30 November, 2011
29 November, 2011
அதெப்படி... ? பெண்களுக்கு இந்த இரண்டு மட்டும் பிடித்திருக்கிறது...?
நான் சொல்லும்
உண்மையை விட
“பொய்” க்குத்தான் மயங்கி நிற்கிறாய்...!
உண்மையை விட
“பொய்” க்குத்தான் மயங்கி நிற்கிறாய்...!
பகலை விட
இருளில்தான் உன்
வெட்கங்களை கழட்டி வைக்கிறாய்...!
அது எப்படி...!
உனக்கு பொய்யும் இருட்டும் மட்டுமே
பிடித்திருக்கிறது...
சரியென்று சொல்
என் அன்பே...
உனக்காக
பொய்யை மட்டுமே வைத்து
கவிதை எழுதுகிறேன்....
பொய்யை மட்டுமே வைத்து
கவிதை எழுதுகிறேன்....
பகலில் கூட
தங்கள் வருகைக்காக பெருமையடைகிறது கவிதை வீதி...
28 November, 2011
26 November, 2011
விஜய் -யின் நண்பன் ட்ரெயிலர்...
ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் வரவிருக்கும் படம். ஷங்கரின் கூட்டணி எப்போதும் வெற்றிப்பெறும் அந்த வரிசையில் விஜய்யும் கூட்டுச்சேரும் போது இந்த கூட்டணிப்பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை.
வரும் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவிருக்கும் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய்-யின் நண்பன் ட்ரெயிலர்
25 November, 2011
என்ன கொடுமை இது... கொலைவெறியுடன் ஒரு பதிவு...
ரேகை சாஸ்திரி : ரொம்ப படிச்ச, மரியாதையான, அடங்கி நடப்பவளான பெண் தான் உனக்கு மனைவியா வருவா சார்..!
மற்றவர் : ஐயையோ..! அப்படியானால் இப்போதிருக்கிற மனைவிளை என்ன செய்வது..?
பிச்சைக்காரன் 1 : டாக்டர், இனிமேல் என்னை ராத்திரியிலே கண்விழிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்..!
பிச்சைக்காரன் 2 : அதுக்காகவா, கவலைப்படறியா... என்ன...!
பிச்சைக்காரன் 1 : ஆமாம்!. எனக்குச் சாப்பாட்டுக்குப் பிரச்சினையில்லே, ஆனா “ராப்பிச்சை”ன்கிற பட்டம் பறிபோயிடுமே, அதான் எனக்கு ரொம்ப கவலையாய் இருக்கு...!
நபர் 1 : கிளி ஜோசியம் பார்க்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாயே!.. வாழ்க்கை எப்படி இருக்கு..?
நபர் 2 : அதையேன் கேட்கிறே, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி என்னை ரொம்பவும் வெறுப்பேத்துகிறாள்..!
நபர் 1 : ???????????!!!!!!!!!!!!
ரமேஷ் : உங்களுக்கு வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்கிற பழக்கமே இல்லையாமே...! உண்மையா?
சுரேஷ் : நீங்க மத்தவங்க சொல்றதையெல்லாம் நம்பாதீங்க. நீங்க இப்ப எனக்கு 1000 ரூபாய் கடன் கொடுங்க அப்புறம் பாருங்க, என்னோட நாணயத்தை..!
ரமேஷ் : ...!!!!!!!????????
மனைவி : என்னங்க, நம்ம பையன் புல்லரிக்கிற மாதிரி ஒரு காரியம் பண்ணிட்டு வந்திருக்கான்...!
கணவன் : வெரிகுட்..! என் பையனாச்சே, அப்படி என்ன காரியம் பண்ணியிருக்கான்..?
மனைவி : புல் தரையிலே விழுந்து புரண்டுட்டு வந்திருக்கான், இப்போ அவனோ் உடம்பு முழுக்க அரிக்குதாம்.
வந்தவர் : டாக்டர், போன மாதம் நீங்க எனக்கு ஆபரேஷன் செய்ததுக்கப்புறம் என்னோட வாழ்க்கையே மாறிப்பேச்சு தெரியுமா..!
டாக்டர் : வெரிகுட்..! என்னோட திறமை அப்படி..!
