஆர்ட் படம்


மார்ஷியல் ஆர்ட் எனப்படும் தற்காப்புக் கலையில் மிஷ்கினுக்கு நிரம்பவே ஆர்வம். அவரது அடுத்தப் படம் மார்ஷியல் ஆர்ட்டை தழுவியதாக இருக்கும் என்கிறார்கள்.
யுத்தம் செய் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் தயா‌ரிப்பில் மிஷ்கின் படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மார்ஷியல் ஆர்ட் சம்பந்தமான கதையாம். சீனா சென்று மார்ஷியல் ஆர்ட்டின் நுணுக்கத்தை தெ‌ரிந்து கொள்ளும் ஆர்வமும் மிஷ்கினுக்கு இருக்கிறது என்கிறார்கள்.
படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் லிங்குசாமியால் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

30 comments:

  1. வடை வாங்க வந்துட்டோம்ல....

    ReplyDelete
  2. sakthistudycentre-கருன் said... [Reply to comment]

    வடை வாங்க வந்துட்டோம்ல....
    //////

    ஆரம்பிச்சிட்டிங்களா..
    வடை உங்களுக்கு தான்..

    ReplyDelete
  3. சினிமா செய்திகள்.. ஒன்றாக தந்ததற்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்

    ReplyDelete
  5. //பாலா படமில்லையா... நகைச்சுவையும் ப்ளாக் ‌ஹியூமராகதான் இருக்கும்.//

    பாலா பாலாதான்....

    ReplyDelete
  6. தங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.. விரைவில் பிரபல பதிவர் ஆக மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  7. ///////மாத்தி யோசி said... [Reply to comment]

    பத்தும் முத்தான செய்தி பாஸ்!
    ////

    நன்றி..! மாத்தியோச...

    ReplyDelete
  8. ///////பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    சினிமா செய்திகள்.. ஒன்றாக தந்ததற்கு வாழ்த்துக்கள்..
    ///

    நன்றி.. பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  9. //////ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்
    /////

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  10. ////MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //பாலா படமில்லையா... நகைச்சுவையும் ப்ளாக் ஹியூமராகதான் இருக்கும்.//

    பாலா பாலாதான்....
    //////

    தங்கள் வரு‌கைக்கு நன்றி..

    ReplyDelete
  11. நல்ல தொகுப்பு...

    ReplyDelete
  12. சினிமா செய்திகள்.. பத்தும் பத்து விதம் அருமை...

    ReplyDelete
  13. கிறுக்கல்கள் said... [Reply to comment]

    நல்ல தொகுப்பு...


    நன்றி...

    ReplyDelete
  14. அசுரன் said... [Reply to comment]

    சினிமா செய்திகள்.. பத்தும் பத்து விதம் அருமை...


    நன்றிகள்..

    ReplyDelete
  15. கலக்கிரிங்க தல
    வாழ்த்துக்கள்
    வோட்டு போட்டிருக்கேன்
    நம்மளையும் கவனியுங்க தல

    ReplyDelete
  16. பாட்டு ரசிகன் உங்களை அன்போடு அழைக்கிறான்..
    என் தளத்திகு வாங்க சார்...

    ReplyDelete
  17. பாடடு ரசிகனான என் தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்..

    ReplyDelete
  18. என்னையா பத்து பதிவ இப்படி மொத்தமா போட்டு தாக்கிடீங்க ..........

    ReplyDelete
  19. /////யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    கலக்கிரிங்க தல
    வாழ்த்துக்கள்
    வோட்டு போட்டிருக்கேன்
    நம்மளையும் கவனியுங்க தல
    /////

    வாருங்கள்... கண்டிப்பாக கவனிப்பேன்..

    ReplyDelete
  20. ////////பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    பாட்டு ரசிகன் உங்களை அன்போடு அழைக்கிறான்..
    என் தளத்திகு வாங்க சார்...
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    பாடடு ரசிகனான என் தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்..
    ///////
    கண்டிப்பாக வருகிறேன் பாட்டு ரசிகன்..
    கண்டிப்பாக உங்களை அறிமுகம் செய்து வைக்கிறேன்..

    ReplyDelete
  21. ////அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

    என்னையா பத்து பதிவ இப்படி மொத்தமா போட்டு தாக்கிடீங்க .........//
    என்ன பண்றது..ஞாயிறு லீவு.. அதான் ஒரேடியா போட்டாச்சி

    ஓகே.. பாய்..
    திங்கள் சந்திப்போம்..

    ReplyDelete
  22. நல்ல கலெக்‌ஷன்ஸ்.. ஆனந்த விகடன் படித்தது போல

    ReplyDelete
  23. செய்திகள் பத்து, அனைத்தும் முத்து.

    ReplyDelete
  24. 'கவிதை வீதி' என்கிற பெயரில் 'சினிமா வீதியா' பாஸ்!! ஒரு பெரிய புத்தகத்துக்கு இலவச இணைப்பா கொடுத்த மாதிரி அம்புட்டு செய்திய ஒரே பதிவில்... ம்ம்ம் அசத்தல்ஸ்!!

    ReplyDelete
  25. மத்த நாள்ல கவிதை போடரதை விட இன்னைக்கு போடுங்க..

    ReplyDelete
  26. சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    நல்ல கலெக்‌ஷன்ஸ்.. ஆனந்த விகடன் படித்தது போல


    நன்றி..

    ReplyDelete
  27. தமிழ் உதயம் said... [Reply to comment]

    செய்திகள் பத்து, அனைத்தும் முத்து.


    நன்றி..

    ReplyDelete
  28. எம் அப்துல் காதர் said... [Reply to comment]

    'கவிதை வீதி' என்கிற பெயரில் 'சினிமா வீதியா' பாஸ்!! ஒரு பெரிய புத்தகத்துக்கு இலவச இணைப்பா கொடுத்த மாதிரி அம்புட்டு செய்திய ஒரே பதிவில்... ம்ம்ம் அசத்தல்ஸ்!!


    நன்றி..!

    ReplyDelete
  29. FOOD said... [Reply to comment]

    நல்லதொரு தரமான விமரிசனம் படித்த திருப்தி


    நன்றி..!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!