படத்தில் காட்டியுள்ள பிழைகளை கீழே சிகப்பு எழுத்துகளில்..
//////////சிறந்த தமிழ்மன மகுடம் பெருவோர் விருது /////////
/////////////சிறந்த அடிக்கடி பிளாக் தொலைப்பவர் விருது
நல்லனேரம் சதீஸ் குமார்////////
/////////சிறந்த தனிமனித தாக்குதல் விருது////////
///////// சிறந்த கானமல் போன பதிவர் விருது //////
இவை அனைத்து ஒரே பதிவில் உள்ள பிழைகள்
////////////// மன்னிக்கவும் நன்பரே...ஒரு ஆதங்கதில் எழுதிய பதிவு.வார்த்தைகலை திருத்தி விடுவொம //////////////
இது அவரால் இடப்பட்ட பின்னூட்டம்.
இவைகள் அனைத்தும் அவருடைய ஒருசில பதிவிலிருந்து எடுக்கப்பட்ட எழுத்துப்பிழைகள். இதை ஏன் சுட்டிக்காட்டுகிறேன் என்றால் எழுத்துப்பிழை என்பது யாராலும் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை காட்டவே.
இது போகட்டும்.. இதுவரை ஒரு முறைக்கூட என் கவிதைவீதிப்பக்கம் வராமல் என்னவோ நான் மிகப்பெரிய குற்றவாளி என்ற பெயரில் தொடர் பதிவுகளை பதிவிட்டுவருகிறார். அதற்கான விளக்கங்கள் நான் கொடுக்கவில்லையென்றால் நான் அவர் சாட்டும் குற்றத்திற்கு நான் பொறுப்பாகிவிடுவதுபோல் ஆகிவிடும்.
அந்தப்பதில் நான் கொடுத்த அத்தனை பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்காமல் அதிலுள்ள எழுத்துப்பிழைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அதனாலே அந்த கருத்துக்களை நீக்க வேண்டியதாயிற்று.
////////// நேரத்தை செலவு செய்து பதில் பின்னூட்டம் அளித்தால் அனைத்து பின்னூட்டங்களையும் அழித்து விட்டு புறமுதுகிட்டு ஓடிவிட்டார்.
////////////
அப்படி ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை புரட்சிக்காரன். வார்த்தை சண்டையில் நீர் வல்லவராக இருக்கலாம் உண்மையில் உள்முகத்தைக் காட்டுங்கள் யார் வீரரென்று புரியும். முகவரிகள் மறைத்தப்பின் நான் கூட வீரன்மட்டுல்ல மாவீரன்தான்.
அன்புள்ள புரட்சிக்காரனுக்கு... கேவலமான வாத்தியாரும்.....”அது”வும்......
என்ற பதிவில் தங்களின் கீழ்த்தரமான கேள்விகளுக்கு என்பதில்.
/////////
அவருக்கு போட்டியா இந்த கவிதைத்தெரு வாத்தியும் கவிதைங்கற பேருல எழுதுவாரு பாருங்க...ஆத்தாடி நம்ம வாலி, வைரமுத்து எல்லாம் பிசசை வாங்கனும் அவருகிட்ட..//////////////
ஐயா... நான் வாலியோ வைரமுத்துவோ அல்ல. அந்த எண்ணமும் என்மனதில் வந்ததில்லை. நான் கிறுக்குவது குப்பையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை..? கருப்பாக இருக்கிறது என்பதற்காக என்பிள்ளையை வெறுக்கவா சொல்கிறீர்கள். வளைந்திருந்தாலும் அவைகள் எனக்கு இனிப்புள்ள கரும்புகள்தான்.
////////////// கவிதைதெருவுக்கு ஜிகினா வேலைப்பாடுகள்.///////////
கவிதைகளை அழகுப்படுத்த நான் எதையோ செய்துவிட்டுப்போகிறேன். வேண்டுமென்றால் வாருங்கள் தங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன். என் சொந்த செயல்களை விமர்சிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை.
//////////////என்று ஒன்றின்கீழ் ஒன்றாய் வார்த்தைகளை அடுக்கி, அந்த மொக்கைக்கு ஜிகினா வேலைப்பாடுகளெல்லாம் கொடுத்து, கலர் கலரா வண்ணம் பூசி கவிதைன்னு சந்தைப்படுத்திவிடுவாரு. அவ்வளவு திறமை நம்ம கவிதைதெரு வாத்திக்கு../////////////
உண்மையே..! அதில் தங்களுக்கு என்ன நட்டம்... சந்தைப்படுத்தப்பட்ட என்கவிதை தோல்வி முகத்தோடு திரும்பினாலும் எனக்கு கவலையில்லை. அவைகளை ஆயுளுக்கும் தாய்பறவைப்போல் காக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. தங்களுக்கு மொக்கையாகத்தான் தெரியும். கவிதை ரசிக்க ஒரு ரசனை வேண்டும். அது தங்களிடம் இருக்கிறதா இல்லையா என்ற கவலை எனக்குதேவையில்லை.