வந்தவர் : மண்ணாங்கட்டி, ஆபரேஷன் செய்து என்னை சாடிச்சது ஞாபகம் இல்லியா..? இப்ப நான் ஆவியா வந்திருக்கேன்..!
ஒருத்தி : என்னைப் பெண்பார்க்க வந்தவர்களுக்கு நானே அல்வாவும், கேசரியும் செய்து வெச்சது ரொம்பவும், நல்லதாகப் போச்சுடி..!
மற்றவள் : ஏனடி, அப்படிச் சொல்றே..!
ஒருத்தி : கல்யாணத்துக்கப்புறம் நான் சமைக்க முயற்சி பண்ணக் கூடாதுன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்கிட்டே சத்தியம் வாங்கிட்டாங்..!
ஏன் இந்த கொலைவெறி என்று
மனோ கோவப்படுற மாதிரி தெரியுது...
கோவம் வேண்டாம்... கூல்...
24 November, 2011
இவைகளைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்...
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை கலைநயத்ததோடு வடிவமைத்து கொடுத்திருக்கிறார் கலைநயமிக்க ஒருவர்.
இவைகளை பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும், பயமுறுத்துவது போலவும் இருக்கிறது.
இந்தப்படங்களை எனக்கு மெயிலில் அனுப்பி உதவிய
நண்பருக்கு மிக்க நன்றி...
தங்கள் வருகைக்கும் நன்றி.
23 November, 2011
விஜயகாந்த் உண்ணாவிரதத்தின் உண்மையான பின்னணி...
விஜயகாந்தின் தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த வெற்றிவாகை சூடி, பின் உள்ளாட்சி தேர்தலில் அந்தக் கூட்டணியிலிருந்து பிரிந்து முதல்முறையாக பெரும் போராட்டம் ஒன்றை நாளை நடத்துகிறது.
பால் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை தேமுதிகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். அந்த செய்தியை மைப்படுத்திய ஒரு நகைச்சுவை உரையாடல்.
பிரேமலதா : ஏங்க எழுந்திருங்க...
விஜயகாந்த் : என்னம்மா..! விடும்மா இப்பத்தானே மணி 10 ஆகுது.
பிரேமலதா : நைட்டுல டைட்டா சாரி லேட்டா படுத்தா இப்படிதாங்க... எந்திரிங்க சட்டசபைக்கு போகனும்...
விஜயகாந்த் : விடும்மா அது பெரிய மேட்ரே இல்லை.. நாளைக்கு பாத்துக்கலாம்
பிரேமலதா : ஏங்க பிரஸ்-காரங்க கேட்டா என்ன சொல்லுவீங்க...
விஜயகாந்த் : அதுக்கும் ஐடியா இருக்கும்மா.. ”ஐயாம் சப்பரீங் பிரம் பீவர்” ...ம்... அப்படின்னு சொல்லிடலாம்.
பிரேமலதா : ஏங்க நீங்க ஒரு மாநிலத்தின் எதிர்கட்சித்தலைவர். அதை மறந்துட்டு இப்படியிருக்கீங்க...
பாருங்க நைட்டோட நைட்டா பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம், அத்தனையும் ஏத்திபுட்டாங்க நீங்க அதுக்கு ஏதாவது அறிக்கை விடுங்க..
விஜயகாந்த் : பொரும்மா.. ஏன் அவசறபடுற... மத்த தலைவரெல்லாம் அறிக்கை விடுவாங்கல்ல அதை எல்லாத்தையும் சேர்த்து பெரிய அறிக்கையா நம்ம கேப்டன் டீவில வாசிச்சிட சொல்லிடலாம். அப்பத்தான் நான் கரைட்டா பேசுரேனா என்ற டவுட்டு எனக்கு வராது.
பிரேமலதா : எக்கேடாவது கெட்டுப்போகட்டும். அதுசரி இந்த விலை உயர்வை கண்டித்து வர்ற 1-ந் தேதி திமுக பார்ட்டி போரட்டங்க அறிவிச்சிருக்கு. நீங்க ஏதாவது போராட்டம் செஞ்சி மக்கள் மத்தியில நல்ல பேரு எடுங்க.
