11 February, 2011

ஏ.. மனிதா இன்னுமா இருக்கிறாய் நீ...


நான் எந்த ஜாதி என்று
என் பக்கத்து வீட்டு க்காரர்
தெரிந்துக் கொண்டார்...

துவரை இருந்த விசாரிப்புகள் 
தற்போது இல்லை...

ருவருக்கும்மான பண்டமாற்று முறை 
முடிவுக்கு வந்து விட்டது..

வர் வீட்டுக்கு அடையாளம் சொல்ல 
என் வீட்டை முகவரியை பயன்படுத்துவதில்லை...

வர் மனைவிக்கு உத்தரவுகள் இல்லை 
என் மனைவியோடு பேச...

வரது பிள்ளைகளுக்கு 
வார்த்தையால் விளங்கு பூட்டி விட்டார் 
என் பிள்ளைகளோடு விளையாடக்கூடாது என்று...

 னக்காக சிறு புன்னகையைக்கூட
பூக்க மறுக்கிற அவரது உதடுகள்..
 

பார்ப்பது கூட பாவம் என்று
உயத்திக்கொண்டார் மதில்சுவரை..

டைசியாய் 
என்ன செய்யப் போகிறார்...!

ன்நிலத்திலும்
வேர் பரப்பி கிளை பரப்பி 
வளர்ந்திருக்கும்
அவருடைய  மாமரத்தை...


உங்கள் உணர்வுகளை வாக்காகவோ.. வார்த்தையாகவோ.. 

பதிந்து விட்டுச்செல்லுங்கள்... உயிர் பெறும் இந்த கவிதை...

44 comments:

  1. வடை வாங்க வந்துட்டோம்ல....

    ReplyDelete
  2. போடு Tamilmanam - ல் முதல் ஓட்டு...

    ReplyDelete
  3. இந்த மாமரத்தை என்ன பன்னலாம்னு யோசிக்கிங்களா?

    ReplyDelete
  4. கவிதை அருமை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. அப்பா 4 ஓட்டும் போட்டாச்சு.. ருபாய் 4000 பார்சல்...

    ReplyDelete
  6. Tamilmanam - ல் ஓட்டு போடுங்க தலைவரே..

    ReplyDelete
  7. என்நிலத்திலும்
    வேர் பரப்பி கிளை பரப்பி
    வளர்ந்திருக்கும்
    அவருடைய மாமரத்தை...


    சூப்பர்! ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க! கடைசி வரிகள் சரியான நெத்தியடி!!

    ReplyDelete
  8. சாதியின் கொடுமையை சொல்வதற்கு இந்த கவிதையை பயன் படுத்தி இருக்கிறீர்கள். சென்னையில் நான் வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரர் ஒரு கிறித்துவர். ஆனால் எனக்கு தவறாமல் அவர்கள் வீட்டில் இருந்து பாதார்த்தாங்கள் எல்லாம் கொடுப்பார். நான்கு பழகுவார். இசுலாமிய நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் சர்வ சாதாரணமாக சென்று வந்திருக்கிறேன். அதே போல வேற்று சாதி நண்பர்கள் பலரும் வீட்டின் அருகில் இருந்திருக்கிறார்கள். சாதிவெறி அதை வைத்து வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளிடம் மட்டுமே இருக்கிறது. நீங்கள் சொல்வது போல சாதியை கேட்ட மாத்திரத்தில் எல்லாவற்றையும் கட் செய்யும் அளவுக்கு சாதிவெறி பிடித்த பொதுசனம் கம்மிதான். நன்றி...

    ReplyDelete
  9. அருமையான கவிதை. மரங்களுக்கு உள்ள சுதந்திரம் கூட மனிதர்களுக்கு இல்லியா?

    ReplyDelete
  10. என்றுதான் ஒழியுமோ?

    ReplyDelete
  11. //என்நிலத்திலும்
    வேர் பரப்பி கிளை பரப்பி
    வளர்ந்திருக்கும்
    அவருடைய மாமரத்தை...//
    மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்........
    இந்த நாயி என்னதான் மாற்றினாலும் இயற்கைய [மாமரம்] மாற்ற முடியலையே.....!!