/////////
என்பதற்காக அந்த 'அது' வார்த்தையை பயன்படுத்தி அதுவும் தாயே (ஆத்தா) நான் அதுல பாஸ் ஆயிட்டேன் என்று எழுதுவது ஒரு ஆசிரியருக்கு அழகா?//////////
// அதுல ///// என்பதற்கு தீய அர்த்தங்கள் தங்களுக்கு மட்டும்தான் வரும். மனசு சுத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு இது தவறான வார்த்தைதான். அப்படியிருக்க தாங்கள் அந்த வார்த்தையை தவிர்த்து தலைப்பிட்டிருக்கலாம்.
//////// இந்த அது இது போன்ற வார்த்தைகளை ரெண்டு வாத்திகளும்தான் அதிகம் பயன்படுத்தறாங்க.....//////////////
மீண்டும் கேட்கிறேன். அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை. அதிக ஹிட்ஸ்க்காக என்று குற்றம் சாட்டுகிறீர்கள். ஆமாம் மறுமடியும் சொல்லுங்கள் அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை. அதனால் தங்களுக்கு பாதிப்பு என்று சரியான காரணம் சொல்லுங்கள் நாங்கள் அதை தவிர்த்துவிடுகிறோம்.
/////////தயவு செய்து பிழை இன்றி எழுதுங்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் திருந்த மாட்டீர்களா? நான் அப்படித்தான் என்று சொல்வது உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம்///////////
எத்தனை முறை என்பதிவுகளை படித்துவிட்டு குறைசொன்னீர்கள். இதுவரை எந்த பதிவுக்கு வந்ததில்லை. நேற்றுதான் முதல் முதலாக வந்துள்ளீர்கள். மாதத்திற்கு ஒரு பதிவிடும் தங்களிடமே இத்தனை பிழைகள் என்றால், தினமும் பதிவிடுங்கள்.. அப்போது தெரியும் உங்களுடைய லட்சனம்.
//////அனுதாப ஓட்டு வாங்குவதை நிறுத்துங்கள்.////////
என் நியாயங்களை நாகரீகமாக சொன்னால் அது தங்களுக்கு அனுதாப ஓட்டுக்கேட்பதுபோல் இருக்கிறதா...? அனுதாப ஓட்டுவாங்கி நான் என்ன பிரதமர் பதிவிக்கா வரப்போகிறேன். கோவப்படமாமல் அமைதியான முறையில் நாகரீகமாக கருத்திடுவது தங்களுக்கு அனுதாப ஓட்டு வாங்குவதுபோல்தான் தெரிகிறதா.
ஒரு ஆசிரியர் இப்படி எழுத்துப்பிழையோடு எழுதலாமா என்று கேட்கலாம். ஆசிரியர்கள் ஒன்றும் கடவுள்கள் இல்லை குறையே இல்லாமல் இருக்க. தாங்கள் என்னிடம் அந்த ஒரு குறைமட்டும்தானே கண்டீர் பின் ஏன் இவ்வளவு கேவலமான பதிவுகளிட்டீர்.
சிறந்த பதிவுகளிட, புரட்சியான விஷயங்கள் சொல்ல, எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அடுத்தவரை குறைச்சொல்லி அதில் குளிர்காயும் பழக்கத்தை விடுங்கள் இதோடு.
அனைவருக்கும் ஒரு செய்தி. இந்த புரட்சிக்காரன் வேறு யாரும் இல்லை நம்போடு இருக்கும் ஒரு பிரபல பதிவர்தான். அவர் யாரென்று யோசித்ததின் விளைவாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
புரட்சிக்காரனின் உண்மை முகம் எது?
புரட்சிக்காரனின் கோவம் உண்மையில் என் எழுத்துப்பிழைகள் மீது மட்டும்தானா..?
என்மீது கோவப்பட்டு இரண்டு அவதூறு பதிவுகள் போட காரணம் என்ன?
எவ்வாறு என்மீது அவர் பார்வை திரும்பியது...?
தொடர் பதிவுகளிட்டு என்ன விமர்சிக்க காரணம் என்ன..?
இன்னும்... இவருக்கு துணை நிற்கும் பிரபல பிரச்சனைக்குரிய பிண்ணனியாளர் யார்?
போன்ற விஷயங்கள் அடுத்த பதிவில் அம்பலப்படுத்த போகிறேன்.....
அன்பார்ந்த பதிவுலகமே....
என் கவிதைகள் என் சூழ்நிலையை பிரிதிபலிக்ககூடியது. அவைகளில் கவித்துவம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. என்மனதில் தோன்றுவதை, நான் பார்ப்பதை, எனக்கு எது சரியென்று படுகிறதோ அதைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். என் படைப்புகள் ஒருசில எழுத்துப்பிழைகளை கொண்டுள்ளது என்பதற்காக அவைகள் தரம்தாழ்ந்து விடாது.
தவறான கருத்துகளாக இல்லாத பட்சத்தில், என்னையோ அல்லது என் கவிதைகளையோ விமர்சிக்கக் கூடிய உரிமை யாருக்கும் இல்லை. அப்படி விமர்சிக்கப்படும் போது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் கோழை அல்ல.
இவைகளை வாசிக்கும் தாங்கள் வாக்கிடவேண்டும் என்றோ, கருத்திடவேண்டும் என்றோ கட்டாயமில்லை.