விஜயகாந்த் : அப்படியா சங்கதி.. பரவாயில்லயே எல்லா விஷயமும் தெரிஞ்சி வச்சியிருக்கே. அப்படின்னா நாம உண்ணாவிரதம் ஆரம்பிச்சிடுவோம்.
சரி... நான் எப்போதும் வியாழக்கிழமை ஒருபொழுது இருக்கேன் இல்ல. அந்தநாள்ளே உண்ணாவிரதத்தை வச்சிக்கலாம்.
அப்ப காலையில் நல்ல ஒரு கட்டுகட்டிட்டு கொஞ்சம் நேரம் அப்படியே இருந்துபுட்டு சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் வந்திடுறேன். எப்படி என்னுடைய அரசியல் ராஜதந்திரம்.
பிரேமலதா : இப்ப தெரியாதுங்க.. அடுத்த முறை ஓட்டுகேட்க போகும்போதுதான் தெரியும் உங்க ராஜதந்திரம்.
விஜயகாந்த் : விடுமா.. நாம என்ன சொன்னாலும் நம்ம புரட்சிதலைவி கேட்டுக்கமாட்டாங்க. இந்த 5 ஆண்டுக்கு அவங்க வச்சதுதான் சட்டம், நமக்கு வந்து சேர வேண்டியது எல்லாம் வந்தாச்சியில்ல. அப்புறம் நமக்கு என்ன கவலை. மக்களை நம்பவைக்கிறதுக்கு இப்படி ஏதாவது செய்யணும்மில்ல.
சரி.. சரி.. நாளைக்கு உண்ணாவிரதத்துக்கு போறேன். இன்னிக்கு நல்ல ஆட்டுக்கால் பாயாவேட டிபன் ரெடிப்பண்ணு... நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வறேன்.
அம்புட்டுதாங்க....
நான் ஒத்துக்கொள்கிறேன்.. என் கவிதைகள் அனைத்தும் இங்கிருந்தே எடுக்கப்படுகிறது..!
வாடிப்போன பூக்களை
அவள் கூந்தலிலிருந்து களையும் போது
அறுந்து போகும் அந்த ஒற்றை முடி...!
அவள் சாப்பிடும்போது
சிதறி கீழே விழும்
சில சோற்றுப் பருக்கைகள்...!
அவள் நடந்துபோக
கூந்தலில் இருந்து உதிரும்
ரோஜா இதழ்கள்...!
அவள் பேசும் போது
ஒட்டித்திறக்கும்
அந்த பொன்னிதழ்கள்...!
அவளின் ஸ்பரிசத்தை
தடவிப்பார்க்கும் அந்த கடைசி
மழைத் துளிகள்...!
அவளின் கால்கள் மோதி
அவிழ்ந்து கிடக்கும்
அந்த கொலுசு சலங்கைகள்...!
இவற்றையெல்லாம் விட
அவள் நடக்கும்போது
வீதிகளில் படியும் அழகிய
காலடித்தடங்கள்...!
இவையெல்லாம்
அவள் எனக்காக விட்டுச்செல்லும்
புதுக்கவிதைகள்...!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!
22 November, 2011
குறைந்தப்பட்ச அரசியல் இலட்சணம் கூட விஜயகாந்திடம் இல்லையா?
ஒரு குறிப்பிட்ட அமைச்சரைக் கூப்பிட்டு அச்சமயம் அங்கு அழைக்கப்பட்டிருந்த தொழில் நிபுணர்களிடம் தொழில் நுணுக்கம் பற்றிய சில விவரங்களை எடுத்துச் சொல்லச் சொன்னார் சர்ச்சில்.
அந்த அமைச்சரும் வழவழ-கொழ கொழவென்று தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். சர்ச்சிலுக்கு அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் பொறுமையாக கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.
அமைச்சர் பேச்சை முடித்தவுடனே சர்ச்சில் அவரைப் பார்த்து அரசியலின் அடிப்படை விதியை நீங்கள் நன்றாகவே அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
அமைச்சர், சர்ச்சில் என்ன சொல்கிறார் என்று புரியாமல் விழித்தார்.
நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? என்று கேட்டார் சர்ச்சில்.
புரிய வில்லை என்றார் அமைச்சர்..