    ReplyDelete
  12. இது போன்ற மனம் படைத்த ஆட்கள்தான் தீண்டதகாதவர்கள்

    ReplyDelete
  13. திருந்தட்டும் அந்த மாதிரியான சில ஜென்மங்கள்...

    ReplyDelete
  14. கவிதை நல்லா இருக்குங்க.... வழக்கமான கவிதை மாதிரி தான் இருந்தது ஆரம்பத்தில்.... முடிவு வித்தியாசப்பட்டு அசத்தி விட்டது.

    ReplyDelete
  15. //akthistudycentre-கருன் said... [Reply to comment]

    வடை வாங்க வந்துட்டோம்ல....
    /////

    முதலில் வ ந்து ஆதரவு அளித்த கவிதையை பாராட்டிய கருண் அவர்களுக்கு நன்றி...

    ReplyDelete
  16. //////பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    கவிதை அருமை..
    வாழ்த்துக்கள்..
    /////////
    பாடுட் ரசிகனுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  17. ///////மாத்தி யோசி said... [Reply to comment]

    என்நிலத்திலும்
    வேர் பரப்பி கிளை பரப்பி
    வளர்ந்திருக்கும்
    அவருடைய மாமரத்தை...


    சூப்பர்! ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க! கடைசி வரிகள் சரியான நெத்தியடி!!
    ////////
    கவிதையை பாராட்டிய தங்களுக்கு என்னுடைய நன்றிகள்..

    ReplyDelete
  18. ///பாலா said... [Reply to comment]

    சாதியின் கொடுமையை சொல்வதற்கு இந்த கவிதையை பயன் படுத்தி இருக்கிறீர்கள். சென்னையில் நான் வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரர் ஒரு கிறித்துவர். ஆனால் எனக்கு தவறாமல் அவர்கள் வீட்டில் இருந்து பாதார்த்தாங்கள் எல்லாம் கொடுப்பார். நான்கு பழகுவார். இசுலாமிய நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் சர்வ சாதாரணமாக சென்று வந்திருக்கிறேன். அதே போல வேற்று சாதி நண்பர்கள் பலரும் வீட்டின் அருகில் இருந்திருக்கிறார்கள். சாதிவெறி அதை வைத்து வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளிடம் மட்டுமே இருக்கிறது. நீங்கள் சொல்வது போல சாதியை கேட்ட மாத்திரத்தில் எல்லாவற்றையும் கட் செய்யும் அளவுக்கு சாதிவெறி பிடித்த பொதுசனம் கம்மிதான். நன்றி...
    ///
    இன்னும் ஜாதி தீ முடியாமல் அங்கங்க முகம் காடடிக் கொண்டுதான் இருக்கிறது..
    அவற்றின் வெளிப்பாடுதான் இந்தக் கவிதை...

    ReplyDelete
  19. Lakshmi said... [Reply to comment]

    அருமையான கவிதை. மரங்களுக்கு உள்ள சுதந்திரம் கூட மனிதர்களுக்கு இல்லியா?
    ///
    வருமைர் புரிந்த அம்மையாருக்கு நன்றிகள்..

    ReplyDelete
  20. /////Chitra said... [Reply to comment]

    என்றுதான் ஒழியுமோ?
    //////

    நன்றி தோழி...
    விடியாத இரவென்று ஒரு போதும் இல்லை...

    ReplyDelete
  21. ஜெ.ஜெ said... [Reply to comment]

    கவிதை அருமை


    நன்றி தோழா..

    ReplyDelete
  22. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //என்நிலத்திலும்
    வேர் பரப்பி கிளை பரப்பி
    வளர்ந்திருக்கும்
    அவருடைய மாமரத்தை...//
    மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்........
    இந்த நாயி என்னதான் மாற்றினாலும் இயற்கைய [மாமரம்] மாற்ற முடியலையே.....!!


    வந்துட்டையா மக்கா...

    ReplyDelete
  23. ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    இது போன்ற மனம் படைத்த ஆட்கள்தான் தீண்டதகாதவர்கள்



    உண்மைதான்...

    ReplyDelete
  24. பாரத்... பாரதி... said... [Reply to comment]

    திருந்தட்டும் அந்த மாதிரியான சில ஜென்மங்கள்...
    February 11, 2011 12:54 PM
    பாரத்... பாரதி... said... [Reply to comment]

    கவிதை நல்லா இருக்குங்க.... வழக்கமான கவிதை மாதிரி தான் இருந்தது ஆரம்பத்தில்.... முடிவு வித்தியாசப்பட்டு அசத்தி விட்டது.

    நன்றி.. பாரத்..

    ReplyDelete
  25. nice

    am also wrote like that
    but not about cast..

    ReplyDelete
  26. அருமையான கவிதை........... நாம் என்று தான் மாறுவோமோ தெரிய வில்லை

    ReplyDelete
  27. பார்ப்பது கூட பவாம் என்று
    உயத்திக்கொண்டார் மதில்சுவரை..
    //
    பாவம் என்பது பாவாம் என்று உள்ளது..சிறிய தவறு பாஸ்...
    மற்றம்படி அனைத்தும் அருமை

    ReplyDelete
  28. என்நிலத்திலும்
    வேர் பரப்பி கிளை பரப்பி
    வளர்ந்திருக்கும்
    அவருடைய மாமரத்தை...
    அருமையான கவிதை....

    ReplyDelete
  29. மரத்தை அல்ல மர மனதை
    வெட்டுங்கள்.

    ReplyDelete
  30. நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் நண்பா!

    ReplyDelete
  31. என்னாச்சு சவுந்தர் மக்கா, உங்களுக்கு வந்துருக்குற கமெண்ட்ஸ்ல நாலாவது கமெண்ட்ஸ் என்னுதுதான். ஏதோ நான் உங்க பக்கமே வராதது மாதிரி என் பிளாக்ல கமெண்ட்ஸ் போட்ருக்கீங்களே நண்பா.....???!!!
    """அதானே நான் படிச்சிட்டு கமெண்ட்ஸ் போடாம திரும்பி வந்ததா சரித்திரம் பூகோளம் இல்லையே.....""

    ReplyDelete
  32. கவிதை மிக அழகு..... மற்று கருத்தோட்டம். பாராட்டுக்கள்.

    கவிக்கோ கூட இதுபோல் எழுதியுள்ளதாய் நினைவு.

    ReplyDelete
  33. கவிதை மிக அழகு..... மற்றும் கருத்தோட்டம். பாராட்டுக்கள்.

    கவிக்கோ கூட இதுபோல் எழுதியுள்ளதாய் நினைவு

    ReplyDelete
  34. /////////சி.கருணாகரசு said... [Reply to comment]

    கவிதை மிக அழகு..... மற்றும் கருத்தோட்டம். பாராட்டுக்கள்.

    கவிக்கோ கூட இதுபோல் எழுதியுள்ளதாய் நினைவு
    ////

    தஙகள் பாராட்டுக்கு நன்றி.. நன்பரே..
    கவிக்கோ அளவுக்கு சந்திக்கும் திறன் என்க்கில்லை..

    ReplyDelete
  35. tamilmanam -ல் கடைசி ஓட்டும் போட்டுட்டோமில்ல.

    ReplyDelete
  36. tamil 10 மொத்த ஓட்டும் போடுங்க..

    ReplyDelete
  37. இந்த கவிதைக்கு வாக்களித்து பின்னுட்டம் அளித்து இந்த கவிதையை பிரபலப்படுத்திய அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  38. அருமையான கவிதை ..

    ReplyDelete
  39. சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியும்
    சாதி இரண்டொழிய வேறில்லை என்ற் அவ்வையும்
    மீண்டும் பிறக்க வேண்டும்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!