நீங்கள் விளக்கவந்த விஷயம் உங்களுக்கே புரியாவிட்டாலும், எவ்வளவு குழப்பமாக அதை எடுத்துக் சொல்ல முடியுமோ அப்படி எடுத்துச் சொல்வது தான் ஓர் அரசியல்வாதியின் இலட்சணம் என்று சொன்னார் சர்ச்சில்.
விஜயகாந்த் அவர்களுக்கு முழுமையான அரசியல் தெரியாது என்று தமிழகமக்களும் நன்று அறிவார். ஆனால் குறைந்தபட்ச தகுதியான, ஏதாவது அறிக்கைகள், தேரியாவிட்டாலும் பேசிக்குழப்பக்கூடிய வேலையாவது செய்யலாம். அதற்குகூட வாய்திறக்காமல் மௌனம் காத்துக்கொண்டு அம்மாவின் உண்மை விசுவாசி என்று நிறுபித்துவிட்டார்.
தற்போதுதான் ஞானம் வந்ததுபோல் பஸ் கட்டணம் உயர்வு, பால்விலை உயர்வு, மற்றும் மின்சார கட்டண உயர்வுக்கு நான் உண்ணாவிரதம் இருக்கபோகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.
நேற்று ஒரு திருமண விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விஜயகாந்திடம், ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்று கேட்டதற்க்கு உடல்நிலை சரியில்லைஎன்று பதில் அளித்துள்ளார். அவருக்கு எதிர்கட்சி தலைவர் என்பதை அடிக்கடி ஞாபகம் படுத்த வேண்டும் போல.
இவரின் உண்ணாவிரதம் தமிழகத்தில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
21 November, 2011
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...?
பூக்களை அறுப்பது
பாவம் என்று சொல்லிவிட்டு
முழம் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்...!
இது எப்படி நியாயம்...?
முழம் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்...!
இது எப்படி நியாயம்...?
கோயிலுக்கு செல்கையில்
சப்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு
காலில் கொலுசு அணிந்து செல்கிறாய்...!
இது எப்படி நியாயம்...?
கடவுள் நம்பிக்கை
அதிகம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு
கருப்பு தாவணி அணிகிறாய்...!
இது எப்படி நியாயம்..?
இரவு வான்நிலவை
அதிகம் நேசிப்பேன் என்று சொல்லிவிட்டு
வீட்டுக்குள்ளே முடங்கிவிடுகிறாய்..!
இது எப்படி நியாயம்..?
கவிதை எனக்கு பிடிக்கும் என்று
கண்சிமிட்டி சொல்லிவிட்டு
என் கடிதத்தை கிழித்துவிட்டாயே..!
இது எப்படி நியாயம்...?
காதல் தவறு என்று
எனக்கு வன்மையாய் சொல்லிவிட்டு
கண்களில் காதல் பாடம் நடத்துகிறாயே..!
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்..?
படங்கள் : நண்பர் இளையராஜாவின் ஓவியங்கள்
வருகைப்புரிந்த
அனைவருக்கும் என் நன்றிகள்...!
17 November, 2011
புரட்சிக்காரனின் போலிமுகம்...... ஊருக்கு மட்டும்தான் உபதேசமா...?..
நாளுக்குநாள் புதுப்புது வலைப்பூக்கள் இங்கே பூத்துக்கொண்டிருக்கிறது. இதி்ல் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசமானதாகவும், அந்த வித்தியாசத்தில் நிலைத்திருக்க தங்கள் பாணியில் பல்வேறு பதிவுகள் இந்த வலைப்பூவில் பூத்துக்கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில்.... ஒரு பதிவர் சிலருடைய குற்றங்கள் கண்டுபிடித்து அதில் பெரிய வல்லவராகிவிடலாம் என்று வந்திருக்கிறார். அவர் வேறுயாருமில்லை... புரட்சிக்காரன்தான். குறைச்சொல்லும் இந்த பதிவருக்கு புரட்சிக்காரன் என்று பெயர்.
அவர் என்பதிவில் இருக்கும் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிட்டிருந்தால் இந்த பதிவு தேவைப்பட்டிருக்காது. (என்னுடைய ஒரு வருட பதிவுகளில் எதற்கும் அவர் வந்ததில்லை) அதைவிடுத்து அவருடைய வலைப்பூவில் தேவையில்லாமல் என்னை மிகவும் மோசமாக விமர்சித்து ”ஐயோ.. நான் 'இதுல' பெயிலாயிட்டேன்” ”கேவலமான வாத்தியாரும்.....”அது”வும்......” என்ற இரண்டு பதிவுகளிட்டு என்னை வம்புக்கு இழுத்ததால் இது அவசியமாகிறது.
முதலில் தன்னிடம் அழுக்குகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு மற்றவர்களை குறைசொல்ல வேண்டும். நாம்தான் வல்லவர்கள் என்று களத்தில் குதித்தவர் மண்ணைக்கவ்விய வரலாறு ஒன்றல்ல இரண்டல்ல இந்த உலகில்.
எதிலும் யாரும் வல்லவர் அல்ல என்பதை எடுத்துக்காட்ட அவருடைய வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்ட சில எழுத்துப்பிழைகள்.
//////// எனக்கு பிடல் காஸ்ட்ரோவை பிடிக்கும்....அதுக்கு காரரணம் கம்யூனிசமில்லை....அமெரிக்காகாரனுங்க கண்ணுல விரல விட்டு ஆட்டுவதால்... ///////////////
படத்தில் காட்டியுள்ள பிழைகளை கீழே சிகப்பு எழுத்துகளில்..
//////////சிறந்த தமிழ்மன மகுடம் பெருவோர் விருது /////////
/////////////சிறந்த அடிக்கடி பிளாக் தொலைப்பவர் விருது
நல்லனேரம் சதீஸ் குமார்////////
நல்லனேரம் சதீஸ் குமார்////////
/////////சிறந்த தனிமனித தாக்குதல் விருது////////
///////// சிறந்த கானமல் போன பதிவர் விருது //////
இவை அனைத்து ஒரே பதிவில் உள்ள பிழைகள்
////////////// மன்னிக்கவும் நன்பரே...ஒரு ஆதங்கதில் எழுதிய பதிவு.வார்த்தைகலை திருத்தி விடுவொம //////////////
இது அவரால் இடப்பட்ட பின்னூட்டம்.
இவைகள் அனைத்தும் அவருடைய ஒருசில பதிவிலிருந்து எடுக்கப்பட்ட எழுத்துப்பிழைகள். இதை ஏன் சுட்டிக்காட்டுகிறேன் என்றால் எழுத்துப்பிழை என்பது யாராலும் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை காட்டவே.
இது போகட்டும்.. இதுவரை ஒரு முறைக்கூட என் கவிதைவீதிப்பக்கம் வராமல் என்னவோ நான் மிகப்பெரிய குற்றவாளி என்ற பெயரில் தொடர் பதிவுகளை பதிவிட்டுவருகிறார். அதற்கான விளக்கங்கள் நான் கொடுக்கவில்லையென்றால் நான் அவர் சாட்டும் குற்றத்திற்கு நான் பொறுப்பாகிவிடுவதுபோல் ஆகிவிடும்.
அந்தப்பதில் நான் கொடுத்த அத்தனை பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்காமல் அதிலுள்ள எழுத்துப்பிழைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அதனாலே அந்த கருத்துக்களை நீக்க வேண்டியதாயிற்று.
////////// நேரத்தை செலவு செய்து பதில் பின்னூட்டம் அளித்தால் அனைத்து பின்னூட்டங்களையும் அழித்து விட்டு புறமுதுகிட்டு ஓடிவிட்டார். ////////////
அப்படி ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை புரட்சிக்காரன். வார்த்தை சண்டையில் நீர் வல்லவராக இருக்கலாம் உண்மையில் உள்முகத்தைக் காட்டுங்கள் யார் வீரரென்று புரியும். முகவரிகள் மறைத்தப்பின் நான் கூட வீரன்மட்டுல்ல மாவீரன்தான்.
அன்புள்ள புரட்சிக்காரனுக்கு... கேவலமான வாத்தியாரும்.....”அது”வும்......
என்ற பதிவில் தங்களின் கீழ்த்தரமான கேள்விகளுக்கு என்பதில்.
/////////
அவருக்கு போட்டியா இந்த கவிதைத்தெரு வாத்தியும் கவிதைங்கற பேருல எழுதுவாரு பாருங்க...ஆத்தாடி நம்ம வாலி, வைரமுத்து எல்லாம் பிசசை வாங்கனும் அவருகிட்ட..//////////////
ஐயா... நான் வாலியோ வைரமுத்துவோ அல்ல. அந்த எண்ணமும் என்மனதில் வந்ததில்லை. நான் கிறுக்குவது குப்பையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை..? கருப்பாக இருக்கிறது என்பதற்காக என்பிள்ளையை வெறுக்கவா சொல்கிறீர்கள். வளைந்திருந்தாலும் அவைகள் எனக்கு இனிப்புள்ள கரும்புகள்தான்.
////////////// கவிதைதெருவுக்கு ஜிகினா வேலைப்பாடுகள்.///////////
கவிதைகளை அழகுப்படுத்த நான் எதையோ செய்துவிட்டுப்போகிறேன். வேண்டுமென்றால் வாருங்கள் தங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன். என் சொந்த செயல்களை விமர்சிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை.
//////////////என்று ஒன்றின்கீழ் ஒன்றாய் வார்த்தைகளை அடுக்கி, அந்த மொக்கைக்கு ஜிகினா வேலைப்பாடுகளெல்லாம் கொடுத்து, கலர் கலரா வண்ணம் பூசி கவிதைன்னு சந்தைப்படுத்திவிடுவாரு. அவ்வளவு திறமை நம்ம கவிதைதெரு வாத்திக்கு../////////////
உண்மையே..! அதில் தங்களுக்கு என்ன நட்டம்... சந்தைப்படுத்தப்பட்ட என்கவிதை தோல்வி முகத்தோடு திரும்பினாலும் எனக்கு கவலையில்லை. அவைகளை ஆயுளுக்கும் தாய்பறவைப்போல் காக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. தங்களுக்கு மொக்கையாகத்தான் தெரியும். கவிதை ரசிக்க ஒரு ரசனை வேண்டும். அது தங்களிடம் இருக்கிறதா இல்லையா என்ற கவலை எனக்குதேவையில்லை.
/////////
என்பதற்காக அந்த 'அது' வார்த்தையை பயன்படுத்தி அதுவும் தாயே (ஆத்தா) நான் அதுல பாஸ் ஆயிட்டேன் என்று எழுதுவது ஒரு ஆசிரியருக்கு அழகா?//////////
// அதுல ///// என்பதற்கு தீய அர்த்தங்கள் தங்களுக்கு மட்டும்தான் வரும். மனசு சுத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு இது தவறான வார்த்தைதான். அப்படியிருக்க தாங்கள் அந்த வார்த்தையை தவிர்த்து தலைப்பிட்டிருக்கலாம்.
//////// இந்த அது இது போன்ற வார்த்தைகளை ரெண்டு வாத்திகளும்தான் அதிகம் பயன்படுத்தறாங்க.....//////////////
மீண்டும் கேட்கிறேன். அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை. அதிக ஹிட்ஸ்க்காக என்று குற்றம் சாட்டுகிறீர்கள். ஆமாம் மறுமடியும் சொல்லுங்கள் அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை. அதனால் தங்களுக்கு பாதிப்பு என்று சரியான காரணம் சொல்லுங்கள் நாங்கள் அதை தவிர்த்துவிடுகிறோம்.
/////////தயவு செய்து பிழை இன்றி எழுதுங்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் திருந்த மாட்டீர்களா? நான் அப்படித்தான் என்று சொல்வது உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம்///////////
எத்தனை முறை என்பதிவுகளை படித்துவிட்டு குறைசொன்னீர்கள். இதுவரை எந்த பதிவுக்கு வந்ததில்லை. நேற்றுதான் முதல் முதலாக வந்துள்ளீர்கள். மாதத்திற்கு ஒரு பதிவிடும் தங்களிடமே இத்தனை பிழைகள் என்றால், தினமும் பதிவிடுங்கள்.. அப்போது தெரியும் உங்களுடைய லட்சனம்.
//////அனுதாப ஓட்டு வாங்குவதை நிறுத்துங்கள்.////////
என் நியாயங்களை நாகரீகமாக சொன்னால் அது தங்களுக்கு அனுதாப ஓட்டுக்கேட்பதுபோல் இருக்கிறதா...? அனுதாப ஓட்டுவாங்கி நான் என்ன பிரதமர் பதிவிக்கா வரப்போகிறேன். கோவப்படமாமல் அமைதியான முறையில் நாகரீகமாக கருத்திடுவது தங்களுக்கு அனுதாப ஓட்டு வாங்குவதுபோல்தான் தெரிகிறதா.
ஒரு ஆசிரியர் இப்படி எழுத்துப்பிழையோடு எழுதலாமா என்று கேட்கலாம். ஆசிரியர்கள் ஒன்றும் கடவுள்கள் இல்லை குறையே இல்லாமல் இருக்க. தாங்கள் என்னிடம் அந்த ஒரு குறைமட்டும்தானே கண்டீர் பின் ஏன் இவ்வளவு கேவலமான பதிவுகளிட்டீர்.
சிறந்த பதிவுகளிட, புரட்சியான விஷயங்கள் சொல்ல, எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அடுத்தவரை குறைச்சொல்லி அதில் குளிர்காயும் பழக்கத்தை விடுங்கள் இதோடு.
அனைவருக்கும் ஒரு செய்தி. இந்த புரட்சிக்காரன் வேறு யாரும் இல்லை நம்போடு இருக்கும் ஒரு பிரபல பதிவர்தான். அவர் யாரென்று யோசித்ததின் விளைவாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
புரட்சிக்காரனின் உண்மை முகம் எது?
புரட்சிக்காரனின் கோவம் உண்மையில் என் எழுத்துப்பிழைகள் மீது மட்டும்தானா..?
என்மீது கோவப்பட்டு இரண்டு அவதூறு பதிவுகள் போட காரணம் என்ன?
எவ்வாறு என்மீது அவர் பார்வை திரும்பியது...?
தொடர் பதிவுகளிட்டு என்ன விமர்சிக்க காரணம் என்ன..?
இன்னும்... இவருக்கு துணை நிற்கும் பிரபல பிரச்சனைக்குரிய பிண்ணனியாளர் யார்?
போன்ற விஷயங்கள் அடுத்த பதிவில் அம்பலப்படுத்த போகிறேன்.....
அன்பார்ந்த பதிவுலகமே....
என் கவிதைகள் என் சூழ்நிலையை பிரிதிபலிக்ககூடியது. அவைகளில் கவித்துவம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. என்மனதில் தோன்றுவதை, நான் பார்ப்பதை, எனக்கு எது சரியென்று படுகிறதோ அதைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். என் படைப்புகள் ஒருசில எழுத்துப்பிழைகளை கொண்டுள்ளது என்பதற்காக அவைகள் தரம்தாழ்ந்து விடாது.
தவறான கருத்துகளாக இல்லாத பட்சத்தில், என்னையோ அல்லது என் கவிதைகளையோ விமர்சிக்கக் கூடிய உரிமை யாருக்கும் இல்லை. அப்படி விமர்சிக்கப்படும் போது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் கோழை அல்ல.
இவைகளை வாசிக்கும் தாங்கள் வாக்கிடவேண்டும் என்றோ, கருத்திடவேண்டும் என்றோ கட்டாயமில்லை.
எனக்கு கருத்திட்டு வாக்களித்தால் மட்டுமே மற்றவர் பதிவை வாசிக்க நான் வருவேன் என்றில்லை. எப்போதும் போல என்னுடைய வருகைகள் இருக்கும்.
இவ்வளவு நாகரீகமாக பதிவிட்டதைக்கூட சிலர் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டலாம். அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை நான்.....
வருத்தத்துடன்....
கவிதை வீதி சௌந்தர்...
இவ்வளவு நாகரீகமாக பதிவிட்டதைக்கூட சிலர் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டலாம். அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை நான்.....
வருத்தத்துடன்....
கவிதை வீதி சௌந்தர்...
தொடர்ந்து எனக்கு எப்போதும் ஆதரவளிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்...!